தேசியத் தொலைத்தொடர்பு ஊழியர் சம்மேளனம்
மாவட்டச் சங்கம், கடலூர்
மாவட்ட செயலக கூட்டம்
மாவட்ட செயலக கூட்டம் இன்று மாலை மாவட்ட சங்க அலுவலகத்தில் மாவட்டத் தலைவர் தோழர் D.ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.
3. குடந்தை மாவட்ட செயலாளர் தோழர் M.விஜய்ஆரோக்கியராஜ் அவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியதை வன்மையாக கண்டிக்கின்றோம். உடனடியாக மாநில நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்ற மாநில சங்கத்தை மனதார பாராட்டுகிறது. உடனடியாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திய தஞ்சை மாவட்ட சங்கத்திற்கும் பாராட்டுதலை பதிவு செய்கின்றது.
மேலும் தாக்குதல் நடத்திய நபர் மீது தஞ்சை மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடலூர் மாவட்ட சங்கம் வலியுறுத்துகின்றது..
4. கடலூர் தொலைத்தொடர்பு மாவட்டத்தின் வருவாய் பெருக்கத்திற்கு , தொடர்ந்து நமது பங்கினை முழுமையாக செலுத்திட நமது ஊழியர்களை பணிக்கின்றது.நிர்வாகத்தின் தொடரும் எதிர்மறை போக்கினால், மாவட்ட நிர்வாகத்தின் தல மட்டத்தில் நடைபெறும் கலந்த ஆலோசனை கூட்டத்தில் நமது தோழர்கள் யாரும் பங்கேற்க வேண்டாம் என்று வலியுறுத்தி கேட்டுக்கொள்கின்றது. எப்படி நமக்கு மாற்றல் உத்தரவுகளை WhatsApp மூலம் அறிந்து கொள்வது போல் , நிர்வாகம் எடுக்கின்ற முடிவுகளை WhatsApp மூலம் தெரிந்து கொண்டு செயல்படுவோம்.
5 விழுப்புரம் வாடிக்கையாளர் சேவை மையத்தில் ஊழியர்கள் பற்றாக்குறையால் உணவு இடைவேளை கூட செல்ல முடியாமல் பணி புரிகின்ற போக்கினை உடனடியாக மாற்றிட வேண்டும். அதே நேரத்தில் பொது மேலாளர் அவர்கள் நேரடியாக தலையிட்டு விழுப்புரம் வாடிக்கையாளர் சேவை மையத்தில் உள்ள நடைமுறை சிக்கல்களை கலைந்திட வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக் கொள்கின்றோம்.
6. கடலூர் மாவட்டத்தில் அனைத்து தொலைபேசி மற்றும் அலுவலகத்தில் துப்புரவு பணி புரியும் ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியங்கள் இல்லாததாலும், அந்த மோசமான ஊதியத்தையும் காலத்தே முறையாக தராத போக்கினாலும் கழிவறை சுகாதார பணியாளர்கள் தங்களது பணிகளை செய்வதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது, என்பதை மிக கவலையுடன் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். மேலும் மாவட்ட நிர்வாகம் சுகாதாரப் பணிகளுக்கு முக்கியத்துவம் தரவில்லை என்பதையும் வேதனையுடன் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
இந்த போக்கு உடனடியாக மாற்றப்பட வேண்டும்.
ஆகவே தோழர்கள் ரூபாய் 5/- சுகாதார மேம்பாட்டு பணிக்கு உடனடியாக வழங்கிட வேண்டுமென்று கேட்டுக்கொள்கின்றோம்.
தோழமையுடன்
D.குழந்தைநாதன்
மாவட்ட செயலர் – NFTE-BSNL
கடலூர்-01.
18.03.2024
No comments:
Post a Comment