மே தினம்
கடலூரில் மே தின நிகழ்ச்சிகள் மிகச் சிறப்பாக நடைபெற்றன. காலை 9.15 மணிக்கு தொலைபேசி நிலையம் கடலூர் மூத்த தோழர் R. செல்வகுமார் நமது சங்க கொடி ஏற்றி வைத்து சிறப்பு செய்தார்.
நமது தோழர் E. விநாயகமூர்த்தி மே தின கோரிக்கை முழக்கங்களை எழுப்பினார். அனைவருக்கும் சூடான கேசரி இனிப்புகள் வழங்கப்பட்டன.
அடுத்த நிகழ்வாக காலை 9 மணி 40 நிமிடத்திற்கு வாடிக்கையாளர் சேவை மையத்தில் நமது கிளை செயலாளரும், மாநில சங்க துணை தலைவர் ஆகிய, தோழர் A.சகாய செல்வன் நமது சங்க கொடியை ஏற்றி வைத்து சிறப்பு செய்தார்.
மிக சுருக்கமாக தோழர் E.விநாயகமூர்த்தி கோரிக்கை முழக்கங்களை எழுப்பினார்.
நிறைவாக கடலூர் பொது மேலாளர் அலுவலகத்தில் காலை 10 மணிக்கு நமது சங்க கொடியை மூத்த தோழியர் S.சுகந்தி அவர்கள் ஏற்றி வைத்தனர்.
ஒலிபெருக்கி வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன.
நமது மூத்த தோழர் E.விநாயகமூர்த்தி மே தின சிறப்பு கோஷங்களையும் மற்றும் நமது பிஎஸ்என்எல் வளர்ச்சி மற்றும் தொழிலாளர்களின் கோரிக்கையும் இணைத்து நல்லதொரு கோஷமிட்டார்.
தேசிய செயலாளர் ஸ்ரீதர் மிக சுருக்கமாக மே தின உரையை ஆற்றினார்.
அவரது உரையில், ரத்தம் சிந்தி போராடி சாதித்த எட்டு மணி நேரம் உட்பட பல கோரிக்கைகள் இன்று நீர்த்து போகின்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
தொழிலாளி வர்க்கத்திற்கு ஜாதி ,மத , மொழிகளைக் கடந்து வர்க்க ரீதியாக ஒன்றுபட்டு செயல்பட வேண்டிய தருணம் ஆனால் துரதிஷ்டவசமாக ஒற்றுமை கட்டுவதில் பல சுணக்கங்கள் உள்ளன. இதை மாற்றி அமைத்து நம் அனைவரும் ஒன்றிணைத்து போராடி பெற்ற சலுகைகளை தக்க வைப்பதோடு மேம்படுத்த வேண்டும்.
வருங்கால சந்ததிக்கு நல்லதொரு உத்தரவாதமான வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கு நாம் ஒன்றுபட்டு போராட வேண்டும் என்று அரைக்கூலுடன் தனது உரையை நிறைவு செய்தார்.
பொது மேலாளர் அலுவலகத்தில் பணிபுரிகின்ற அனைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு சூடான சுவையான கேசரி வழங்கப்பட்டன.
மாலையில் மத்திய தொழிற்சங்கங்கள் ஏஐடியூசி மற்றும் சிஐடியு இணைந்து நடத்திய மே தின பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் நமது தோழர்கள் நிறைவாக பங்கு பெற்றனர் .
மாவட்ட செயலாளர் கலந்துகொண்டு மே தின உரையை ஆற்றினார்.
மாவட்ட செயலாளர் தோழர் D. குழந்தைநாதன் கடலூரில் மே தின சிறப்பு கூட்டங்களை நல்லதொரு முறையில் ஒருங்கிணைத்து சிறப்பாக ஏற்பாடு செய்தமைக்கு வாழ்த்துக்கள்.
மேலும் மாவட்டத்தின் அனைத்து கிளைகளிலும் மே தினக் கூட்டம் சிறப்பாக நடைப்பெற்றது.
No comments:
Post a Comment