திரு R.அசோகன் AGM(Transmission)
கடலூர்
திரு.அசோகன் AGM(Transmission) அவர்கள் இந்த மாதம் இலாக்கா பணியிலிருந்து ஓய்வு பெறுவதையொட்டி
அவருடைய பணியை பாராட்டும் வகையில் அவர் பணிபுரியும் கடலூர் பொதுமேலாளர் அலுவலக
அதிகாரிகள் /ஊழியர்கள் சார்பில் பாராட்டு விழா இன்று மாலை பொதுமேலாளர் அலுவலக
வளாகத்தில் திருமதி D.கலைவாணி AGM(Admn) அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
தோழியர் V.வசந்திஅவர்கள் வந்திருந்த அனைவரையும்
வரவேற்றார். கடலூர் முதன்மைப் பொதுமேலாளர் திரு மார்ஷல் ஆண்டனி லியோ அவர்கள்
கலந்து கொண்டு திரு.அசோகன் அவர்களுக்கு நினவுப்பரிசு வழங்கி வாழ்த்தினார்.
மேலும் திரு K.சமுத்திரவேலு
DGM(NWP-CFA), திருமதி ஜெயந்தி அபர்ணா DGM(CM), AIBSNLEA மாவட்ட செயலர் திரு S.ஆனந்த் AGM (NWP/CM), திரு K.தனசேகர் AO Plg, திரு R.S.வேதராமன் SDE (Transmission) திரு S.ராமநாதன் SDE, திருமதி சித்ரா நாகராஜன் A.O,
திரு ஹரிஹரன் JAO, NFTE மாவட்டசெயலர் தோழர் இரா.ஸ்ரீதர், முன்னாள்
மாவட்ட செயலர் தோழர் P.சுப்ரமணியன்,FNTOமாவட்ட செயலர் தோழர் R.ஜெயபாலன்,திரு. கோபால்சாமி-BSNLEU
ஆகியோர் வாழ்த்தி பேசினர். அவ்வமயம் அதே நாளில்
ஓய்வு பெறும் திரு K.பாலகிருஷ்ணன் (தோழர் பால்கி) AGM CM அவர்களும் பொதுமேலாளர் அலுவலகம் சார்பில்
கெளரவிக்கப்பட்டார். வந்திருந்து வாழ்த்தியவர்களுக்கும், விழாவில் கலந்து
கொண்டவர்களுக்கும் திரு R.வரதராஜன் SDE(Admn)அவர்கள் நன்றியுரைத்தார். விழாவினை சிறப்பாக
ஏற்பாடுகள் செய்த நமது தோழர்களையும், பேருதவி புரிந்த ஒப்பந்த ஊழியர்களையும் கடலூர் மாவட்ட சங்கத்தின் சார்பில்
வாழ்த்துகிறோம்.
No comments:
Post a Comment