Monday, June 30, 2014

பணி ஓய்வு வாழ்த்துக்கள்

30-06-2014 அன்று பணி ஓய்வு பெறும் தோழர்கள் 

 K ஞானசேகரன் SDE 
 P கோவிந்தசாமி II  TM 
S குருராஜன் STS 
C ஜெயலக்ஷ்மி STS 
R கண்ணன் TM 
GM ராஜசேகரன் TM 
P ராமானுஜம் TM 
N K பாலகணேசன் SSO (விருப்ப ஓய்வு)

ஆகியோருக்கு மாவட்ட சங்கம் தனது நெஞ்சு நிறை வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது 

Saturday, June 28, 2014

மனிதநேயத்துடன் மருத்துவம்: மக்கள் பாராட்டும் மயிலாடுதுறை டாக்டர் வி.ராமமூர்த்தி


                                                                                                                  நன்றி: தினமணி 

பணம், காசு என அலையும் இந்த காலத்திலும் பணத்தை ஒரு பொருட் டாகப் பார்க்காமல் கொடுத்ததைப் பெற்றுக்கொண்டு மனிதநேயத்துடன் மருத்துவம் பார்த்து வருகிறார் மயிலாடுதுறையைச் சேர்ந்த டாக்டர் வி. ராமமூர்த்தி.நாகை மாவட்டம், மயிலாடுதுறை பட்டமங்கலத் தெருவில் வசித்து வரும் இவருக்கு சொந்த ஊர் முடிகொண்டான் கிராமம். விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவருக்கு தற்போது வயது 79. மயிலாடுதுறையில் அதே இடத்தில் 1959-ம் ஆண்டு முதல் மருத்துவம் பார்த்துவரும் இவரை தெரியாதவர்கள் அந்த ஊரில் யாரும் இருக்க முடியாது.

இன்றும் அதே துடிப்புடனும் அக்கறையுடனும் சிகிச்சைக்கு வருபவர்களை அணுகி மருத்துவம் செய்கிறார். சிகிச்சை பெற கட்டணமாக இவ்வளவு தர வேண்டுமென இவர் கேட்பதில்லை. அவர் பணத்தை கைநீட்டியும் வாங்குவதில்லை. தங்களால் எவ்வளவு முடியுமோ (ரூ.5 அல்லது ரூ.10 தான்) அவரது மேஜை மீது வைத்துச் செல்லலாம். காசு இல்லை என்றாலும், போயிட்டு வா என தோளைத் தட்டி அனுப்பி விடுவார். இவர் எழுதும் மருந்துகளும் ரூ.20 அல்லது ரூ.30-க்குள்தான் இருக்கும்.

மேலும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் வந்தால் நீ எந்த ஊரு, என்ன படிக்கிற, எங்க தங்கியிருக்கிற என வாஞ்சையோடு விசாரித்து விட்டு, ஊருக்கு செல்ல செலவுக்கு பணம் வைத்திருக்கியா, இந்தா இதை வைச்சுக்கோ என ரூ.10 அல்லது ரூ.20 கொடுத்து அனுப்புவார் டாக்டர் ராமமூர்த்தி.

எப்படி உங்களால் இது முடிகிறது என அவரிடமே கேட்டதற்கு அவர் “தி இந்து” நிருபரிடம் கூறியது:

சென்னை மருத்துவக் கல்லூரியில்தான் மருத்துவம் படித்தேன். அங்கு பேராசிரியர்களாக இருந்தவர்கள் மருத்துவத் துறையில் மிகப்பெரிய ஜாம்பவான்கள். இவர்கள் யாரும் தனியாக கிளினிக் வைத்து பணம் சம்பாதித்தவர்கள் அல்லர். இவர்கள் எங்களுக்கு சொல்லிக் கொடுத்ததெல்லாம் மருத்துவத்தை மனிதாபிமான அடிப்படையில் செய்யுங்கள், பணத்துக்காக செய்யக் கூடாது என்பதுதான்.

ஏழைகளிடம் காசு வாங்காதே, ஒத்தாசையாக இரு என 45 ஆண்டுகளுக்கு முன்பே காஞ்சி மகா பெரியவர் கூறினார். அதை இன்றும் கடைப்பிடித்து வருகிறேன்.

என்னிடம் வரும் மக்கள் பாசத்துடன் வருகின்றனர். அவர்களுக்கு தேவையான உதவிகளை நான் செய்கிறேன். மருத்துவத் தொழில் இன்று அப்படி இல்லை. பணம் கொடுத்துதான் மருத்துவராக வேண்டியிருக்கிறது. அந்த பணத்தை திரும்ப சம்பாதிக்க மக்களிடம் பணம் அதிகமாக வாங்க வேண்டியிருக்கிறது.

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் 20 ஆண்டுகள் பணியாற்றினேன். அப்போது பல்வேறு பணிகளுக்காக ஏராளமானோருக்கு லட்சக்கணக்கான கையொப்பங்களை (அட்டெஸ்டெட்) இலவசமாகவே போட்டிருக்கிறேன்.

நான் பெற்ற பெரும் பாக்கியமே எனது மனைவி நீலாதான். எனது மனிதாபிமான சேவைக்கு எனது மனைவியும் முக்கிய காரணம். திருமணமானதிலிருந்து இதுவரையில் பணம் அதிகமாக சம்பாதிக்க வேண்டுமென அவர் கேட்டதில்லை. அதனால்தான் மருத்துவத் தொழிலை சேவையாக செய்ய முடிகிறது. நான் சொத்துகள் எதுவும் சேர்க்கவில்லை, ஆனால் ஏழை மக்களின் பாசத்தைத்தான் சொத்தாக சேர்த்துள்ளேன்.

எனது மகன் சீனிவாசன் மருத்துவம் படித்துவிட்டு சென்னையில் சிறுநீரகவியல் சிறப்பு மருத்துவராகப் பணியாற்றி வருகிறார். மயிலாடுதுறையிலிருந்து வருகிறோம் என யார் சென்றாலும், அவர்கள் மீது தனி அக்கறை எடுத்து மருத்துவம் செய்கிறார். பலரும் இங்கு வந்து அதை என்னிடம் சொல்லும்போது எனக்கு பெருமையாக இருக்கும். அவன் கார் வாங்கியுள்ளான், பங்களா வாங்கியுள்ளான் என்பதில் எனக்கு திருப்தி இல்லை. அவனும் ஏழைகளுக்கு உதவுகிறான் என்பதில்தான் எனக்கு திருப்தி என்றார் மனிதநேய மருத்துவர் ராமமூர்த்தி.


நன்றி: தி ஹிந்து தமிழ் 


Tuesday, June 24, 2014

தமிழ் மாநில செயற்குழு சேலம்  - புகைப்படங்கள் 
Monday, June 23, 2014

தமிழ் மாநில செயற்குழு தீர்மானங்கள் - சேலம் 20.06.2014

தமிழ் மாநில செயற்குழு - சேலம் 20.06.2014

சேலம்
ஒற்றுமையின் பாலம்

20/06/2014 அன்று சேலத்தில்  
தோழியர்.லைலா பானு அவர்கள்
 தேசியக்கொடியை ஏற்றி வைக்க 
தோழர்.குன்னூர் இராமசாமி அவர்கள் 
சங்கக்கொடியை ஏற்றி வைக்க
 அவையடக்கம் மிகுந்த அவையடக்கத் தெரிந்த  
தோழர்.இலட்சம் அவர்கள் தலைமையேற்க

சேலம் மூத்தவர் தோழர்.இராஜா அவர்கள் 
நீத்தாருக்கு அஞ்சலி உரைக்க
இளையவர் பாலகுமார்
  வந்தோருக்கு வரவேற்புரையாற்ற
சேலத்தின் கூடவே இருக்கும் வேலூர் 
சென்னக்கேசவன் கூடுதல் வரவேற்பு நல்க 

இணக்கம் மிகுந்து இனிமை மிகுந்து 
 பொறுமையோடு ஒற்றுமையின் அருமை காத்து 
நமது தமிழ் மாநில செயற்குழு 
முக்கனியின் சுவை மிகுந்து நடந்து முடிந்துள்ளது.

மாநிலச்செயலர் தோழர்.பட்டாபி அவர்கள் 
திசை திரும்பிய தேசம், 
திசை மாறாமல் செல்லும் NFTE சங்கம், 
திசை தெரியாமல் நிற்கும் BSNL 
ஆகியவை பற்றி அருமையான சிந்தனைகளை 
செய்திகளை நல்கினார்.

கோவை சுப்பராயன் அவர்கள் 
ஒற்றுமையின் அவசியத்தை உணர்வோடு வலியுறுத்தி 
அதற்காக பாடுபட்ட தோழர்கள்.ஆர்.கே., மாலி
 ஆகியோரின் பங்களிப்பை பாராட்டினார்.

சம்மேளனச்செயலர் இலக்கியச்செம்மல் தோழர்.ஜெயராமன் அவர்கள் ஒற்றுமையை பிரசவிக்கத் தான் மேற்கொண்ட தவத்தையும் அதனால் பட்ட வலியையும் இலக்கிய வழியில் இன்முகம் மாறாமல்  கூறினார்.

சம்மேளன அமைப்புச்செயலர் தோழர்.கோபாலகிருஷ்ணன் அவர்கள் அமைப்பு விதிகளின் அவசியம் கூறி வாழ்த்துரை வழங்கினார்.

சிறப்பு அழைப்பாளர்கள் தோழர்கள்.சேது,ஜெயபால்,தமிழ்மணி ஆகியோர்  ஒற்றுமை பெருகிட உணர்ச்சிப்பெருக்கோடு உரையாற்றினர்.

ஒப்பந்த ஊழியர் சங்க மாநிலச்செயலர் தோழர்.செல்வம் அவர்கள் 17/07/2014 அன்று சென்னையில்  நடைபெற இருக்கும் ஒப்பந்த ஊழியர் போராட்டத்திற்கு அனைவரையும் அழைத்தார். 

RJCM செயல்பாடு மற்றும் பணிக்குழு பற்றி 
முன்னணித்தோழர்கள் தங்கள் கருத்துக்களை 
கருத்தாழமுடன் எடுத்துரைத்தனர்.

மாவட்டச்செயலர்கள்,மாநிலச்சங்க நிர்வாகிகள் தங்கள் பகுதி பிரச்சினைகளை எவ்வித பிரச்சினையுமின்றி பேசி முடித்தனர்.

நிறைவாக அருமைத்தோழர்.ஆர்.கே., அவர்கள் இன்றைய புதிய சூழலில் தொழிலாளர்கள் தங்கள் தொல்லைகள் தீர்ந்திட, நல்லவை நடந்திட  எல்லை கடந்த ஒற்றுமை காக்கவும், தங்களைச் சுற்றியுள்ள குறுகிய எல்லைகளைத் தகர்த்திடவும் அறைகூவல் விடுத்தார்.

பெற்றவர் கை மாங்கனி பெற்றிட
 அவசரமாக உலகைச்சுற்றியவர் உண்டு...
இருந்த இடத்திலேயே பெற்றோரைச்சுற்றி  
மாங்கனி பெற்றவரும் உண்டு...
நமது இயக்கமோ.. மாங்கனி நகரில் 
தன்னையே சுற்றி  ஒற்றுமைக்கனி பறித்துள்ளது.

நீடு வாழ்க...சேலம்..
நிலைத்து வாழ்க..
ஒற்றுமைப்பா(ப)லம்..

நன்றி காரைக்குடி வலைத்தளம்.

Wednesday, June 18, 2014

சொசைட்டி செய்திகள்!
சென்னை சொசைட்டியில் கடந்த 2011 முதல் 2013 வரையிலான டிவிடென்ட் பெறாதவர்களின் விவரமும் மற்றும் 5% SHARE ADJUSTMENT பெறாதவர்களின் விவரமும்  கீழே இணைக்கப்பட்டுள்ளது. அவர்கள் உடனடியாக அதற்குரிய ADVANCED STAMP  ரசீது அனுப்பி பெற்றுகொள்ளுமாறு கேட்டுகொள்கிறோம். நேரடியாக தங்களது வங்கிக் கணக்குகளுக்கே சேருமாறு பெற அதற்குரிய படிவத்துடன் விண்ணப்பிக்குமாறு கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.
மேலும் விவரங்கள் பெற இயக்குனர் V.கிருஷ்ணமூர்த்தியை 9486106877 என்ற எண்ணில் தொடர்புகொள்ளவும்.

விபரம் பெற கீழே கிளிக் செய்யவும் 

முயற்சி தன் மெய் வருத்த கூலி தரும் IAS வெற்றியாளர்களுக்கு பாராட்டு

முயற்சி தன் மெய் வருத்த கூலி தரும் 
IAS  வெற்றியாளர்களுக்கு பாராட்டு 
அன்புள்ள தோழர்களே 

இந்திய ஆட்சி பணிக்கான போட்டி தேர்வை 5 லட்சம் பேர் எழுதினர். 12,976 பேர் முதன்மை தேர்வு எழுத தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதில் தேர்வாகி 3003 பேர் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டனர்.  அதில் 1122 பேர் வெற்றி பெற்றுள்ளனர். அனைவருக்கும் நம் பாராட்டுகள்.  உத்தர பிரதேசம், ராஜஸ்தானை அடுத்து தமிழகம் தொடர்ந்து 3-ஆம் இடம் வகிக்கிறது.  

சிறப்பு கவனத்துக்குரியவர்கள்

திரு ஜெயசீலன்:
தமிழகத்தில் வெற்றி பெற்ற 109 பேரில் முதன்மையானவர். அகில இந்திய அளவில் 45 வது இடம் பெறுகிறார். முதல் பாராட்டு, அடிப்படை கல்வி தமிழ் வழியில் அரசுப்பள்ளியில் படித்த இவர் IAS தேர்வை தமிழில் எழுதி வெற்றி பெற்றுள்ளார் என்பது தான். 
எந்த சூழ்நிலையில் தமிழகத்தில்  தனியார் கல்வி வியாபாரிகள் தமிழ் வழியில் அல்ல-தமிழை ஒரு மொழி பாடமாக கூட கற்பிக்க முடியாது என நீதிமன்றங்களில் வல்லடி வழக்கு நடத்தும் பொது, தமிழில் தேனி  மாவட்டம்  கெங்குவார்பட்டி கிராமத்தை சேர்ந்த திரு ஜெயசீலன் வெற்றி பெற்றார் என்பது தமிழுக்கும் தமிழ் வழி கல்விக்கும் கிடைத்த வெற்றி 

' பொறி இன்மை யாருக்கும் பழி அன்று'
ஊனம் குறை அன்று!
செல்வி பினோ செபைன் 
பிறவியிலேயே பார்வையற்றவர். IAS தேர்விற்குரிய புத்தகங்கள் பிரைலி முறையில் இல்லை என்றாலும், பெற்றோர் மற்றும் உறவினர் உதவியோடு வென்று 343-ஆம் இடம் பெற்றுள்ளார். கண் உள்ளோர்க்கெல்லாம் ஒரு புதிய வெளிச்ச பாதையை காட்டியுள்ளார். இவர் சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்தவர்.

கடலூர் புதுப்பாளையம் திரு கீர்த்தி நாராயணன் 
அரசு பள்ளி தலைமை ஆசிரியர் தம்பதியினரின் மகன். இரண்டாவது முயற்சியில் பணியில் இருந்து கொண்டே பயிற்சி பள்ளிகளுக்கு எங்கும் செல்லாமல் 344-ஆம் இடம்.

செல்வி சரிகா 
ஓடிஷா மாநிலம் போலங்கிர் மாவட்டம் கண்டாபாஞ்சி நகரில் சிறிய மளிகை கடை வைத்துள்ள சாதுராம் ஜெயின் அவர்களின் 3வது மகள். பிறவியிலேயே போலியோ இளம்பிள்ளை வாதத்தால் பாதிக்கப்பட்டவர். கல்லூரிக்கு செல்ல விடாமல் போலியோ முடக்கிப்போட்டது. செயலூக்கமும் அறிவுத்திறனும் கொண்ட சரிகா வீட்டில் இருந்தபடியே CA படித்தார். IAS -ல் 527ஆம் இடம் பெற்று போலியோவை புறமுதுகிட செய்தார்.

திரு கவுரவ் அகர்வால் 
ராஜஸ்தான் ஜெய்பூரை சேர்ந்தவர். IIT கான்பூரில் பட்டம், லக்னவ் IIM -ல் முதுநிலை மேலாண்மை + விடாமுயற்சி  விளைவு IAS -ல் முதலிடம் 

இவ்வளவு வசதிகள் இருந்தால் தான் IAS தேரமுடியுமா? இல்லை என்கிறார் 
செல்வி நெல்சன் பிரியதர்ஷினி 
சத்திய மங்கலத்தை அடுத்த உக்கிரம் கிராமத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் மகள்.  நாலும் தெரிஞ்ச ரூட்டுகாரர் தன மகளை அவயத்து முந்தி இருக்க ஊக்கப்படுத்தினார். செல்வி நெல்சன் பிரியதர்ஷினி முதல் முயற்சியிலேயே 88-ஆம் இடம் பெற்றுள்ளார்.

இளையவர்கள், குடும்ப பிரச்சினைகள் ஏதுமில்லை  வென்றார்கள் என நினைகிறீர்களா? இல்லை, இதோ குஜராத்தில் ஒரு வெற்றி கதை !
திருமதி சகுந்தலா வன்சரா 
நார்மாடி பழங்குடி இனத்தை சேர்ந்தவர். குடும்ப வழக்கம் கல்வி மறுக்கப்பட்டது. சமூக வழக்கத்தை புறந்தள்ளி பெண்ணை, "தலைவாரி பூச்சூடி கல்விச்சாலைக்கு போவென்று சொன்னாள் ஓர் அன்னையாய்! "மகள் மஞ்சிதா இன்று காவல் துறை DSP 
மகளை படிக்க வைப்பது என்ன பெரிதா? சகுந்தலா ஓர் வித்தியாசமான மாமியார். அதுவும் தமிழ் சீரியல்களில் வில்லிகளாக மாறிவிட்ட மாமியார்களை பார்க்கும் போது திருமதி  சகுந்தலா ஒரு போற்றுதலுக்குரிய மாமியார் 
தனது மருமகள் சவுதாம்பிகா அவர்களை IAS எழுத தூண்டினார். பழங்குடி பெண் முதலில் மறுத்தார். பின்னர் மாமியாரின் அன்புக்கு பணிந்து எழுதினார். முதலில் தோல்வி. மீண்டும் தோல்வி. ஆனால் தோற்காதது திருமதி சுகுந்தலாவின் ஊக்குவிப்பு மட்டும் தான். 3-ம் முறை இப்போது சகுந்தலாவின் மருமகள் 1061-ஆம் இடம் பெற்று வெற்றி பெற்று சரித்திர சாதனை புரிந்துள்ளார்.

தமிழ் மாநில செயற்குழு - சேலம்

ஜூன்  20ல்...! சேலத்தில்...! சேர்ந்திடுவோம்...! 
தமிழ் மாநில செயற்குழு - சேலம்  
இடம்: சேலம் தமிழ் சங்கம்

Sunday, June 15, 2014

தோழியர். குழந்தைமேரி அற்புதங்களின் சாட்சியம்

Friday, June 13, 2014

GTECS கூட்டுறவு சங்க இயக்குனர்கள் கூட்டம்.சென்னை.

12-06-2014 அன்று சென்னையில் நடைபெற்ற கூட்டுறவு சங்க இயக்குனர்கள் கூட்டத்தில் கீழ்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.

1.01-07-2014 முதல் வட்டி 1 சதவீதம் குறைக்கப் படுகிறது.15.5 சதவீதத்திலிருந்து 14.5 சதவீதமாக குறையும்.

2.கல்விக்கடனாக (Education Loan) ரூ.10,000/=வழங்கப்படும். பத்து மாத தவணையாக பிடித்தம் செய்யப்படும். இதற்கு வட்டி 14.5% உண்டு.

3.விரைவில் பெங்களூரில் புதிய கிளை துவங்கப்படும்.

4.2011 ஆம் ஆண்டு கூட்டுறவு சங்க நிலம் பிளாட் போட்டு விற்பதற்காக உறுப்பினர்களிடம் விண்ணப்பம் பெறப்பட்டுள்ளது. அது இப்பொழுது நீக்கப்பட்டு புதியதாக கட்டப்படவுள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கான விண்ணப்பங்கள் பெறப்படும்.


                                                                                                                       V.கிருஷ்ணமூர்த்தி.
                                                                                          இயக்குனர்/ GTECS.

Tuesday, June 10, 2014

டெலிகாம் மெக்கானிக் மாற்றல்- உத்திரவு வெளியீடு

டெலிகாம் மெக்கானிக் மாற்றல் உத்திரவு வெளியிடப்பட்டுள்ளது .  120 தோழர்களுக்கு விருப்ப மாற்றலும் 84 தோழர்களுக்கு LONG STAY மாற்றலும் செய்யப்பட்டுள்ளன.  உத்திரவு நகல்கள் அந்தந்த கோட்ட பொறியாளருக்கு அனுப்பப்பட்டு அனைவரும் உடனடியாக விடுவிக்கபடுவார்கள். இந்த சுழற்சி மாற்றல் கோரிக்கையை  நிறைவேற்றிய மாவட்ட நிர்வாகத்திற்கும் ஒத்துழைப்பு நல்கிய BSNLEU மற்றும் FNTO மாவட்ட சங்கங்களுக்கும் நன்றி
தோழர்கள் அதிகபட்சமாக 25 கி மீ தூரத்திற்குள் மாற்றல் பெற்றுள்ளனர். ஏதேனும் குறைகள் இருப்பின் மாவட்ட செயலரை தொடர்பு கொள்ளலாம். மாவட்ட சங்கம் அனைத்து தோழர்களின் உணர்வுகளையும் புரிந்து கொண்டுள்ளது.


தகவல் பலகைக்கு 

தோழர் சிரில் நினைவு அறக்கட்டளை 15-ஆம் ஆண்டு விழா

இரங்கல்

நம்முடன் பணியாற்றும் தோழர்   திரு T சந்திரபாபு SSS/TRA/CDL  அவர்களின் தாயார்   நேற்று (09-06-2014)    காலமானார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். பிரிவால் துயருறும் அவரது குடும்பத்தாருக்கு மாவட்டச் சங்கம் தனது ஆழ்ந்த இரங்கலை உரித்தாக்குகிறது.

இறுதி நிகழ்ச்சிகள் கடலூரில்    இன்று (10-06-2014)  நடைபெறும் .

Saturday, June 7, 2014

Friday, June 6, 2014

நன்றி

05-06-2014 அன்று கடலூரில் திட்டமிட்டப்படி  போன் மெக்கானிக் கலந்தாய்வு வெற்றிகரமாக நடைபெற்றது.

2012-ல் மாற்றப்பட்ட 130 தோழர்களில்,122 தோழர்கள் மீண்டும் ஏற்கனவே இருந்த  இடத்திற்கே மாற்றல் பெற்றனர்.ஏனையோருக்கு அருகில் இருந்த மாற்று இடங்களே பெற முடிந்தது.

கலந்தாய்வுக்கு 86 தோழர்கள் அழைக்கப்பட்டனர். அதில் 70 தோழர்கள் கலந்து கொண்டனர்.

கடைசி நேரத்தில் கலந்தாய்வை ரத்து செய்ய குழுப் போக்கின் காரணமாக சில தோழர்கள் செய்த தேவையற்ற முயற்சி முறியடிக்கப்பட்டது.

BSNLEU மாவட்ட சங்கம், FNTO  மற்றும் NFTE மாவட்ட சங்கம் இணைந்து 130+70 தோழர்களின் மாற்றலை நேர்மையாக பெரும்பான்மையாக நிறைவேற்றியிருக்கிறோம் என்பதில் நமக்கு திருப்தி. 2010-ல் 150 கி. மீ தூரத்திற்கு மாற்றப்பட்டதை 2012-ல் 50 கி. மீ க்குள் குறைத்தோம். 2014-ல் 25 கி.மீ  என்ற அளவில் மாற்றியுள்ளோம். 

NFTE மாவட்ட சங்கம் அணி பார்த்து செயல்படுவதில்லை என்பதை மீண்டும் நிரூபித்துள்ளோம்.

நிர்வாகத்தின் நியாயமான சந்தேகங்களை தீர்த்து வைத்து நமது கோரிக்கையின் நியாயத்தை ஏற்க வைத்தோம். கடைசி நேர நெருக்கடியின் போதும் உறுதியாக கலந்தாய்வை நடத்தி முடித்த Sr GM  அவர்களுக்கும் DGM (CFA ) அவர்களுக்கும் நமது நன்றியை தெரிவித்துகொள்கிறோம். மாநில சங்கங்களுக்கும் நன்றி!

சங்கங்களின் ஒற்றுமையை மேலும் மேலெடுத்து செல்வோம் 


தகவல் பலகைக்கு இங்கே கிளிக் செய்யவும் 
  

Thursday, June 5, 2014

16 -வது மக்களவை

16 வது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பதவியேற்றுகொண்ட  அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நமது வாழ்த்துக்கள் 

தமிழ்நாட்டில் 37 நாடாளுமன்ற தொகுதிகளை வென்ற அ இ அதிமுக கட்சியின் பொது செயலரும் தமிழக முதலமைச்சருமான மாண்புமிகு ஜெ ஜெயலலிதா அவர்களுக்கு நம் பாராட்டுகள் 

கடலூர் SSA பகுதிக்குட்பட நாடாளுமன்ற உறுப்பினர்கள் 
கடலூர் திரு.A அருண்மொழிதேவன் 

விழுப்புரம் திரு S ராஜேந்திரன் 

கள்ளக்குறிச்சி திரு K காமராஜ் 

சிதம்பரம் திரு M சந்திரகாசி 

ஆகியோருக்கு நமது நல்வாழ்த்துக்கள் 

16வது மக்களவையில் தான் பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை    62 ஆக    உயர்ந்துள்ளது. இது   பெண்களின் ஒதுக்கீட்டு கோரிக்கையான 33%க்கும் குறைவு. இயற்கை நீதியான 50%க்கும் வெகு குறைவு.  ஆனாலும் எண்ணிக்கை இந்த அளவு உயர்ந்துள்ளதற்கு நமது பாராட்டுக்கள்.

16வது மக்களவைக்கான தேர்தலில் கொள்கை அடிப்படையில் ஒரு மாற்று அரசியலுக்காக போராட களமிறங்கிய இடதுசாரி வேட்பாளர்கள் அனைவருக்கும் நமது தோழமை வாழ்த்துக்கள் 

வார்த்தைகளில் வெளிப்படும் நல்லெண்ணங்கள் இனி செயல்களாக மலர வேண்டும். நம்பிக்கையோடு வாழ்த்துவோம் 

புதிதாக லட்சக்கணக்கான இளைய சமுதாயத்தினர் இம்முறை முதன் முறையாக வாக்களித்துள்ளனர். வாக்கு சதவீதம் வரலாற்று சாதனை படைத்துள்ளது. ஆனால் ஒரு முரண் நகையாக நாடாளுமன்றத்தின் சராசரி வயது கூடியுள்ளது. அதாவது நாடாளுமன்ற உறுப்பினர்களின் இளைஞர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது என்பது கவனத்துக்குரியது Wednesday, June 4, 2014

HRMS PACKAGE சரிபார்ப்பு

நமது தமிழ்நாடு தொலைதொடர்பு வட்டத்தில் ERP (ENTERPRISE RESOURCE PLANNING ) செயல்படுத்தப்பட  உள்ளதால் HRMS PACKAGE -ல் உள்ள தங்களது தகவல்களை அனைவரும் சரிபார்த்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளபடுகிறார்கள்.
         
          கீழ்க்கண்ட விவரங்களை தங்களது SERVICE BOOK , PRESIDENTIAL ORDERS ஆகியவற்றுடன் சரிபார்த்து HRMS -ல் குறைகள் இருந்தால் தகுந்த ஆதாரங்களோடு சமர்ப்பித்து சரிசெய்து கொள்ள கேட்டுக்கொள்ளபடுகிறார்கள்


         1.குடும்ப விவரம் Family details
          2. வாரிசுதாரர் விவரம் Nomination details
          3. பணி விவரம் Career history
          4. சொந்த தகவல்கள் Personal details
          5. பயிற்சி விவரம் Training details
          6. மருத்துவ கிளைம் விவரம்   Medical claims by respective Accounts wing
        7. கடன்கள் மற்றும் முன்பணம்  Loans and advances by respective Accounts wing
          8. வங்கி விவரம் Bank details by respective Accounts wing


தகவல் பலகைக்கு இங்கே கிளிக் செய்யவும் 

டெலிகாம் மெக்கானிக் சுழற்சி மாற்றல் கலந்தாய்வு 05-06-2014

டெலிகாம் மெக்கானிக் சுழற்சி மாற்றல் கலந்தாய்வு வருகின்ற 05-06-2014 அன்று மதியம் 2 மணியளவில் DGM CHAMBER -ல் நடைபெற உள்ளது.  தோழர்கள் தவறாமல் கலந்து கொள்ள கேட்டுகொள்கிறோம். விவரங்களுக்கு மாவட்ட செயலரை தொடர்பு கொள்ளவும்