07-05 2024 அன்று மாநில கவுன்சில் கூட்டம் தலைமை பொது மேலாளர் திரு D. தமிழ் மணி அவர்கள் தலைமையில், சென்னை கிரீம்ஸ் சாலையில் அமைந்துள்ள தலைமை பொது மேலாளர் அலுவலகத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
மாநில குழுவில் நமது மாவட்ட செயலாளர் தோழர் D. குழந்தைநாதன் பங்கு பெற்று சிறப்பு செய்தார்.
ஊழியர் தரப்பு கூட்டம் அன்று காலை NFTE மாநில சங்க அலுவலகத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
நமது மாவட்ட நிர்வாகம் போல் அல்லாமல் ஊழியர் தரப்பு தலைவரை முறைப்படி
முதலில் பதிவு செய்து சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருந்தது.
மேலும் அந்த அகர வரிசைப்படி தான் இருக்கையும் அமைந்திருந்தது.
கடலூர் மாவட்டத்தில் சிலரை திருப்தி படுத்துவதற்காக மாவட்ட நிர்வாகம் நடந்து கொண்டதை என்ன என்று சொல்வது.
( நமது எதிர்ப்பை கடலூர் மாவட்ட நிர்வாகத்திற்கு மாவட்ட குழு கூட்டத்தில் கடுமையாக பதிவு செய்திருந்தோம் )
கடலூர் மாவட்ட சங்கத்தின் சார்பாக பல பிரச்சினைகள் ஏற்கனவே முன் வைக்கப்பட்டிருந்தன.
அவற்றில் சில
மெடிக்கல் பில் வெளிப்புற சிகிச்சை
சம்பந்தமாக ஒரு கோரிக்கையை வைத்தோம் .அதாவது கையால் எழுதப்படுகின்ற மருத்துவ பில்களை பட்டுவாடா செய்வதில் பிரச்சனைகள் உள்ளதை சுட்டிக்காட்டினோம். மாநில நிர்வாகம் குறிப்பாக பொது மேலாளர் நிதி எந்த பில்லாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கின்ற உறுதி மொழியை தந்துள்ளார் . ஆகவே தோழர்கள் கையால் எழுதப்பட்ட பில்கள் இருந்தால் சமர்ப்பித்துக் கொள்ளலாம். அதில் ஏதாவது சிக்கல்கள் இருந்தால் மாவட்ட செயலாளரை அணுகவும்.
ஏற்கனவே இந்த பிரச்சனை மாவட்ட குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. நமது சேர்மன் அவர்கள் மாநில குழு வழிகாட்டல் கட்டாயம் பின்பற்றப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.
மருத்துவமனையை அங்கீகரித்தல்
உள் நோயாளி சிகிச்சைக்காக பணம் கட்டாமல் சிகிச்சை மேற்கொள்வதற்கு மிக விரைவில் கடலூர் மாவட்டத்தில் மருத்துவமனையில் அங்கீகரிப்பதற்கு மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்படும்.
இது கால வரம்பிற்குள் முடிக்கப்படும்.
பள்ளிகளுக்கு வழங்குகின்ற FTTH சேவையில் ரிமோட் ஏரியாவாக இருந்தால் அதற்கு ஆகுகின்ற கேபிள் செலவுகளை பள்ளி நிர்வாகத்திடம் வாங்கிக் கொண்டுதான் FSP -க்கள் அனைவரும் இணைப்பை தந்து வருகின்றனர். ஆனால் மாநில நிர்வாகம் ஒரு வழிகாட்டுதலை கொடுத்திருக்கின்றது சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியரிடம் ஒரு ரூபாய் கூட வாங்காமல் இணைப்புகளை தர வேண்டும் அதற்கு ஆகின்ற செலவுகளை நிர்வாகத்திடம் கொடுத்து அதை பள்ளி கல்வித்துறையில் இருந்து ஒரு வருடத்திற்கு (instalmsnt basis) முறையில் வசூல் செய்து பின்னர் நிர்வாகம் சம்பந்தப்பட்ட FSP களிடம் சமர்ப்பிக்கும் என்று மாநில நிர்வாக தரப்பில் கூறப்பட்டுள்ளது . இதை அனைத்து மாவட்ட தலைமை பொது மேலாளர் அவர்களுக்கும் அனுப்பப்பட்டு அனைத்து
FSP - களையும் அழைத்து தெரிவிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டது.
இதை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்கின்ற கோரிக்கையை வைத்துள்ளோம்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள மெயின் தொலைபேசி நிலையத்தில் இருக்கின்ற கழிவறை, வாடிக்கையாளர் சேவை மையத்தில் இருக்கின்ற கழிவறைகள், சிதம்பரம் தொலைபேசி நிலையத்தில் உள்ள கழிவறைகள், மற்றும் கடலூர் IQ , சிதம்பரம் IQ பணிகள் முழுமையாக நிறைவு பெற்றுள்ளதாக மாநில குழு வரைவில் குறிப்பிடப்பட்டிருந்தது
.
கூட்டத்தில் இது முற்றிலும் உண்மைக்கு மாறான தகவல்கள் என்பதை மிகக் தெளிவாக எடுத்துரைத்தோம் .
குறிப்பாக தலைமை பொது மேலாளர் நமது கூற்றை அப்படியே ஏற்றுக்கொண்டார். குறிப்பாக கடலூர் தோழர்கள் கடலூர் ஆய்வின் போது மிகத் தெளிவாக குறிப்பிட்டு இருந்தார்கள்.
குறிப்பு தயாரிப்பில் தவறு நடந்திருப்பதாகவும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
மிக விரைவில் இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உறுதி கூறப்பட்டுள்ளது.
புதிய மருத்துவ அடையாள அட்டை
அனைவருக்கும் கால வரம்பிற்குள் புதிய மருத்துவ அடையாள அட்டை ஸ்மார்ட் கார்டு மூலம் வழங்கப்படும்.
ஒப்பந்த ஊழியருக்கு ஊதியம்
இந்த பிரச்சினைகளையும் முரண்பட்ட தகவல்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன. இது சுட்டிக்காட்டப்பட்டது.
மாநில குழு கூட்டத்திற்கு தவறான தகவல் தருவது என்பது ஏற்றுக் கொள்ள முடியாதது என்பதை மாநில தலைமை பொது மேலாளர் அவர்களும் ஏற்றுக் கொண்டார்.
நமது மாவட்டத்தை பொருத்தவரை பழைய மற்றும் புதிய ஊதிய தகவல்களை சேகரித்து தந்துள்ளோம்.
நமது ஒப்பந்த ஊழியர்களும் (பழைய ஒப்பந்த ஊழியர்கள் உட்பட) முறையாக பேங்க் பாஸ்புக் நகலை பதிவிட்டு மாவட்ட சங்கத்திற்கு ஒரு இரு தினங்களில் வழங்க வேண்டுகின்றோம்.
இந்த மாதம் தலைமைப் பொது மேலாளர் அவர்கள் ஓய்வு பெறுவதை முன்னிட்டு ஊழியர் தரப்பின் சார்பாக சால்வை அணிவித்து கௌரவிக்கப்பட்டார்.
மிக விரைவில் மாநில குழு கூட்டம் நடைபெற்றதற்கு ஊழியர் தரப்பின் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது
No comments:
Post a Comment