Sunday, August 30, 2015

பணிஓய்வு சிறக்க வாழ்த்துக்கள்


இன்று (31-08-2015) ஓய்வுபெறும் திரு D.சாலமன் தாமஸ் SDE VPT/WLL MTCE CUDDALORE எழுத்தராக 2-6-1981–ல் சேலம் துணைக்கோட்ட அலுவலகத்தில் பணியில் சேர்ந்து ஆறு மாதம் பணிபுரிந்தபின் அங்கிருந்து மாற்றலாகி 24-11-1981 கடலூர் கோட்ட அலுவலகத்தில் ESTABLISHMENT செக்சனில் பணியில் சேர்ந்தார். அப்பொழுது இரண்டுகட்ட ஊதியக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்தியது, 1980–களில் நடைபெற்ற பல்வேறு கேடர்களுக்கான பல இலாக்கா தேர்வுகளை திறம்பட நடத்தியது. ஊழியர் பிரிவு முற்றிலும் கணினி மயமாக்கபட்டபோது அதற்கான அவரது பங்களிப்பு சிறப்பாக அமைந்தது. அவரது பங்களிப்பு இலாக்கா பணியில் மட்டுமில்லாமலும், தேசிய தொழிற்சங்கத்தில் (FNPTO) மாவட்ட செயலராக இருந்து தொழிற்சங்க பணியிலும் தனது முத்திரையை பதித்துள்ளார்.
பின்னர் 1996-ல் இலாக்கா போட்டித்தேர்வில் JTO–வாக தேர்ச்சி பெற்று பண்ருட்டியில் JTO OUTDOOR ஆக பணியில் சேர்ந்தார். பண்ருட்டி நகர பகுதியில் பல இடங்களில் பயன்பாட்டில் இல்லாமல் பூமிக்கடியில் வீணாக இருந்த பழைய கேபிள்களை மீட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வந்து அங்கும் தனது தனித்திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.
  1-1-2000 அன்று மாற்றலில் வந்து கடலூர் JTO-MARR ஆக பணியில் சேர்ந்து கடலூர்,விழுப்புரம் மாவட்டத்தில் பல கிராமங்களில் புதிய MARR VPT-களை நிர்மாணிப்பதிலும், சரிவராமல் இயங்கிய பல VPT-களை கிராம மக்களுக்கு பயன்படும் வகையில் புதிய இடங்களில் மாற்றியமைத்து இயங்கவைத்ததும், பல கிராமங்களில் புதிய டவர்களை நிர்மாணித்தும் இப்பணிகளை தனி டீம் ஆக ஆக்கி சிறந்த லீடராகவும் செயல்பட்டார். VPT-களை STD PCO-களாக மாற்றி அதனை அதிக வருமானம் கிடைக்கசெய்து நஷ்டத்தில் இயங்கிவந்த VPT-களை லாபத்தில் இயங்கவைத்து தமிழ் மாநிலத்திலேயே கடலூர் மாவட்டத்திற்கு  அதிகப்படியான வருமானத்தை பெற்றுத்தந்தார். மாநில நிர்வாகம் மற்ற மாவட்டங்களுக்கு கடலூர் மாவட்டம் VPT-களை STD PCO-களாக மாற்றி அதன்மூலம் அதிக வருமானம் பெற்றதை மேற்கோள் காட்டி கடிதம் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.
விழுப்புரம் மாவட்டம் கல்வராயன் மலை பகுதியில் இவருக்கு தெரியாத மலைகிராமங்களே இல்லை என சொல்லலாம். பல மலைக் கிராமங்களில் போக்குவரத்து வசதிகூட இல்லாத காலத்தில் நடந்து சென்றே தனது குழுவுடன் இரவு பகல் என்று பாராமல் பணி செய்து அக்கிராமங்களுக்கு குறிப்பிட்ட காலத்தில் தொலைபேசி வசதி ஏற்படுத்தி கொடுத்து நமது மாவட்டத்திற்கு பெருமைசேர்த்தார். இதில் இவரது பங்கு குறிப்பிடத்தக்கது. பின்னர் MAAR VPT-கள் WLL VPT-களாக மாற்ற பல ஊர்களில் புதிய WLL BTS-களை குறிப்பிட்ட காலத்திற்குள் நிர்மாணித்து கொடுத்ததிலும் இவரது பங்களிப்பு சிறப்பாகும். மேலும் பல தொலைபேசி நிலையங்களில் பழைய சோலார் பேனல்களை நிர்மாணித்து சூரியசக்தியினை பெற்று மின்செலவைக் குறைத்து, அதனால் நமது மின்சாரக் கட்டணத்தையும் குறைத்துக் காட்டிள்ளார். சிதம்பரம் பகுதியில் உள்ள ஒருசிறிய தொலைபேசி நிலையத்தில் ஒரு மாதத்தில் ரூபாய் ஐந்தாயிரம் மின்சாரக்கட்டணம் குறைந்துள்ளதை கண்டு  மாதம்  சந்தேகப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் சர்பிரைஸ் விசிட் செய்தும் உள்ளனர். கல்வராயன்மலையில் அமைந்துள்ள வெள்ளிமலை தொலைபேசி நிலையத்தில் முழுக்க முழுக்க சோலார் பேனல்களைக்கொண்டு பகல் முழுவதும் மின்சாரம் இல்லாமல் சூரியசக்தி மூலம் மட்டுமே இயங்கும் படியானவகையில் உபகரணங்களை நிறுவி மின்சார செலவை குறைத்தும் காட்டியுள்ளார். சில அதிகாரிகள் தங்களின் சுய வெறுப்பு காரணமாக நன்கு இயங்கிவந்த அந்த குழுவை கலைத்தது துரதிர்ஷ்டவசமாகும். இக்குழுவைக் கலைத்ததன் மூலம் குழுவின் உழைப்பு அனைத்தும் வீணாகியது
திரு.D.சாலமன்தாமஸ் தனது சக ஊழியர்களிடம் தான் ஒரு அதிகாரி என்று இல்லாமல் சக தோழர், நண்பர் என்ற உரிமையில் பழகுவதிலும், சங்க வேறுபாடு இன்றி அனைத்து சங்கத்தினரிடம் இனிமையாக பழகுவதிலும் அவருக்கு நிகர் அவரே. திரு. திரு.D.சாலமன்தாமஸ் அவர்களின் துணைவியார் கடலூர் GM அலுவலகத்தில் பணிபுரியும் தோழியர்.கோதைசாலமன் நமது சங்கத்தின் உறுப்பினர் ஆவார். திரு.D.சாலமன்தாமஸ் அவர்களின் பிறந்த நாள் ஆன இன்று அவரது பணி ஓய்வு நாள் வருவதும் சிறப்பாகும். அவரது பணி ஓய்வுக்காலம் சிறப்பாக அமைய மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்.
வாழ்த்து தெரிவிக்க தொடர்பு எண்: 9486101393
செயலகக்கூட்டம்-கடலூர்


31-08-2015 திங்கள் மாலை 5.00 மணிக்கு மாவட்ட அளவிலான செயலகக்கூட்டம் கடலூர் மாவட்ட சங்க அலுவலகத்தில் நடைபெறும்.  மாவட்ட சங்க நிர்வாகிகள். கிளைச்செயலர்கள் மற்றும் கிளைப்பொறுப்பாளர்கள், முன்னணித் தோழர்கள் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Friday, August 28, 2015வாழ்த்துகிறோம்!!

                 நமது அன்பிற்குரிய மாநிலத்தலைவர்  தோழர் M. லட்சம் அவர்கள்                   31-08-2015  அன்று பணி ஓய்வு பெறுகிறார். அவரைப் பற்றி சிறு குறிப்பினை பகிர்ந்து கொள்வதில் மாவட்ட சங்கம் பெருமை அடைகிறது.

தனது எம்.ஏ படிப்பை குடும்ப சூழ்நிலை காரணமாக தொடர முடியாமல் தனது மூத்த சகோதரரின் அறிவுரையின்படி சென்னை ITC கம்பெனியில் பணியில் சேர்ந்தார். சுமார் 3 ஆண்டுகளுக்குப்பின் 1983 ஜனவரி18-ல் தபால் தந்தி துறையில் அன்றைய தமிழ்நாடு வட்டம், செங்கல்பட்டு மாவட்டத்தில் மதுராந்தகம் தொலைபேசி நிலையத்தில் டெலிபோன் ஆபரேட்டராக பணியில் சேர்ந்தார்.

பணியில் சேர்ந்த நாளிலிருந்து தொழிற்சங்க பணியில் தன்னை இணைத்துக் கொண்டவர். கிளைச் செயலராக பொறுப்பேற்று திறம்பட செயலாற்றியவர். தோழர். காமராஜ் மீதான தாக்குதல், தோழர்கள் NK,SSK மீதான காவல்துறையில் பொய் புகார், காஞ்சி கோட்டச் செயலர் சங்கரன் மீதான காவல்துறை பிரச்னைகளை வென்றெடுக்க முன்நின்றவர்.

அதன்பின்பு மதுரை தொலைதொடர்பு மாவட்டத்தில் தனது சொந்த ஊரான கம்பத்திற்கு மாற்றலாகி பணியில் சேர்ந்தார். மதுரை மாவட்டத்தில் கம்பம் கிளைச் செயலர், தொடர்ந்து மாவட்டச் சங்க நிர்வாகி, LJCM உறுப்பினர் என பல்வேறு பொறுப்புகளை ஏற்று திறம்பட பணியாற்றியவர். இன்று NFTE  என்ற மாபெரும் இயக்கத்தின் மாநிலத் தலைவராக மாண்போடு செயலாற்றி வருகிறார். அவரது செயல்பாட்டில் என்றைக்குமே ஊனம் தடையாக இருந்ததில்லை.

தொழிற்சங்கத்தில் மட்டுமல்ல தனது சொந்த ஊரில் பல்வேறு பிரச்னைகளுக்கு சொந்த பந்தங்களுக்கு அப்பாற்பட்டு நியாயமான, சுமூகமான தீர்வை சொல்பவர் என்ற நற்பெயரும் அவருக்கு உண்டு. திராவிட கொள்கைகளில் அழுத்தமான பார்வை கொண்டவர்.

தி.மு.கவின் தீவிரமான  தொண்டர் என்றபோதிலும் மற்ற கட்சியினரிடமும் கனிவாக பழகக் கூடியவர். தனது கட்சி சார்பாக தனி தொழிற்சங்கம் துவக்கப்பட்டபோதிலும் தனது இறுதிநாள்வரை NFTE இயக்கத்தில் தான் பணியாற்றுவேன் என தனது கட்சித் தலைவர்களிடம் ஆணித்தரமாக கூறியவர். அத்தகைய மனிதநேயமிக்க மாநிலத் தலைவர் தோழர். லட்சம் வரும் 31.08.2015 அன்று இலாகா பணியிலிருந்து ஓய்வு பெறுகிறார்.

பணி ஓய்வு காலம் சிறக்க கடலூர் மாவட்ட சங்கத்தின் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.....


NFTE-மாவட்ட சங்கம், கடலூர்
 செப்டம்பர்-2 வேலைநிறுத்த விளக்கக்கூட்டம்-கடலூர்


கடலூர் GM அலுவலக வளாகத்தில் இன்று (28-8-2015) மதியம் செப்டம்பர்-2 வேலைநிறுத்த விளக்கக்கூட்டம் NFTE கிளைத்தலைவர் D.துரை, BSNLEU கிளைத்தலைவர் M.கணேசன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. NFTE வெளிப்பகுதி கிளைச்செயலர் E.விநாயகமூர்த்தி வரவேற்புரை வழங்கினார். NFTE மாவட்ட செயலர் இரா.ஸ்ரீதர், BSNLEU மாவட்டசெயலர் KT.சம்பந்தம் கருத்துரை வழங்கினர். NFTE மாநில அமைப்புசெயலர் தோழர். N.அன்பழகன், BSNLEU மாநிலத்துணைத்தலைவர் தோழர்.A.அண்ணாமலை ஆகியோர் போராட்ட சிறப்புரை வழங்கினர். BSNLEU கிளைச்செயலர் S.சவுந்தர்ராஜன் நன்றியுரை வழங்கினார். தோழர்கள்,தோழியர்கள் திரளாக கலந்துகொண்டனர். கூட்ட ஏற்பாடுகள் சிறப்பாக செய்த நமது தோழர்.S.குருபிரசாத் அவர்களுக்கு நமது வாழ்த்துக்கள்.

                         
Monday, August 24, 2015
வாழ்த்துகள்

TTA தேர்வில் வெற்றி பெற்ற தோழர்கள் அனைவருக்கும் நமது மாவட்டச் சங்கம் மனதார பாராட்டுகிறது.

              V. இளங்கோவன் / VDC
S. செல்வம் / VLU
R. ராதாகிருஷ்ணன் / CDL
G. நடராஜன் / CDL
E.C. கண்னன் / KAC
H. சுந்தர்ராஜ் / ESK
R. செல்வம் / VLU
                                                                                                                                               தோழமையுடன்

                  மாவட்டச் சங்கம். NFTE-கடலூர்.

Saturday, August 22, 2015

செப்டம்பர்-வேலைநிறுத்த விளக்க கூட்டம்
பண்ருட்டி-அரகண்டநல்லூர்-விழுப்புரம்

செப்டம்பர்-வேலைநிறுத்த விளக்க கூட்டம் இன்று (22-08-2015)  பண்ருட்டி,அரகண்டநல்லூர் மற்றும் விழுப்புரத்தில் நடைபெற்றது. பண்ருட்டியில்  நமது மாநிலத்துணைத்தலவர் தோழர்.V.லோகநாதன், BSNLEU மாவட்டத்தலைவர் தோழர் N.சுந்தரம் ஆகியோர் போராட்ட விளக்க உரையாற்றினர்.  
அரகண்டநல்லூரில் நமது மாவட்ட தலைவர் R.செல்வம், 
விழுப்புரத்தில் நமது சம்மேளன செயலர் தோழர் G.ஜெயராமன், 
BSNLEU மாவட்டத்தலைவர் தோழர் N.சுந்தரம் ஆகியோர் 
விளக்க உரையாற்றினர். நமது NFTE மாவட்ட செயலர் தோழர்.இரா.ஸ்ரீதர், BSNLEU மாவட்ட செயலர் தோழர். K.T.சம்பந்தம் ஆகியோரும் கலந்துகொண்டு பேசினர். TMTCLU மாவட்ட செயலர் தோழர்  G.ரங்கராஜு பண்ருட்டியில் கலந்துகொண்டு விளக்க உரையாற்றினார். சிறப்பாக ஏற்பாடுகள் செய்திருந்த கிளைசெயலர்களுக்கு மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்.Friday, August 21, 2015

இந்த தேசத்தின் சொத்து-ப. ஜீவானந்தம்

மகாத்மா காந்தியால் இந்த தேசத்தின் சொத்துஎன்று பாராட்டப்பட்டவரும் பொதுவுடமைக் கொள்கைக்காகப் பாடுபட்டவருமான 
ப. ஜீவானந்தம் பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 21). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
நாகர்கோவிலை அடுத்த பூதப்பாண்டி என்ற ஊரில் பிறந்தார் (1907). அந்த கிராம தெய்வத்தின் பெயரான சொரிமுத்து என்ற பெயரை பெற்றோர் இட்டனர். இளம் வயதிலேயே எழுத்தாற்றல் மிக்கவராகத் திகழ்ந்தார். ஒன்பதாவது படிக்கும் சமயத்தில் இவர் எழுதிய முதல் கவிதையே காந்தியையும் கதரையும் பற்றியது.
பத்தாம் வகுப்பு படித்த சமயத்தில் சுகுணராஜன் அல்லது சுதந்திரவீரன்என்ற நாவலை எழுதினார். அடுத்து ஞானபாஸ்கரன்என்ற நாடகத்தை அவரே எழுதித் தயாரித்து, நடித்தார். காந்திஜியின் ஒத்துழையாமை இயக்கத்துக்கான அறைகூவலால் ஈர்க்கப்பட்டார்.
அந்நியத் துணிகள் பகிஷ்கார இயக்கத்தின்போது தேசபக்தர் திருகூடசுந்தரம் பிள்ளையின் பிரச்சார உரையை கேட்ட இவர், அன்றிலிருந்து கதராடை அணியத் தொடங்கினார். தீண்டாமை ஒழிப்பில் தீவிரமாக ஈடுபட்டார். மகனின் போக்கு தந்தைக்குப் பிடிக்கவில்லை. இருவருக்குமிடையே வாக்குவாதம் எழுந்தது. தன் கொள்கைக்காக வீட்டைத் துறந்தார் இந்த இளைஞர்.
அப்போது 17 வயதுதான். 1932-ல் ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்துகொண்டு சிறை சென்றார். சிறையில் இவரது சிந்தனைப்போக்கு மாறியது. கம்யூனிசக் கோட்பாடுகளால் ஈர்க்கப்பட்டார். அந்தசமயத்தில் பகத்சிங் தூக்கிலிடப்பட்டதை சகித்துக்கொள்ள முடியவில்லை. சீறி எழுந்தார்.
அனல் கக்கும் இவரது பேச்சு இளைஞர்களை எழுச்சியடைய வைத்தன. சிறையிலிருந்தபோது பகத்சிங் தன் தந்தைக்கு எழுதிய நான் ஏன் நாத்திகனானேன்?’ என்ற நூலைத் தமிழில் மொழிபெயர்த்தார். அதற்காக இவரைக் கைது செய்து கை, கால்களில் சங்கிலியிட்டு வீதி வீதியாக இழுத்துச் சென்று திருச்சி சிறையில் அடைத்தனர் போலீஸார்.
இவரது 40 ஆண்டுகால பொதுவாழ்வில் ஏறக்குறைய 10 ஆண்டு கள் சிறையில் கழிந்தது. நாடு விடுதலை அடையும் வரை பல்வேறு சூழல்களில் நடைபெற்ற தொழிலாளர் போராட்டங்களுக்காக இவர் எழுதிய பாடல்களும் ஊர் ஊராகச் சென்று இவர் ஆற்றிய உரைகளும் தொழிலாளர்களை எழுச்சிபெறச் செய்தன.
மார்க்சிய கருத்துகளை தமிழில் கூற பல புதிய பதங்களை உருவாக்கினார். 1940களின் இறுதியிலும் 50களிலும் ஜீவா எழுதிய சோஷலிச சரித்திரம்மற்றும் சோஷலிச தத்துவம்ஆகிய நூல்களைத் தொடர்ந்து ஏராளமான சோவியத் நூல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டன.
 ‘சமதர்மம்’, ‘அறிவு’, ‘ஜனசக்திஉள்ளிட்ட இதழ்களின் ஆசிரியர் பொறுப்பையும் ஏற்றிருந்தார். சென்னை வண்ணாரப்பேட்டை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, 1952 முதல் 1957 வரை சட்டமன்ற உறுப்பினராக செயல்பட்டார். 1959-ல் தாமரைஎன்ற இலக்கிய இதழைத் தொடங்கினார்.
1961-ல் கலை இலக்கியப் பெருமன்றம்என்ற அமைப்பை உருவாக்கினார். இயக்கம், போராட்டம், சிறை என்று பொதுவாழ்க்கையில் தீவிரமாக ஈடுபட்டு வந்தாலும் இலக்கியத் திறனையும் தக்கவைத்துக் கொண்டவர். புதுமைப் பெண்’, ‘இலக்கியச் சுவை’, ‘மதமும் மனித வாழ்வும்’, ‘சங்க இலக்கியத்தில் சமுதாயக்காட்சிகள்உள்ளிட்ட பல நூல்களையும் எழுதியுள்ளார்.
தமிழக அரசு இவரது நினைவைப் போற்றும் வகையில் நாகர் கோவிலில் பொதுடைமை வீரர் ப. ஜீவானந்தம் மணிமண்டபம் அமைத்துள்ளது. புதுச்சேரியில் அரசுப் பள்ளிக்கு இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. தன்னலம் கருதாமல் இளைய தலை முறையினருக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்த      ப. ஜீவானந்தம், 1963-ம் ஆண்டு தமது 55-ம் வயதில் மறைந்தார்.
நன்றி - தி இந்து தமிழ்