.

Friday, January 27, 2017

NFTE - TMTCLU
தமிழ் மாநில தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம்
 மாநிலந் தழுவிய கருத்தரங்கம் – கடலூர்.

தீர்மானங்கள்
1 நமது NFPTE மத்திய சங்கம் 1986-ல் CPWD இலாக்கா ஊழியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பினை தொலைத்தொடர்பு இலாக்காவில் பணிபுரியும் மஸ்தூர் தோழர்களுக்கும் அமுல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வைத்து NFPTE  சம்மேளனம் 1986-ல்  போராடி பெற்று தந்தது போல 26-10-2016 அன்று உச்ச நீதிமன்றம் வழங்கிய  சம வேலைக்கு சம ஊதிய தீர்ப்பினை BSNL  பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு  அமுல்படுத்தப்பட வேண்டும் என்று BSNL  நிர்வாகத்தினை கேட்டுக் கொண்டு அதனை கறாக அமுல்படுத்திட நமது NFTE மத்திய சங்கம் முயற்சி எடுத்திட வேண்டும் என இக் கருத்தரங்கத்தின் வாயிலாக கேட்டுக் கொள்கிறோம்..
2.பணி தன்மைக்கேற்ப ஊதியம்
        தமிழ் மாநில முழுவதும் BSNL-ல் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களின் பணித்தன்மைக்கேற்ப ஊதியம் கேரளா மாநில BSNL நிர்வாகம் வழங்குவது போல் தமிழ் மாநிலத்திலும் வழங்க வேண்டும் என்று மாநில நிர்வாகத்தை கேட்டு  வந்தோம். மாநில நிர்வாகம் மத்திய அலுவலகத்திற்கு ( காப்பரேட் அலுவலகம்) பணித்தன்மைகேற்ப ஊதியம் வழங்கிட விளக்கம் கோரி கடிதம் எழுதப்பட்டுள்ளது. ஊதியத்தை விரைவில் பெற்றிட மத்திய சங்கம் நடவடிக்கை எடுத்திட இக்கருத்தரங்கம் கேட்டுக் கொள்கிறது.
3.போனஸ்
BSNL தமிழ்  மாநில நிர்வாகம் நமது மாநில சங்கத்துடன் ஒப்புக்கொண்டு போடப்பட்ட உத்தரவின் அடிப்படையில் தமிழ் மாநிலம் முழுவதும் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு குறைந்த பட்ச போனஸ் 8.33 , ரூ 7000/- வழங்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் போடும் ஒப்பந்த புள்ளி படிவத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று மாநில நிர்வாகத்தை இந்த கருத்தரங்கம் கேட்டுக் கொள்கிறது

4.தமிழ் மாநில நிர்வாகம் நமது மாநில சங்க நிர்வாகிகளோடு 20.10.2016 அன்று நடைபெற்ற பேச்சு வார்த்தையில் எல்லா மாவட்ட நிர்வாகத்திற்கும் கடிதம் எழுதியது . ESI.EPF  பிடித்தம் செய்த முறையாக கட்ட வேண்டும். அடையாள அட்டை வழங்க வேண்டும். 8 மணி நேர வேலை ஊதியம் ( 8 மணி நேர வேலை செய்து 6 மணி நேரத்திற்கு ஊதியம் வழங்கும் இடங்களில்) . மாதம் 7ந் தேதிக்குள் ஊதியம் பட்டுவாட செய்ய வேண்டும். ஒப்பந்த ஊழியர்களின் கோரிக்கையை தீர்ப்பதற்கு ஒரு கண்கானிப்பு அதிகாரி நியமனம் செய்து 30.11.2016க்குள் மாநில நிர்வாகத்திற்கு பதில் கொடுக்க வேண்டும் என்று கடிதம் எழுதியது . பல மாவட்ட நிர்வாககங்கள் அதனை அமுலாக்கம் செய்யவில்லை. உடனடியாக மாநில நிர்வாகம் தலையிட்டு அமுலாக்கிட உறுதி  செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம்.
5. BSNL ஒப்பந்த ஊழியர்கள் அனைவருக்கும் உச்சநீதி மன்ற தீர்ப்பை அமுல்படுத்தி சமவேலைக்கு சம ஊதியம் பெற்றிட மத்திய சங்கம் AITUC-யின் அறைகூவல்  அனைத்தினையும் TMTCLU தமிழ்மாநில சங்கம் வெற்றிகரமாக்கிட வேண்டும் என்று கருத்தரங்கம் கோருகிறது.
6. BSNL ஒப்பந்த ஊழியர்களுக்கு சமவேலைக்கு சம ஊதியம் அமுல்படுத்திட உச்ச நீதிமன்ற தீர்ப்பை DOT / BSNL  வழிமொழிந்திட செய்யுமாறு NFTE  மத்திய சங்கத்தை இக்கருத்தரங்கம் கேட்டுக் கொள்கிறது.
7. உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமுல்படுத்தி தமிழ் மா நிலத்தில் BSNL  ஊழியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகள் தீர்வு காண தோழமை சங்கங்களுடன் இணைந்து போராட்டம் நடத்திட இக்கருத்தரங்கம் கேட்டுக் கொள்கிறது.
8. கருத்தரங்கம்  முன்வைத்த தீர்மானங்களை அனைத்து மாவட்டங்களில் விழிப்புணர்வு உருவாக்கிட NFTE  சங்கத்துடன் இணைந்து பிரச்சாரக் கூட்டங்கள் பிப்ரவரி மாத இறுதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று இக்கருத்தரங்கம் கேட்டுக் கொள்கிறது.

தோழமையுடன்

ஆர்.கே                  M.விஜய் ஆரோக்யராஜ்              R.செல்வம்
                           தலைவர்                          பொருளாளர்                   பொதுச் செயலர்


TMTCLU,

Thursday, January 26, 2017

கடலூரில் இன்று 26.1.2017 காலை மாவட்ட சங்க அலுவலத்தில் நடைபெற்ற இந்திய விடுதலைப்போர் தியாகத் தலைவர்கள் பண்டிட் ஜவஹர்லால் நேரு, மாவீரன் பகத்சிங் திரு உருவப்பட திறப்புவிழா கூட்ட காட்சிகள்








Sunday, January 22, 2017


ஒப்பந்த ஊழியர்களுக்கு மத்திய அரசின்
குறைந்தபட்ச ஊதிய உத்தரவு
பழைய சம்பளம்: நாளொன்றுக்கு ரூ 120+130 = 250/-
புதிய சம்பளம் : நாளொன்றுக்கு ரூ 350+4.51 = 354.51/-

1970 ஒப்பந்த ஊழியர்கள் ( ஒழுங்குபடுத்துதல் மற்றும் ஒழித்தல்) சட்ட விதி 25 ல் துணை விதி 2 ன் கீழ் iv  என்பது சம்பளம் எப்படி அமைய வேண்டும் எனப் பேசுகிறதுஅது 1948 சட்டத்தின் படி அல்லது ஒருவர்க்கொருவர் பேசி ஒப்பந்தம் செய்து கொண்டபடி அல்லது குறைந்தபட்ச ஊதிய சட்டப்படி அமையலாம் என்கிறது. இந்த நிலையில்தான், குறைந்த பட்ச ஊதியத்தினை மாற்றியமைக்க வேண்டும் என்ற மத்திய சங்கங்களின் தொடர் போராட்டங்களின் விளைவாக மார்ச் 30, 2016 ல் ரூபாய் 10 ஆயிரம் கொடுக்க வரைவு அறிக்கை (Draft மசோதா) வந்ததுஅது நகல் மசோதாவாகவே இருக்கிறதே தவிர கெசட் நோட்டிபிகேஷனாக உத்தரவாக வெளிவரவில்லை. இந்த நகல் மசோதாவை எதிர்த்தே முதலாளிகளின் சம்மேளனங்கள்/அமைப்புகள் பலத்த எதிர்ப்புக் குரல் எழுப்பத் தொடங்கி விட்டனஇன்றைக்கு நாம் வாங்குகின்ற சில ஆயிரத்தை விட மசோதாவின் சிபாரிசு அதிகம் என்றாலும் நாம் முன் வைத்த கோரிக்கை குறைந்த பட்சம் ரூபாய் 15,000/=.  ஆனால் ஏழாவது சம்பளக் குழு அறிக்கைக்கு பின்னர் மத்திய சங்கங்களின் கோரிக்கை ரூ 18,000/=.  இது தர்க்க அடிப்படையிலானது.
          நகல் மசோதா பற்றி அமைச்சர்கள் குழு, நிதி அமைச்சர் திரு அருண் ஜேட்லி மத்திய தொழிற்சங்க அமைப்புகள் முதலாளிகள் பிரதிநிதிகளுடன் பேசியதுரூபாய் 9100/- (26நாட்கள்xரூ.350) குறைந்த பட்சமாக மாற்றியமைக்கலாம் எனத் தெரிவித்ததுஆனால் நம்முடைய தொழிற்சங்கங்கள் இந்த அநீதியை ஏற்க மறுத்து விட்டன.. இதனை அடிப்படியாக வைத்து கடந்த செப்டம்பர் 2-ல் நாடு தழுவிய பொதுவேலை நிறுத்தத்தை மத்திய தொழிற்சங்கங்கள் வெற்றிகரமாக நடத்தின. நாமும் நமது பகுதியில்  (non-executive) இந்த வேலை நிறுத்தத்தில் கலந்து பெரும்பான்மையாக கலந்துகொண்டோம்.
பொது வேலைநிறுத்தத்தின் பலனாக மத்திய அரசு Gazette notification-யை உத்தரவாக வெளியிட்டுள்ளது. செப்டம்பர் பொது வேலை நிறுதத்தில் ஈடுபட்ட அனைத்து தொழிற்சங்கங்களுக்கும், அனைத்து ஊழியர்களுக்கும்  நன்றி. இந்த உத்தரவு வெளி வர அழுத்தம் கொடுத்த நமது AITUC  சங்கங்கத்திற்கு நன்றி...     
 நாம் சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையினை வலியுறுத்தி வரும் வேளையில் இந்த உத்தரவு  சற்று ஆறுதலாக உள்ளது. இருப்பினும் இந்த உத்தரவின் சாதகம் , பாதகம் பற்றி பின்னர் சந்திப்போம்.



Saturday, January 21, 2017


19-01-2017 அன்று  NFTE-TMTCLU, BSNLEU, AIBSNLEA சங்கங்களின் சார்பாக நடைபெற்ற ஆதரவு ஆர்ப்பாட்டம் மிகச் சிறப்பாக  சிதம்பரம் தொலைபேசி நிலையத்தின் முன்பு   நடைபெற்றது . அதன் புகைப்படங்கள்....


Thursday, January 19, 2017

19-01-2017 அன்று நடைபெற்ற ஆதரவு ஆர்ப்பாட்டம் மிகச் சிறப்பாக  பொது மேலாளர் அலுவலக முன்பாக  நடைபெற்றது . அதன் புகைப்படங்கள்....





திண்டிவனம் பகுதியில்நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்  கலந்து கொண்டவர்கள் 



Wednesday, January 18, 2017

ஜல்லிக்கட்டு தடை நீக்கக்கோரி
ஆதரவு ஆர்ப்பாட்டம்
        நமது தமிழரின் பாரம்பரியமிக்க ஜல்லிக்கட்டை தமிழகத்தில் நடத்திட உச்சநீதிமன்றம் விதித்த தடையினை நீக்கக்கோரியும், காரணமான பீட்டா அமைப்பினை தடைசெய்யக்கோரியும் மாநிலம் முழுவதும் தற்காலிக தொண்டு அமைப்பினர், இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் பெண்கள் உட்பட  இணைந்து ஆங்காங்கே தொடர்  அறப்போராட்டம்  நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக NFTE-TMTCLU  மாநிலச்சங்கங்கள் தமிழகம் முழுவதும் 19-01-2017 அன்று ஆதரவு ஆர்ப்பாட்டம் நடத்திட அறைகூவல் விடுத்துள்ளன.  அதனடிப்படையில் 
கடலூரில் நமது  பொது மேலாளர் அலுவலகம் முன்பு 
19.1.2017 மதிய உணவு இடைவேளையில்
ஆர்ப்பாட்டம்
நடத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது. 
நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு 
தோழர்கள், தோழியர்கள் திரளாக கலந்து கொள்ளுமாறு தோழமையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.
               தோழமையுடன்
    மாவட்ட செயலர்கள்
NFTE-TMTCLU மாவட்ட சங்கங்கள்

Monday, January 16, 2017

MGR நூற்றாண்டு -ஜனவரி 17-2017




நன்றி- ஒலிக்கதிர் டிசம்பர்  2016

Friday, January 13, 2017

   வாழ்த்துக்கள்

      

நமது  கடலூர் CSC  சிறந்த SWARNA CSC –TYPE1க்கான விருது கிடைத்துள்ளது. அந்த விருதினை நமது CMD  அவர்கள் 31-12-2016 அன்று சென்னையில் நடைபெற்ற விழாவில் நமது பொது மேலாளர் அவர்களிடம் வழங்கினார் .

12-01-2017 அன்று கடலூர் CSC-ல் நடைபெற்ற எளிமையான விழாவில் சுழல் கேடயத்தை நமது பொது மேலாளர் அவர்கள் AGM (CSC) அவர்களிடம் வழங்கினார்.  பொது மேலாளர் அவர்கள் தனது உரையில் கடலூர்  CSC  அடுத்த இலக்காக அகில இந்திய அளவில் விருதினை பெற வேண்டும் எனக் கூறி பணியாற்றிய அனைத்து ஊழியர்களுக்கும் சான்றிதழ் வழங்கினார். அதோடு மட்டுமில்லாமல் CSC-ல் பணிபுரிந்த  ஒப்பந்த ஊழியர்களுக்கும்  பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இறுதியாக A.இளங்கோவன் SDE(CSC) அவர்கள் நன்றியுரை கூறினார்.  தனது நன்றியுரையில் வருவாய் பிரிவு , வெளிபுறப்பகுதி , கணினி பகுதி , ஒப்பந்த ஊழியர்கள் அனைவருக்கும் தனது நன்றியினை பதிவு செய்தார்.

விழாவில் பாராட்டுரையில் பாதுகாவலர் பணியில் இருக்கும் தோழர்கள் குறிப்பிடாமல் இருந்தது. ஆனால் நமது பொது மேலாளர் அவர்கள் வெளியில் வரும் போது அந்த பாதுகாவலர் தோழர்களை அழைத்து பாராட்டுதல்கள் சொல்லியது நெகிழ்வான தருணமாக இருந்தது..






             
கடலூர் மாவட்ட சங்கத்தின் பாராட்டுதல்களும் நன்றியும்

அன்பான தோழர்களே !

       மனம் நிறைவாய் இருக்கிறதுஅனைவரும் பாராட்டும்படியான நினைவில் நிலை நிற்கும் ஒரு கருத்தரங்கத்தை நடத்தி முடித்திருக்கிறோம்.

       இதன் வெற்றிக்குப் பாடுபட்ட ஒவ்வொரு தோழர்களுக்கும் நமது நன்றியையும் பாராட்டுதல்களையும் உரித்தாக்குகிறோம்.

       நிதி திரட்ட உழைத்தவர்கள்தங்கள் சொந்தப் பணிகளைத் தள்ளி வைத்து உடலால் உழைப்பை நல்கியவர்கள்ஊழியர்களைத் திரட்டியவர்கள் என ஒவ்வொருவரையும் தனித்தனியே போற்றிப் புகழத் தக்க பணியை ஆற்றியிருக்கிறீர்கள்.

       நிதி திரட்டியது மட்டுமல்லாமல்மளிகைப் பொருட்கள், அரிசி மூட்டை, வாழைப்பழம், வெற்றிலைப் பாக்கு, தண்ணீர் பாட்டில் என தாராளமாக பொறுப்பேற்றுக் கொண்டீர்கள், நன்றி தோழர்களே !

       முதல் நாள் இரவு உணவு , காலைச் சிற்றுண்டி, முற்பகல் வடை தேனீர், மதியம் சுவையான அசைவ உணவு என ஒவ்வொன்றும் அருமை என தமிழகம் முழுவதிலிமிருந்து வந்திருந்த பங்கேற்பாளர்கள் பாராட்டினார்கள் என்றால் அந்தப் பாராட்டு முழுவதும் நம் தோழர்களை –--குறிப்பாக, கீழே குறிப்பிடப்படும் தோழர்களையே—--சேரும்வாழ்த்துக்கள் தோழர்களே!

நன்றிக்குரிய நம் தோழர்கள்

       A.S. குரு பிரசாத்மாவட்ட அலுவலகம், கடலூர்
       R. குணசேகரன்,            --- do---
       K. செல்வராஜ், நெல்லிக்குப்பம்
       K. குமார்செஞ்சி
       P. குமார், நெல்லிக்குப்பம்
       V. இளங்கோவன், அரகண்ட நல்லூர்
       S. இராஜேந்திரன், மாவட்ட அலுவலகம், கடலூர்
       D. குழந்தைநாதன், கடலூர்
       S. வெங்கட், பரங்கிப்பேட்டை
       A. பீட்டர், நெல்லிக்குப்பம்
       V. கிருஷ்ணமூர்த்தி, சிதம்பரம்
       R. நந்தகுமார், பண்ருட்டி
       R. சுப்பிரமணியன், கடலூர்
       A.C.முகுந்தன், கடலூர்
       இறுதியாக, கருத்தரங்கம் வெற்றி பெறுவதற்கு நிதி அளித்த அனைத்து அதிகாரிகள், தோழமைச் சங்க நண்பர்கள் மற்றும் நமது சங்கத் தோழர்கள் அனைவருக்கும் மாவட்ட சங்கத்தின் நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகிறோம்!
       நெடுந்தொலைவிலிருந்தும் மார்கழி மாதக் குளிரையும் பொருட்படுத்தாது காலத்தே வந்திருந்து பங்கேற்ற அனைத்து தோழர்களுக்கும் மீண்டும் மீண்டும் நன்றிநன்றிநன்றி!
வாழ்த்துகளுடன்,

தோழமையுள்ள
மாவட்டத் தலைவர் / மாவட்டச் செயலர்
NFTE             TMTCLU
கடலூர் மாவட்டச் சங்கங்கள்