.

Wednesday, June 18, 2014

முயற்சி தன் மெய் வருத்த கூலி தரும் IAS வெற்றியாளர்களுக்கு பாராட்டு

முயற்சி தன் மெய் வருத்த கூலி தரும் 
IAS  வெற்றியாளர்களுக்கு பாராட்டு 
அன்புள்ள தோழர்களே 

இந்திய ஆட்சி பணிக்கான போட்டி தேர்வை 5 லட்சம் பேர் எழுதினர். 12,976 பேர் முதன்மை தேர்வு எழுத தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதில் தேர்வாகி 3003 பேர் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டனர்.  அதில் 1122 பேர் வெற்றி பெற்றுள்ளனர். அனைவருக்கும் நம் பாராட்டுகள்.  உத்தர பிரதேசம், ராஜஸ்தானை அடுத்து தமிழகம் தொடர்ந்து 3-ஆம் இடம் வகிக்கிறது.  

சிறப்பு கவனத்துக்குரியவர்கள்

திரு ஜெயசீலன்:
தமிழகத்தில் வெற்றி பெற்ற 109 பேரில் முதன்மையானவர். அகில இந்திய அளவில் 45 வது இடம் பெறுகிறார். முதல் பாராட்டு, அடிப்படை கல்வி தமிழ் வழியில் அரசுப்பள்ளியில் படித்த இவர் IAS தேர்வை தமிழில் எழுதி வெற்றி பெற்றுள்ளார் என்பது தான். 
எந்த சூழ்நிலையில் தமிழகத்தில்  தனியார் கல்வி வியாபாரிகள் தமிழ் வழியில் அல்ல-தமிழை ஒரு மொழி பாடமாக கூட கற்பிக்க முடியாது என நீதிமன்றங்களில் வல்லடி வழக்கு நடத்தும் பொது, தமிழில் தேனி  மாவட்டம்  கெங்குவார்பட்டி கிராமத்தை சேர்ந்த திரு ஜெயசீலன் வெற்றி பெற்றார் என்பது தமிழுக்கும் தமிழ் வழி கல்விக்கும் கிடைத்த வெற்றி 

' பொறி இன்மை யாருக்கும் பழி அன்று'
ஊனம் குறை அன்று!
செல்வி பினோ செபைன் 
பிறவியிலேயே பார்வையற்றவர். IAS தேர்விற்குரிய புத்தகங்கள் பிரைலி முறையில் இல்லை என்றாலும், பெற்றோர் மற்றும் உறவினர் உதவியோடு வென்று 343-ஆம் இடம் பெற்றுள்ளார். கண் உள்ளோர்க்கெல்லாம் ஒரு புதிய வெளிச்ச பாதையை காட்டியுள்ளார். இவர் சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்தவர்.

கடலூர் புதுப்பாளையம் திரு கீர்த்தி நாராயணன் 
அரசு பள்ளி தலைமை ஆசிரியர் தம்பதியினரின் மகன். இரண்டாவது முயற்சியில் பணியில் இருந்து கொண்டே பயிற்சி பள்ளிகளுக்கு எங்கும் செல்லாமல் 344-ஆம் இடம்.

செல்வி சரிகா 
ஓடிஷா மாநிலம் போலங்கிர் மாவட்டம் கண்டாபாஞ்சி நகரில் சிறிய மளிகை கடை வைத்துள்ள சாதுராம் ஜெயின் அவர்களின் 3வது மகள். பிறவியிலேயே போலியோ இளம்பிள்ளை வாதத்தால் பாதிக்கப்பட்டவர். கல்லூரிக்கு செல்ல விடாமல் போலியோ முடக்கிப்போட்டது. செயலூக்கமும் அறிவுத்திறனும் கொண்ட சரிகா வீட்டில் இருந்தபடியே CA படித்தார். IAS -ல் 527ஆம் இடம் பெற்று போலியோவை புறமுதுகிட செய்தார்.

திரு கவுரவ் அகர்வால் 
ராஜஸ்தான் ஜெய்பூரை சேர்ந்தவர். IIT கான்பூரில் பட்டம், லக்னவ் IIM -ல் முதுநிலை மேலாண்மை + விடாமுயற்சி  விளைவு IAS -ல் முதலிடம் 

இவ்வளவு வசதிகள் இருந்தால் தான் IAS தேரமுடியுமா? இல்லை என்கிறார் 
செல்வி நெல்சன் பிரியதர்ஷினி 
சத்திய மங்கலத்தை அடுத்த உக்கிரம் கிராமத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் மகள்.  நாலும் தெரிஞ்ச ரூட்டுகாரர் தன மகளை அவயத்து முந்தி இருக்க ஊக்கப்படுத்தினார். செல்வி நெல்சன் பிரியதர்ஷினி முதல் முயற்சியிலேயே 88-ஆம் இடம் பெற்றுள்ளார்.

இளையவர்கள், குடும்ப பிரச்சினைகள் ஏதுமில்லை  வென்றார்கள் என நினைகிறீர்களா? இல்லை, இதோ குஜராத்தில் ஒரு வெற்றி கதை !
திருமதி சகுந்தலா வன்சரா 
நார்மாடி பழங்குடி இனத்தை சேர்ந்தவர். குடும்ப வழக்கம் கல்வி மறுக்கப்பட்டது. சமூக வழக்கத்தை புறந்தள்ளி பெண்ணை, "தலைவாரி பூச்சூடி கல்விச்சாலைக்கு போவென்று சொன்னாள் ஓர் அன்னையாய்! "மகள் மஞ்சிதா இன்று காவல் துறை DSP 
மகளை படிக்க வைப்பது என்ன பெரிதா? சகுந்தலா ஓர் வித்தியாசமான மாமியார். அதுவும் தமிழ் சீரியல்களில் வில்லிகளாக மாறிவிட்ட மாமியார்களை பார்க்கும் போது திருமதி  சகுந்தலா ஒரு போற்றுதலுக்குரிய மாமியார் 
தனது மருமகள் சவுதாம்பிகா அவர்களை IAS எழுத தூண்டினார். பழங்குடி பெண் முதலில் மறுத்தார். பின்னர் மாமியாரின் அன்புக்கு பணிந்து எழுதினார். முதலில் தோல்வி. மீண்டும் தோல்வி. ஆனால் தோற்காதது திருமதி சுகுந்தலாவின் ஊக்குவிப்பு மட்டும் தான். 3-ம் முறை இப்போது சகுந்தலாவின் மருமகள் 1061-ஆம் இடம் பெற்று வெற்றி பெற்று சரித்திர சாதனை புரிந்துள்ளார்.





No comments:

Post a Comment