.

Sunday, January 22, 2017


ஒப்பந்த ஊழியர்களுக்கு மத்திய அரசின்
குறைந்தபட்ச ஊதிய உத்தரவு
பழைய சம்பளம்: நாளொன்றுக்கு ரூ 120+130 = 250/-
புதிய சம்பளம் : நாளொன்றுக்கு ரூ 350+4.51 = 354.51/-

1970 ஒப்பந்த ஊழியர்கள் ( ஒழுங்குபடுத்துதல் மற்றும் ஒழித்தல்) சட்ட விதி 25 ல் துணை விதி 2 ன் கீழ் iv  என்பது சம்பளம் எப்படி அமைய வேண்டும் எனப் பேசுகிறதுஅது 1948 சட்டத்தின் படி அல்லது ஒருவர்க்கொருவர் பேசி ஒப்பந்தம் செய்து கொண்டபடி அல்லது குறைந்தபட்ச ஊதிய சட்டப்படி அமையலாம் என்கிறது. இந்த நிலையில்தான், குறைந்த பட்ச ஊதியத்தினை மாற்றியமைக்க வேண்டும் என்ற மத்திய சங்கங்களின் தொடர் போராட்டங்களின் விளைவாக மார்ச் 30, 2016 ல் ரூபாய் 10 ஆயிரம் கொடுக்க வரைவு அறிக்கை (Draft மசோதா) வந்ததுஅது நகல் மசோதாவாகவே இருக்கிறதே தவிர கெசட் நோட்டிபிகேஷனாக உத்தரவாக வெளிவரவில்லை. இந்த நகல் மசோதாவை எதிர்த்தே முதலாளிகளின் சம்மேளனங்கள்/அமைப்புகள் பலத்த எதிர்ப்புக் குரல் எழுப்பத் தொடங்கி விட்டனஇன்றைக்கு நாம் வாங்குகின்ற சில ஆயிரத்தை விட மசோதாவின் சிபாரிசு அதிகம் என்றாலும் நாம் முன் வைத்த கோரிக்கை குறைந்த பட்சம் ரூபாய் 15,000/=.  ஆனால் ஏழாவது சம்பளக் குழு அறிக்கைக்கு பின்னர் மத்திய சங்கங்களின் கோரிக்கை ரூ 18,000/=.  இது தர்க்க அடிப்படையிலானது.
          நகல் மசோதா பற்றி அமைச்சர்கள் குழு, நிதி அமைச்சர் திரு அருண் ஜேட்லி மத்திய தொழிற்சங்க அமைப்புகள் முதலாளிகள் பிரதிநிதிகளுடன் பேசியதுரூபாய் 9100/- (26நாட்கள்xரூ.350) குறைந்த பட்சமாக மாற்றியமைக்கலாம் எனத் தெரிவித்ததுஆனால் நம்முடைய தொழிற்சங்கங்கள் இந்த அநீதியை ஏற்க மறுத்து விட்டன.. இதனை அடிப்படியாக வைத்து கடந்த செப்டம்பர் 2-ல் நாடு தழுவிய பொதுவேலை நிறுத்தத்தை மத்திய தொழிற்சங்கங்கள் வெற்றிகரமாக நடத்தின. நாமும் நமது பகுதியில்  (non-executive) இந்த வேலை நிறுத்தத்தில் கலந்து பெரும்பான்மையாக கலந்துகொண்டோம்.
பொது வேலைநிறுத்தத்தின் பலனாக மத்திய அரசு Gazette notification-யை உத்தரவாக வெளியிட்டுள்ளது. செப்டம்பர் பொது வேலை நிறுதத்தில் ஈடுபட்ட அனைத்து தொழிற்சங்கங்களுக்கும், அனைத்து ஊழியர்களுக்கும்  நன்றி. இந்த உத்தரவு வெளி வர அழுத்தம் கொடுத்த நமது AITUC  சங்கங்கத்திற்கு நன்றி...     
 நாம் சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையினை வலியுறுத்தி வரும் வேளையில் இந்த உத்தரவு  சற்று ஆறுதலாக உள்ளது. இருப்பினும் இந்த உத்தரவின் சாதகம் , பாதகம் பற்றி பின்னர் சந்திப்போம்.



No comments:

Post a Comment