Thursday, April 30, 2015

                           
மேதின வாழ்த்துக்கள் 


  தொழிலாளர் விண்ணப்பம்

காடு களைந்தோம் - நல்ல
கழனிதிருத்தியும் உழவுபுரிந்தும்
நாடுகள் செய்தோம் - அங்கு
நாற்றிசை வீதிகள் தோற்றவும் செய்தோம்
வீடுகள் கண்டோம் - அங்கு
வேண்டிய பண்டங்கள் ஈண்டிடச் செய்தோம்
பாடுகள் பட்டோம் - புவி
பதமுறவே நாங்கள் நிதமும் உழைத்தோம்.

மலையைப் பிளந்தோம் - புவி
வாழவென்றேகடல் ஆழமும் தூர்த்தோம்
அலைகடல்மீதில் - பல்
லாயிரங்கப்பல்கள் போய்வரச்செய்தோம்
பல தொல்லையுற்றோம் - யாம்
பாதாளம் சென்று பசும்பொன் எடுத்தோம்.
உலையில் இரும்பை - யாம்
உருக்கிப்பல் யந்திரம் பெருக்கியுந்தந்தோம்.

ஆடைகள் நெய்தோம் - பெரும்
ஆற்றைவளைத்து நெல்நாற்றுகள் நட்டோம்;
கூடைகலங்கள் - முதல்
கோபுரம் நற்சுதை வேலைகள் செய்தோம்
கோடையைக் காக்க - யாம்
குடையளித்தோம் நல்ல நடையன்கள் செய்தோம்
தேடிய பண்டம் - இந்தச்
செகத்தில் நிறைந்திட முகத்தெதிர் வைத்தோம்.

வாழ்வுக்கொவ்வாத - இந்த
வையத்தை இந்நிலை எய்தப்புரிந்தோம்,
ஆழ்கடல், காடு, - மலை
அத்தனையிற்பல சத்தை யெடுத்தோம்.
ஈழை, அசுத்தம் - குப்பை
இலை என்னவே எங்கள் தலையிற் சுமந்தோம்.
சூழக்கிடந்தோம் - புவித்
தொழிலாளராம் எங்கள் நிலைமையைக் கேளீர்!

கந்தையணிந்தோம்! - இரு
கையை விரித்தெங்கள் மெய்யினைப் போர்த்தோம்
மொந்தையிற் கூழைப் - பலர்
மொய்த்துக் குடித்துப் பசித்துக் கிடந்தோம்
சந்தையில் மாடாய் - யாம்
சந்ததம் தங்கிட வீடுமில்லாமல்
சிந்தை மெலிந்தோம் - எங்கள்
சேவைக்கெலாம்இது செய் நன்றிதானோ?

மதத்தின் தலைவர்! - இந்த
மண்ணை வளைத்துள்ள அண்ணாத்தைமாரே!
குதர்க்கம் விளைத்தே - பெருங்
கொள்ளையடித்திட்ட கோடீசுரர்காள்!
வதக்கிப் பிழிந்தே - சொத்தை
வடிகட்டி எம்மைத் துடிக்க விட்டீரே!
நிதியின் பெருக்கம் - விளை
நிலமுற்றும் உங்கள் வசம் பண்ணி விட்டீர்.

செப்புதல் கேட்பீர்! - இந்தச்
செகத்தொழிலாளர்கள் மிகப் பலர் ஆதலின்.
கப்பல்களாக - இனித்
தொழும்பர்களாக மதித்திடவேண்டாம்!
இப்பொழுதே நீர் - பொது
இன்பம் விளைந்திட உங்களின் சொத்தை
ஒப்படைப்பீரே - எங்கள்
உடலில் இரத்தம் கொதிப்பேறு முன்பே
ஒப்படைப்பீரே!
                                                                         ----பாரதிதாசன்

கடலூர் மாவட்டத்தில் 
இன்று பணி ஓய்வுபெறும் 
அதிகாரிகளுக்கும், சக தோழர்களுக்கும் அவர்களது ஓய்வுக்காலம் சிறக்க கடலூர் மாவட்ட சங்கத்தின் சார்பில் வாழ்த்துகிறோம்.
திருச்சி NFTE இயக்கத்தின் முன்னணித் 
தோழர்.மனோகரன் 
இன்று பணியிலிருந்து ஓய்வு பெறுகிறார். 
அத்தோழரின் ஓய்வுகாலம் சிறக்க வாழ்த்துகிறோம்   

இன்று பணி நிறைவு பெறும்
காரைக்குடி NFTE மாவட்டத்தலைவர், TMTCLU மாவட்டச்செயலர்
தோழர்.சி.முருகன்
அவர்களின்
பணி நிறைவுக்காலம் சிறக்க

வாழ்த்துகின்றோம்.Monday, April 27, 2015

பொய்புகாரை முறியடிப்போம்

BSNL காக்கும் அகில இந்திய அளவில் ஏப்ரல் 21,22 ஆகிய இரண்டு நாள் நடைபெற்ற வேலைநிறுத்தம் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் மிகப்பெரிய அளவில் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது. ஆனால் சென்னையில் இந்த வேலைநிறுத்தத்தை சீர்குலைக்கும் வகையில் அமுதவாணன் என்ற நபர் சிலருடன் சேர்ந்து முயற்சி செய்தனர். இதனை முறியடித்து சென்னையில் நமது தோழர்கள் வேலைநிறுத்தத்தை வெற்றிகரமாக்கியுள்ளனர்.
இதனை பொறுக்காத அமுதவாணன் காவல் துறையில் கூட்டமைப்பு தலைவர்கள் கன்வீனர் S.செல்லப்பா, தலைவர் தோழர்.R.பட்டாபி உள்ளிட்ட ஐந்து பேர் மீது பொய் புகார் கொடுத்து, அதன் மீது நமது தலைவர்களை காவல் துறை இன்று (27-04-2015) விசாரணை செய்துள்ளது . நமது தலைவர்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள  பொய் புகாரை முறியடிக்க நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து முறியடிப்போம்.

இச் செயலை கண்டித்து

தமிழ்நாடு முதன்மைப் பொது மேலாளர் அலுவலக வாயிலில்
சென்னை கிரீம்ஸ் ரோடு
29-04-2015 புதன்கிழமை காலை 9-00 மணியளவில்
உண்ணாவிரதம்
நடைபெறும் அனைவரும் கலந்து கொண்டு வெற்றிகரமாக்குவோம்.


NFTE கடலூர் மாவட்ட சங்கம்
Saturday, April 25, 2015

ஒப்பந்த ஊழியர் நிவாரண நிதி வழங்கல்


சிதம்பரம் மறைந்த ஒப்பந்த ஊழியர் தோழர்.R.பாலசுப்ரமணியன் அவர்களின் தாயார் பார்வதி அவர்களிடம் கடலூர் துணைப் பொதுமேலாளர் அவர்களின் அறையில் நடைபெற்ற நிகழ்வில் கடலூர் மாவட்ட அனைத்து சங்கங்களின் சார்பில் தோழர்கள், தோழியர்கள் நன்கொடையாக அளித்த தொகையும், சிதம்பரம் தோழர் G.பாண்டியன்.T.M அவர்கள் அளித்த தொகையும் சேர்த்து ரூ.3,50,000 /-க்கான வரைவோலையை ( ரூபாய் மூன்றரை லட்சம்) நிர்வாகத்தின் சார்பில் துணைப் பொதுமேலாளர் திருமதி.ஜெயந்தி அபர்ணா அவர்கள் அளித்தார். உடன் உதவிப் பொதுமேலாளர் (நிர்வாகம்) திரு.B.மகேஷ் அவர்கள் உடனிருந்தார். கடலூர் அனைத்து சங்கங்கள் சார்பாக நமது மாவட்டசெயலர் தோழர்.இரா.ஸ்ரீதர், BSNLEU மாவட்டசெயலர் தோழர்,K.T.சம்பந்தம், BSNLEU மாநில துணைத்தலைவர் தோழர் A.அண்ணாமலை, P.செந்தில்குமரன்-SNEA,K.தனசேகர்-AIBSNLEA, சிதம்பரம் NFTE கிளைச்செயலாளர் தோழர்.V.கிருஷ்ணமூர்த்தி, சிதம்பரம் தோழர்.G.பாண்டியன், G.பரமசிவம்,TMTCLU மாவட்டத் தலைவர் தோழர். M.S.குமார் ஆகியோர் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை செய்த திரு B.மகேஷ் அவர்களுக்கு அனைத்து சங்கங்களின் சார்பில் நன்றியினை உரித்தாக்குகின்றோம்.
வாழ்த்துக்கள்
கடலூர் திருப்பாப்புலியூரில் பணிபுரியும் தோழர். R.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் அவுட்டோர் பகுதியில் உள்ள லைன் பழுதுகளை அப்பகுதி வாடிக்கையாளர்கள் அழைத்தவுடன் நேரம் காலம் பாராமல் எவ்வித பிரதிபலனும் எதிர்பாராமல் உடனுக்குடன் சரிசெய்து கொடுத்து அப்பகுதி வாடிக்கையாளர்களின்   நன்மதிப்பை பெற்றுள்ளார்.  அத்தோழரை கௌரவிக்கும் விதமாக  அப்பகுதி வாடிக்கையாளர்கள் சார்பில்
கூத்தப்பாக்கம் ரோட்டரி கிளப்
 “சிறந்த பணியாளர் விருது”
கொடுத்து கௌரவித்துள்ளது. 
அத்தோழருக்கு நமது மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
அதற்கான விழாவில் மாவட்ட செயலர் தோழர் இரா,ஸ்ரீதர் அவர்களுடன் தோழர்கள் S.பன்னீர்செல்வம்,V.முத்துவேல்,T.V.பாலு, R.சுப்ரமணியன், M.S.குமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
 

Thursday, April 23, 2015

தமிழ் மாநில செயலர்  தோழர்.பட்டாபி அவர்களின் 
 வேலைநிறுத்தம் குறித்த சுற்றறிக்கை


சென்னை மாநில செயலர் தோழர்.மதிவாணன் அவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து சிதம்பரம் அதிகாரிகள்,ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில்
 கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
சென்னை மாநில செயலர் தோழர்.மதிவாணன் அவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து திண்டிவனம்  அதிகாரிகள்,ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில்
 கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. தலைமை தோழர் ஜெயசந்தர் , முன்னிலை தோழர் அரிகிருஷ்ணன் விளக்கவுரை தோழர் நடராஜன் நன்றியுரை தோழர் செல்வகுமார் 
சென்னை மாநில செயலர் தோழர்.மதிவாணன் அவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து நெய்வேலி  அதிகாரிகள்,ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில்
 கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.கண்டன ஆர்பாட்டம்
சென்னை மாநிலச்செயலர் தோழர்.C.K.மதிவாணன் அவர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து GM அலுவலக வளாகத்தில் GM அலுவலக கிளைசெயலர் தோழர்.P.ஜெயராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. வெளிப்பகுதி கிளைசெயலர் E.விநாயகமூர்த்தி கண்டன கோஷமிட, மாவட்டசெயலர் தோழர்.இரா.ஸ்ரீதர், சம்மேளனசெயலர் தோழர்.G.ஜெயராமன், தோழர். P.வெங்கடேசன்-AIBSLEA அகியோர் கண்டன உரையாற்றினர்.
 தோழர் S.குருபிரசாத் நன்றியுரையாற்றினார். ஆர்பாட்டத்தில்
TMTCLU மாநிலபொதுசெயலர் தோழர்.R.செல்வம்.
மாநில அமைப்புசெயலர் தோழர்.N.அன்பழகன்
ஆகியோர் கலந்துகொண்டனர். நூற்றுக்கும் மேற்பட்ட தோழர்களும் தோழியர்களும், ஒப்பந்த ஊழியர்களும் கலந்துகொண்டனர்.
Wednesday, April 22, 2015


BSNL அதிகாரிகள் ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் ஏப்ரல் 21,22 இரண்டு நாள் வேலைநிறுத்ததில் நமது மாவட்டத்தில் 95 சதவிகிதம் பேர் தங்களை ஈடுபடுத்திகொண்டுள்ளனர்.  வேலைநிறுத்ததில் கலந்து கொண்ட தோழர்களுக்கும், தோழியர்களுக்கும் கூட்டமைப்பு சார்பில் மாவட்ட சங்கத்தின் வாழ்த்துகளையும், நன்றிகளையும் தெரிவித்துகொள்கிறோம்.
கடலூர் GM அலுவலகத்தின் வாயிலை மறித்து 60-க்கும் மேற்பட்ட தோழர்கள் தோழர்.ஸ்ரீதர் தலைமையில் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாது இரண்டாம் நாள் வேலைநிறுத்தத்தில் கலந்து கொண்டனர்.22:04:2015 காலை சிதம்பரம் வண்டிகேட் தொலைபேசி நிலையத்தில் இரண்டாம் நாள் வேலை நிறுத்த ஆதரவு கண்டன ஆர்ப்பாட்டமும், சிதம்பரம் செல்வராஜ்-DE CDM அவர்களின் தலைமையில்  தோழமை சங்க தலைவர்களின் வாழ்த்துரை கூட்டமும் நடைபெற்றது. 60க்கும் மேற்ப்பட்ட தோழர்கள் கலந்துகொண்டனர்.