.

Friday, March 31, 2017

கள்ளக்குறிச்சி
தோழர் K.பாண்டியன்
பணி நிறைவு பாராட்டுவிழா காட்சிகள்










Thursday, March 30, 2017

பணி நிறைவு வாழ்த்துக்கள்!!
31.3.2017 அன்று பணி ஓய்வு பெறும்
 திரு.R.அசோகன்AGM(Transmission ) – கடலூர்

திரு N.பாலகிருஷ்ணன் AGM(NWP-CM) – கடலூர்


தோழர் K.பாண்டியன் TT கள்ளக்குறிச்சி


தோழர் N.குபேந்திரன் TT விழுப்புரம்

மற்றும்
தோழர் P.ஜெயராமன் TT கள்ளக்குறிச்சி
தோழர் T.கருப்புசாமி TT நெய்வேலி
தோழர் N.வீரமுத்து TT விழுப்புரம்
ஆகியோருக்கு கடலூர் மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்!!

Tuesday, March 28, 2017

Print Page
தேசிய தொலைத்தொடர்பு ஊழியர் சம்மேளனம்
கடலூர் GM அலுவலகக்கிளை
                                           
29.03.2017 புதன் கிழமை
 மதிய உணவு இடைவேளையில்
கிளைத்தலைவர் தோழர் K.சீனிவாசன் தலைமையில்
கிளைச் செயற்குழு
நடைபெறும்.
சிறப்புரை
தோழர் இரா.ஸ்ரீதர் மாவட்ட செயலர்

ஆய்படு பொருள்:

# சுழன்றுகொண்டிருக்கும் சுழல் மாற்றல்
# 2017-ஊதியக்குழு-கருத்தரங்கம்
        # பணிஓய்வு பாராட்டுவிழா

அனைத்துத் தோழர்களும்/தோழியர்களும் தவறாது கலந்துகொள்ளவும்
தோழமையுடன்
S.இராஜேந்திரன்

கிளைச்செயலர்

Monday, March 27, 2017

AITUC
கவன ஈர்ப்பு 
கோரிக்கை மாநாடு 

கடலூர் AITUC  மாவட்டக் குழு சார்பில் 26-03-2017 அன்று அனைத்து துறைகளில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களை உள்ளடக்கிய கவன ஈர்ப்பு மாநாடு நெய்வேலியில் நடைபெற்றது. கூட்டத்தில் TMTCLU  மா நிலச் பொதுச் செயலர் R.செல்வம்  , மாவட்டச் செயலர் இரா.ஸ்ரீதர் ,மாநில அமைப்புச் செயலர் தோழர் V.இளங்கோவன் மற்றும் TMTCLU மாவட்டச் செயலர் தோழர்G.ரங்கராஜ்  உள்ளிட்ட பல தோழர்கள் மாநாட்டில் பங்கேற்று சிறப்பித்தனர்.

நமது மாநில சங்க அலுவலகக் காப்பாளர்
தோழர் N. கார்த்தி
முதலாமாண்டு நினவஞ்சலி
 27.3.2017.

தோழர் கார்த்தியின்  மூத்த சகோதரர் தனது மனைவியுடன் மறைந்த தோழரின் நினைவுகளை மாவட்ட செயலர் தோழர் இரா.ஸ்ரீதர் அவர்களை அலுவலகத்தில் 23.3.2017 அன்று நேரில் சந்தித்து பகிர்ந்துகொண்டார்.


Saturday, March 25, 2017

திரு R.அசோகன் AGM(Transmission)
பணி ஓய்வு பாராட்டு

கடலூர் திரு.அசோகன் AGM(Transmission) அவர்கள் இந்த மாதம் இலாக்கா பணியிலிருந்து ஓய்வு பெறுவதையொட்டி அவருடைய பணியை பாராட்டும் வகையில் அவர் பணிபுரியும் கடலூர் பொதுமேலாளர் அலுவலக அதிகாரிகள் /ஊழியர்கள் சார்பில் பாராட்டு விழா இன்று மாலை பொதுமேலாளர் அலுவலக வளாகத்தில் திருமதி D.கலைவாணி AGM(Admn) அவர்கள் தலைமையில் நடைபெற்றது. தோழியர் V.வசந்திஅவர்கள் வந்திருந்த அனைவரையும் வரவேற்றார். கடலூர் முதன்மைப் பொதுமேலாளர் திரு மார்ஷல் ஆண்டனி லியோ அவர்கள் கலந்து கொண்டு திரு.அசோகன் அவர்களுக்கு நினவுப்பரிசு வழங்கி வாழ்த்தினார். மேலும் திரு K.சமுத்திரவேலு DGM(NWP-CFA), திருமதி ஜெயந்தி அபர்ணா DGM(CM), AIBSNLEA மாவட்ட செயலர் திரு S.ஆனந்த் AGM (NWP/CM), திரு K.தனசேகர் AO Plg, திரு R.S.வேதராமன் SDE (Transmission) திரு S.ராமநாதன் SDE, திருமதி சித்ரா நாகராஜன் A.O, திரு ஹரிஹரன் JAO, NFTE மாவட்டசெயலர் தோழர் இரா.ஸ்ரீதர், முன்னாள் மாவட்ட செயலர் தோழர் P.சுப்ரமணியன்,FNTOமாவட்ட செயலர் தோழர் R.ஜெயபாலன்,திரு. கோபால்சாமி-BSNLEU ஆகியோர் வாழ்த்தி பேசினர். அவ்வமயம் அதே நாளில் ஓய்வு பெறும் திரு K.பாலகிருஷ்ணன் (தோழர் பால்கி) AGM CM அவர்களும் பொதுமேலாளர் அலுவலகம் சார்பில் கெளரவிக்கப்பட்டார். வந்திருந்து வாழ்த்தியவர்களுக்கும், விழாவில் கலந்து கொண்டவர்களுக்கும் திரு R.வரதராஜன் SDE(Admn)அவர்கள் நன்றியுரைத்தார். விழாவினை சிறப்பாக ஏற்பாடுகள் செய்த நமது தோழர்களையும், பேருதவி புரிந்த ஒப்பந்த ஊழியர்களையும்  கடலூர் மாவட்ட சங்கத்தின் சார்பில் வாழ்த்துகிறோம். 





Friday, March 24, 2017

தோழர் பகத்சிங் நினைவேந்தல் விழா

கடலூரில் மாவட்ட சங்க அலுவலகத்தில் கிளைத்தலைவர் தோழர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. தோழர் பகத்சிங் திருஉருவப்படத்திற்கு மாலை அணிவித்து சிறப்புரையாற்றினார் தோழர். கவிஞர் பால்கி.


TMTCLU-தர்ணா


கடலூர் ZONE-2 பகுதியில் பணிபுரியும் நூற்றுக்கணக்கான ஒப்பந்த ஊழியர்களுக்கு சென்ற மாத சம்பளம் பட்டுவாடா செய்யப்படாததைக் கண்டித்து கடலூர் GM அலுவலக வளாகத்தில் மாலை நேர தர்ணா மாவட்டத்தலைவர் தோழர் MS.குமார் தலைமையில் நடைபெற்றது. TMTCLU கிளைச்செயலர் தோழர் R.பன்னீர்செல்வம் வரவேற்புரையாற்றிட , TMTCLU மாவட்ட செயலர் தோழர் G.ரங்கராஜு, NFTE மாவட்ட செயலர் தோழர் இரா.ஸ்ரீதர், NFTE மாநில சிறப்பு அழைப்பாளர் தோழர் V.இளங்கோவன், NFTE மாநிலத் துணைத்தலைவர் தோழர் V.லோகநாதன் TMTCLU மாநிலப்பொதுசெயலர் தோழர் R.செல்வம் ஆகியோர் கண்டன விளக்கவுரையாற்றினர். 



Thursday, March 23, 2017

மாவீரன் பகத்சிங் நினைவேந்தல்

23.3.2016 காலை 9.00மணி
 கடலூர் மாவட்ட சங்க அலுவலகம்

பகத்சிங் நினைவேந்தல் உரை
தோழர் கவிஞர் பால்கி

Wednesday, March 22, 2017

கவுன்சிலிங் தள்ளிவைப்பு
  • நாளை (23.3.2017 வியாழன்) நடைபெறவிருந்த டெலிகாம் டெக்னீசியன் மாற்றலுக்கான கவுன்சிலிங் தள்ளி வைக்கப்படுகிறது.
  • வருகின்ற 6.4.2017-ல் கவுன்சிலிங் நடைபெறும்.
  • 1.4.2016-க்கு பதில் 1.4.2017 தேதியின் அடிப்படையில் நடைபெறும்.
  • 31.3.2021க்குள் ஓய்வு பெறுபவர்கள் மாற்றலில் இருந்து விதிவிலக்கு பெறுவார்கள்.
  • கிராமப்புற விதிவிலக்கு விலக்கிக்கொள்ளப்படுகிறது.
  • மகளிருக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.

Monday, March 20, 2017

TMTCLU
தமிழ் மாநில தொலைத்தொடர்பு
ஒப்பந்த ஊழியர் சங்கம்
கடலூர் மாவட்டம்
கடலூர் மாவட்டம் முழுவதும் zone-2ல் பணிபுரியும் நூற்றுக்கணக்கான ஒப்பந்த ஊழியர்களுக்கு பிப்ரவரி மாத சம்பளம் இன்று வரை வழங்கப்படாததைக் கண்டித்து
22.3.2017 புதன்கிழமை மாலை 5.30 மணியளவில்
கடலூர் பொதுமேலாளர் அலுவலக வாயிலில்
மாவட்டம் தழுவிய
பெருந்திரள் தர்ணா
நடைபெறும். தோழர்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டு கோரிக்கையை வென்றெடுப்பாம்!

Saturday, March 18, 2017

உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ?
( கூடுதல் ஒருமணி நேரப் பணி )

நட்டத்தைக் காரணம் காட்டி BSNL நிறுவனத்தை மூடிவிட அனுமதியோம் என ஊழியர் அதிகாரிகள் சங்கங்கள் தாமாக முன்வந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தோம்.  100 நாள் வேலைத் திட்டம், புன்னகையுடன் சேவை, நலந்தானா என்பவற்றைத் தொடர்ந்து BSNL ஆப்பரேஷனல் லாபம் காணத் தொடங்கியதுமுழுமையான லாபம். முன்னணி மக்கள் நிறுவனம் என்பதை நோக்கி நாம் இப்போது செயல்படுத்துவதுதான், மக்களிடம் நேரடியாக BSNL தயாரிப்புகளைக் கொண்டு சென்று சந்தைப்படுத்துவது என்ற ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவரும் ஒருமணி நேரம் கூடுதல் உழைப்பு நல்குவதுதிட்டம்.
          நாட்டின் பலபகுதிகளிலும் இந்தத் திட்டம் சிறப்பாக செயல்பட்டுவருகிறதுநமது கடலூர் மாவட்டத்தில் 06/03/2017 அன்று நமது மாவட்ட முதுநிலைப் பொது மேலாளர் திரு ஆர். மார்ஷல் ஆன்டனி லியோ அவர்களால் சிறப்பாகத் துவக்கி வைக்கப்பட்டது. கடந்த 10 / 12 நாள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவே இந்தப் பதிவு.
          அதற்கு முன்பு நமது சங்க அலுவலகத்தில் அனைத்து அதிகாரிகள் ஊழியர் சங்கத் தலைவர்களின் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. சந்தாதாரர்களுக்கு விளக்குவதற்காக BSNL நடைமுறைப்படுத்தும் பல்வேறு திட்டங்கள் மற்றும் கட்டண விகிதம் பற்றி நிர்வாகம் ஒரு கூட்டம் நடத்த வேண்டும் எனக் கோரினோம்அந்தக் கூட்டம் பயனுள்ளதாக அமைந்தது.
          கடலூர் மஞ்சக்குப்பம் மணிக்கூண்டு அருகே 06/03/2017 மாலை முதலாவது மேளாஅனைத்து சங்கத்திலிருந்து திரளான தோழர்கள் வந்திருந்தனர். நமது முதுநிலைப் பொது மேலாளர் கலந்துகொண்டது நமக்கு உற்சாகம் தருவதாக அமைந்ததுசுமார் 200 புதிய சிம் கார்டுகள் விற்பனை செய்யப்பட்டது.
          அன்று முதல் கடலூரில் குண்டு உப்பலவாடி, உச்சிமேடு, மஞ்சக்குப்பம் அங்காளம்மன் கோயில் தெரு (மார்கெட் அருகே), வண்டிப்பாளையம், போடிச் செட்டித் தெரு முதலிய பல்வேறு இடங்களில் நமது NFTE சங்க முயற்சியில் மேளாக்கள் நடைபெற்று வருகின்றன.      (BSNLEU சங்கத் தோழர்கள் தனியாக வேறு இடங்களில் நடத்துகிறார்கள்)
          விடுமுறை தினங்கள் உட்பட (ஞாயிறு தவிர) மேளா நடைபெறுகிறது.
          மக்கள் தரும் ஆதரவு நமக்கு உற்சாகம் தருகிறதுநாம் பெற்ற அனுபவத்தின் காரணமாக ஒரு மணி நேரம் கூடுதல் என்பதற்கு மாறாக 4 மணி நேரத்திற்கு மேல் கூடுதல் பணியாற்றுகின்றோம்ஏனெனில், 5.30 முதல் 6.30 / 7 மணி வரை மக்கள் அதிகம் வருவதில்லைபின்னர் கூட்டம் தொடர்ந்து வந்து கொண்டு இருக்கிறது. அவர்களுக்கு விளக்கம் அளிப்பது, விண்ணப்பப் படிவம் நிரப்புவது என பணிகளைத் தோழர்கள் உற்சாகமாகச் செய்கிறார்கள். பல நாட்கள் திரு . சிவக்குமரன் (வெளிப்புறக் கோட்டப் பொறியாளர்) மேளா பந்தலுக்கு வந்து நம்மை உற்சாகப்படுத்துகிறார். தினசரி FNTO மாவட்டச் செயலர் தோழர் ஆர். ஜெயபாலன், ஓய்வூதிய AIBSNLPWA தோழர்களும் கலந்து கொள்கின்றனர்
          தினசரி சராசரி 80 சிம்கள் மற்றும் சராசரி பிராட்பேண்ட் வசதியுடன் 2 தரைவழி இணைப்புகளும் விற்பனையாகின்றன.
          இது வரை 800 க்கு மேற்பட்ட சிம்கள் மற்றும் 50 க்கும் மேற்பட்ட இணையத்துடன் கூடிய லேண்டு லைன் இணைப்புகள் சந்தைப்படுத்தப்பட்டுள்ளனமேளாவைத் தொடர்ந்து விரைவில் சிம் ஆக்டிவேஷனும் நடைபெறுகிறது.
          கடலூரில் தோழர்கள்  விநாயக மூர்த்திஎஸ்இராஜேந்திரன், குழந்தை நாதன்மஞ்சினி,  ஆர்.பன்னீர் செல்வம்.சி.முகுந்தன், இளங்கோ, ராகவன், ஆர். கிருஷ்ணமூர்த்தி, , .எஸ். குருபிரஸாத்,  எஸ். ரங்கநாதன் முதலிய தோழர்களோடு மாவட்டச் செயலர் இரா.ஸ்ரீதரும் கலந்து கொள்கிறார்கள்
அங்காளமன் கோயில் தெரு (அனுகிரகா அப்பார்ட்மெண்ட் அருகே) மேளாவின்போது தோழியர்கள் கீதா, மோகனா கலந்து கொண்டதைச் சிறப்பாகக் குறிப்பிட விரும்புகிறோம்ஏனெனில், அப்பார்ட்மெண்ட்டில் குடியிருப்போர் பலரையும் அணுகி சிம் விற்பனை செய்தனர்தோழியர்களுக்கு நமது பாராட்டு. மேலும் ஒப்பந்த ஊழியர்கள் தோழர்கள் எம்.எஸ்.குமார், அண்ணாதுரை, கணபதி முதலிய தோழர்களும் தினமும் பங்கேற்கின்றனர்.
இந்தத் தோழர்கள் தோழியர்கள் பெயரைக் குறிப்பிடக் காரணம் ஏனைய தோழர்களும் தோழியர்களும் அன்றைய நாள் மேளா நடைபெறும் இடத்தைக் கேட்டறிந்து பெருமளவில் கலந்து கொண்டு இந்த மக்கள் இயக்கத்தில் பங்கேற்க வேண்டும் என்ற நமது பெரு விழைவேயாகும்.
ஏனைய ஊர்களில் நடைபெறும் மேளாக்கள் குறித்த தகவலும் புகைப்படமும் NFTE கடலூர் வாட்ஸ்அப் குரூப்பில் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.
சிதம்பரத்தில் அனைத்து சங்கத் தோழர்களும் இணைந்து தோழர் வி. கிருஷ்ணமூர்த்தி TT (Sales) தலைமையில் சிறப்பாக விற்பனையை முன்னெடுத்துச் செல்கின்றனர்.
விழுப்புரத்தில் NFTE தோழர்கள் தனியாகவும் ஓய்வுபெற்றோர் தனியாகவும் நடத்துகின்றனர்.
பண்ருட்டியில் மேளா நடைபெறுகிறது. விருத்தாஜலம், உளுந்தூர்பேட்டை, திண்டிவனத்தில் ஊழியர்கள் தனி நபர்களாக தங்கள் முயற்சியை மேற்கொள்கின்றனர்இங்கெல்லாம் பணிகள் ஒருங்கிணைக்கப்பட தலமட்ட அதிகாரிகள் முயற்சிக்க வேண்டும் என விரும்புகிறோம்.
இறுதியாக, நிர்வாகத்திற்கு ஒரு வேண்டுகோள்: பயோ மெட்ரிக் ரேகைப் பதிவு இயந்திரம் (ஆதார் சரிபார்ப்பிற்காக) வழங்கப்படுதல் பணிகளைச் சுலபமாக்கும் என்பதை விட மக்கள் அதை அதிகம் விரும்புகிறார்கள்ஜெராக்ஸ் எடுக்கும் அலைச்சல், நேரம் மிச்சமாகிறது. டெர்ம் செல் புகார்கள் இல்லாது போகும்எனவே நிர்வாகம் பரிசீலிக்க வேண்டும்.
நம்முடைய தோழர்களுக்கு:
மக்களிடம் செல். அவர்களுக்கு கற்றுக் கொடுஅவர்களிடமிருந்து மேலும் கற்றுக் கொள்”  ஒரு அரசியல் அறிஞர் சொன்னது தான். BSNL மக்களின் சொத்துஅதை நிலைநிறுத்தவும் மக்களிடம் தான் செல்ல வேண்டும்செல்வோம்நம்மால் முடியாதென்றால், பிறகு யாரால்?
ஊதிய மின்றி உழைப்பு தானம் என்பது புரட்சியின் வெற்றிக்குப் பிறகு சோவியத் கட்டமைப்பிற்கு தோழர் லெனின் மக்களைத் திரட்டியது. ஏன், நமது தமிழ் மரபில் குடிமராமத்து பணிகளை வயல்களுக்கான மதகுகள், தண்ணீர் பாதைகள், வாய்க்கால்கள், குளங்களை கிராமமே ஒன்று திரண்டு செப்பனிட்டதுதான்.
வெள்ளைத்தாமரைப் பூவில் இருப்பாள்பாடல் இறுதி சரணத்தில் பாரதி கூறுவான்
நிதிமிகுந்தவர் பொற்குவை தாரீர்! …..
ஆண்மையாளர் உழைப்பினை நல்கீர்! …..
எதுவும் நல்கி இங்கு எவ்வகை யானும்
இப்பெரும் தொழில் நாட்டுவம் வாரீர்! “
வாருங்கள் தோழர்களே தேரினை வடம் பிடிப்பீர்!