Thursday, February 23, 2017

TMTCLU மாவட்ட செயற்குழு

தோழர்களே!
      வருகின்ற 25.2.2017 சனிக்கிழமை மாலை3.00 மணியளவில் கடலூர் NFTE மாவட்ட சங்க அலுவலகத்தில் நமது TMTCLU மாவட்ட செயற்குழு மாவட்ட தலைவர் தோழர்.M.S.குமார் தலைமையில் நடைபெறும். மாவட்ட கிளைச்சங்க நிர்வாகிகள் அனைவரும் தவறாது கலந்திகொள்ள வேண்டுகிறேன்.
தோழமையுடன்
G.ரங்கராஜு
மாவட்ட செயலர்TMTCLU


Wednesday, February 22, 2017

AITUC கையெழுத்து இயக்கம்

தமிழகம் முழுவதும் பல்வேறு நிறுவனங்களில் நிரந்தர பணியாளர்களுக்கு இணையாக எவ்வித பணிப்பாதுகாப்பு இல்லாமல் குறைந்த உதியத்தில், அதிக கூடுதல் வேலை பளுவுடன் பணியாற்றிவரும்  ஒப்பந்த ஊழியர்களுக்கு நிரந்தர ஊழியர்களுக்கு இணையாக சம்பளம் வழங்கிட நடவடிக்கை எடுக்கக் கோரியும், அவர்களை நிரந்தரம் செய்ய வலியுறுத்தியும், தமிழக முதலமைச்சருக்கு தமிழக AITUC சார்பில் கோரிக்கை மனு அளித்திடவுள்ளது. அதற்கான கையெழுத்து இயக்கத்தை கடலூர் மாவட்டத்தில் சிறப்பாக நடத்திடவும், இதற்காக கடலூர் மாவட்டத்தில் கருத்தரங்கம் நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் கடலூர் NFTE மாவட்ட சங்க அலுவலகத்தில் 21.02.2017 மாலை 5.00மணியளவில் தோழர் S.தமிழ்மணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. கடலூர் மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலரும், மாநில நிர்வாகக்குழு உறுப்பினருமான தோழர் T.மணிவாசகம், கடலூர் AITUC மாவட்ட செயலர் தோழர் துரை, CPI கடலூர் நகரசெயலர் தோழர் குளோப், தோழர் மகாதேவன், AITUC கடலூர் மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் தோழர் V.இளங்கோவன், உள்ளாட்சித்துறை பணியாளர் சங்க தோழர் ஜோதி, மின்வாரிய பணியாளர் சங்கத் தோழர் இராஜேந்திரன், TMTCLU மாநில இணைப்பொதுசெயலர் தோழர் R.செல்வம், TMTCLU மாவட்ட செயலரும், AITUC கடலூர் மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினருமான   தோழர் G.ரெங்கராஜூ, TMTCLU மாவட்ட தலைவர் தோழர் MS.குமார் ஆகியோர் கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கினர். NFTE கடலூர் மாவட்ட செயலர் தோழர் இரா.ஸ்ரீதர் உட்பட மாவட்ட, கிளைத் தோழர்கள் கலந்துகொண்டனர்.  
  

Tuesday, February 21, 2017

பணிக்குழுக்கூட்டம்(WORKS COMMITTEE)

தோழர்களின் கவனத்திற்கு
வருகின்ற 27.2.2017 திங்கள்கிழமை மாவட்ட பணிக்குழுக்கூட்டம்(WORKS COMMITTEE) நடைபெறவுள்ளது.
பணிக்குழுக்கூட்ட உறுப்பினர்கள்:
1.    இரா.ஸ்ரீதர்- கடலூர்
2.    P.M.K.D.பகத்சிங்-பெண்ணாடம்
3.    K.ஜெய்சங்கர்-நெய்வேலி டவுன்ஷிப்
4.    S.மணி – கள்ளக்குறிச்சி
5.    ரவி – விழுப்புரம்
6.    S.சண்முகம் – விழுப்புரம்

கிளைச்செயலர்கள் தங்கள் பகுதியிலுள்ள இலாக்கா பணி சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை தொகுத்து உடனடியாக மாவட்ட செயலரிடம் தெரிவிக்கவும். 
  AITUC-TMTCLU  சிறப்பு கூட்டம்
தோழர்களே!..

இன்று AITUC-TMTCLU சார்பில் ஒப்பந்த ஊழியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என சிறப்பு கூட்டம் நமது மாவட்ட சங்க அலுவலக்த்தில் இன்று மாலை 05.00 மணியளவில் நடைபெறும்.

பொருள்
       01.        சம வேலைக்கு சம ஊதியம்
       02.     கல்பாக்கத்தில் நடைபெற்ற சம வேலைக்கு சம ஊதியம்  கருத்தரங்க         முடிவுகள்
                                                                                                               NFTE-TMTCLU
மாவட்ட சங்கங்கள்,கடலூர் 

Monday, February 20, 2017

வாழ்த்துகிறோம்!!
தமிழ்மாநில தொலைத்தொடர்பு வட்டத்தில் கடலூர் தொலைத் தொடர்பு மாவட்ட விற்பனைப்பிரிவு (Sales Team) 2016-ம் ஆண்டு மூன்று காலாண்டு தொடர்ந்து முதல் இடத்தை பெற்றுள்ளது. மாநில நிர்வாகம் கடலூர் மாவட்ட நிர்வாகத்தை கௌரவித்துள்ளது.
நமது மாவட்ட முதன்மைப் பொதுமேலாளர் திரு.மார்ஷல் ஆண்டனி லியோ அவர்கள் நமது மாவட்ட விற்பனை பிரிவில் பணிபுரியும் அனவருக்கும் சான்றிதழ் வழங்கியும், ரொக்கப்பரிசு வழங்கியும் கௌரவித்தார்.
கடலூர் மாவட்ட சங்கம் கடலூர் விற்பனைபிரிவில் பணிபுரியும் அனைவரையும் வாழ்த்துகிறது. கடலூர் பகுதி தோழர் K.ராகவன் அவர்கள் மாவட்ட செயலர் தோழர் இரா.ஸ்ரீதர் அவர்களை சந்தித்து வாழ்த்துபெற்றார். உடன் மாவட்ட அமைப்பு செயலர் தோழர் AC .முகுந்தன்   Saturday, February 18, 2017

 பிப்ரவரி 13, 14 தேதிகளில்
கேரள மாநிலம் கோழிக்கோடு நகரில் நடைபெற்ற
NFTE மத்திய
செயற்குழுத் தீர்மானங்கள்

 1. BSNL ஐ விற்பது
பிரதமர் அலுவலகச் செய்திக் குறிப்பு (எண் PMO ID No. 4542267//PMO/2016- ESI தேதி 30-12-2016) BSNL லின் தற்போதைய நிலை பற்றி DOT யிடம் கோரிய விவர அறிக்கை லட்சக்கணக்கான ஊழியர்களிடம் நியாயமான அச்ச உணர்வையும் பரபரப்பையும் எழுப்பியது மட்டுமல்ல கடும் வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளதுநிதி ஆயோக் அமைப்பு பொதுத் துறை நிறுவனங்களை விற்பது அல்லது உரிமை மாற்றித் தருவது என்ற பரிந்துரை அளித்துள்ள பின்புலத்தில் பொதுத்துறை நிறுவனங்களான BSNL மற்றும் ITI பற்றிப் பிரதமர் அலுவலகம்  கோரியுள்ள விவரம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. BSNL விற்பது அல்லது உரிமைகளை மாநிலங்களுக்கு மாற்றித் தருவது என்ற நிதி ஆயோக் அமைப்பின் பரிந்துரை முற்றிலும் தேவையற்ற ஒன்றேயாகும்.  ஏனெனில், BSNL நிறுவனம் தற்போது மறுமலர்ச்சி அடையும் பாதையில் நடைபோடுவது மட்டுமல்ல, ஆப்பரேஷனல் லாபம் அடைந்துள்ளதுஇதனை மாண்புமிகு பாரதப் பிரதமரும் தமது 2016 சுதந்திர தின உரையில் பெருமையுடன் குறிப்பிடவும் செய்தார். BSNL நீடிப்பது என்பது தேச மக்களின் நலம் சார்ந்தது, காரணம் BSNL நிறுவனமே தேசத்தின் மூலைமுடுக்கு வரை தொலைத்தொடர்பு சேவையை நாட்டு மக்களுக்கு நியாயமான குறைந்த விலையில் வழங்கி வருகிறது. மேலும் தேசத்தின் பாதுகாப்பு நலன் சார்ந்தும் அது மிகவும் அவசியமானது.  எனவே நீதி ஆயோக் அமைப்பின் பரிந்துரையை தேசிய செயற்குழுக் கூட்டம் வன்மையாக எதிர்க்கிறது.
எனவே நமது மத்திய சங்கம் இந்த முயற்சியைத் தடுத்து நிறுத்திட BSNL  அசோசியேஷன்கள் / சங்கங்களின் தேசிய கூட்டமைப்பு மூலம் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்திட வேண்டும் என முடிவு செய்கிறதுமேலும் நமது மத்திய சங்கம் மற்ற சங்கங்களின் ஆதரவைத் திரட்டி ஒருங்கிணைக்கவும் பணிக்கிறது.
     2. செல்கோபுரம் துணை நிறுவனம்
செல்கோபுரம் துணை நிறுவனம் அமைக்கத் துடிக்கும் அரசின் திட்டம் குறித்து தேசிய செயற்குழு  ஆழமாக விவாதித்ததுஇம்முயற்சி
BSNL நலனிற்குக் கடுமையான கேட்டினை விளைவிக்கக்கூடியது, எனவே இதனை எதிர்ப்பது என தேசிய செயற்குழுக் கூட்டம் முடிவுசெய்கிறது. மற்றொரு பொதுத்துறை நிறுவனமான MTNL ல் இத்தகைய துணைக்கம்பெனி உருவாக்கப்பட்டது. அது தனியார்மயமாக்குவதற்கான முன்னேற்பாடாகவும், அங்கு நிலவும் நிச்சயமற்ற பணிநிலைமைகளும் அதனால் ஊழியர்களுக்கு ஏற்படும் பாதகங்களும் நம் முன் உள்ள நல்ல உதாரணம்.
          எனவே, எல்லா சங்கங்களையும் ஒன்று திரட்டி அரசின் டவர்
கம்பெனி உருவாக்க முயற்சியை முறியடிக்கப் போராடுவது என இக்கூட்டம் முடிவுசெய்கிறதுமுதற் கட்டமாக, பாரத பிரதமருக்கு அனைத்து ஊழியர்களும் ஒரு குறிப்பிட்ட நாளில் அஞ்சல் அட்டை இயக்கம் நடத்துவது எனவும் முடிவு செய்கிறது.
3.  ஊதியமாற்றம்
ஊதிய மாற்றத்திற்கான சதீஷ்சந்திரா கமிட்டி அறிக்கை இன்னும் வெளியிடப்படவில்லைஊதிய மாற்றத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகளை DPE இன்னும் வெளியிடவில்லை. அங்கீகரிக்கப்பட்ட இரண்டு சங்கங்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய ஊதிய மாற்றத்திற்கான பேச்சுவார்த்தைக் குழுவை BSNL நிர்வாகம் இன்னும் அமைக்கவில்லைஇந்தப் பின்னணியில்  தேசிய செயற்குழு ஊதிய மாற்றப் பிரச்சனையை ஆழ்ந்து விவாதித்தது.
ஊதிய மாற்றத்திற்கான DPE வழிகாட்டு நெறிமுறைகளை
வெளியிட
•  BSNL நிர்வாகம் ஊதிய மாற்றத்திற்கான பேச்சுவார்த்தைக் குழுவை விரைவில் அமைத்திட
•  ஊதிய மாற்றத்திற்கான சதீஷ்சந்திரா கமிட்டி அறிக்கையை வெளியிடக் கோரியும்
தோழமைச் சங்கங்களுடன் இணைந்து கவன ஈர்ப்பு நாள் இயக்கம் நடத்துவது என இச்செயற்குழு முடிவு செய்கிறது.
4.  போனஸ் ( PLI )
8 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு போனஸ் பெற்றுத் தந்துபோனஸ் பெற்றுத் தந்ததன் மூலம் தொழிலாளிகளுக்கு NFTEஅளித்த வாக்குறுதியை மெய்ப்பித்த மத்திய சங்கத் தலைமையை இச்செயற்குழு மனதாரப் பாராட்டுகிறது.  2015 – 16 ம் ஆண்டிற்கான PLI போனஸையும் விரைவாகப் பெற்றுத் தர கோருகிறது.
5.  பென்ஷன்பென்ஷன் பங்களிப்பு
BSNL ன் நிதி ஸ்திரத் தன்மைக்கு அச்சுறுத்தலாக நீடித்த பென்ஷன் பங்களிப்பு 60 : 40 பிரச்சனையில் விடாப்பிடியாக முயன்று, பிரதமர் அலுவலகத்திற்கும் பிரச்சனை எடுத்துச் சென்று (BSNL ல் இணைந்த DOT ஊழியர்களின் ஓய்வூதிற்கான 60 : 40) பென்ஷன் பங்களிப்பை ரத்து செய்த மத்திய சங்கத் தலைமைக்கு
இச் செயற்குழு பலமான பாராட்டுதல்களை உரித்தாக்குகிறது.
ஓய்வுபெற்றோர்களுக்கு மறுக்கப்பட்ட 78,2 IDA அடிப்படையிலான பென்ஷன் நிர்ணயத்தை ஓய்வுபெற்ற ஊழியர்களுக்குப் பெற்று தந்தமைக்காகவும் மத்திய சங்கத்தைப் பாராட்டுகிறது.
6.  வீட்டுவாடகைப்படி 78.2 IDA ல்
78.2 IDA அடிப்படையில் வீட்டுவாடகைப்படியைப் பெற்றுத் தந்தமைக்காகவும் மத்திய தலைமையைப் பாராட்டுகிறது.

7.  LICE பதவி உயர்வு
JE மற்றும் TT கேடர்  இலாக்கா பதவி உயர்வு காலிஇடங்களில் சேவை மூப்பின் அடிப்படையில் பதவி உயர்வு பெற 15 சதவீத இடங்களை ஒதுக்கீடு செய்ய இந்த தேசிய செயற்குழு கோருகிறது.
8.  வணிகப்பகுதி உருவாக்கம்
வணிகப் பகுதி உருவாக்கத்தின் போது நிர்வாகம் சங்கங்களோடு கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக செயல்படும் போக்கை இச்செயற்குழு  கண்டித்து தனது கவலையைப் பதிவு செய்கிறது.
9.  நான்காவது சனிக்கிழமை விடுமுறை

வங்கியில் நடைமுறைப்படுத்தப்பட்டதைப் போல BSNL நிறுவனத்திலும் மாதத்தின் 4வது சனிக்கிழமையை விடுமுறையாக அறிவிக்க இந்தச் செயற்குழு  கோருகிறது.