.

Friday, May 31, 2013

78.2% போராட்டத்தின் அடுத்த நிலை

பெருந்திரள் தர்ணா

BSNL நிர்வாகத்துடன் ஏற்பட்ட 12.06.2012 உடன்பாட்டை அமுல்படுத்தக்கோரி 09.05.2013 அன்று கூடிய Forum of BSNL UNIONS / Associations ன் தீர்மானத்தின் அடிப்படையில் 22.05.2013 அன்று அனைத்து கிளைகளிலும் ஆர்ப்பாட்டம் தோழர்களின் உற்சாகமான பங்களிப்பின் மூலம் வெற்றி பெற்றது.
     நமது எச்சரிக்கை ஆர்ப்பாட்டத்தினையும் நிர்வாகம் கண்டுகொள்ளாமல் இருப்பதினால் நாம் ஏற்கனவே எடுத்த முடிவின்படி BSNL நிர்வாகத்தின் மெத்தனப்போக்கைக் கண்டித்து 05.06.2013 அன்று பெருந்திரள் தர்ணா போராட்டத்தினை வெற்றிகரமாகச் செயல்படுத்துவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.
     ஆகவே தோழர்கள் அனைவரும் 05.06.2013 அன்று காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை, GMO அலுவலகம் முன்பு நடைபெற உள்ள பெருந்திரள் தர்ணாவில் முழுமையாக பங்கேற்று போராட்டத்திற்கு மேலும் வலுசேர்த்திட வேண்டுகிறோம்.

-          மாவட்ட சங்கம்

Thursday, May 30, 2013

பணி ஓய்வு பாராட்டு விழா - மே - 2013


31.05.2013 அன்று பணி ஓய்வு பெறும் தோழர்கள்

1.  தோழர். R. சீனுவாசன்,           SDE     கள்ளக்குறிச்சி       பணி ஓய்வு

2.  தோழர். C.S. சத்தியநாதன்,        SDE     GMO - கடலூர்        பணி ஓய்வு

3.  தோழர். S. கோவிந்தராஜூ       SDE      சிதம்பரம்          பணி ஓய்வு

4.  தோழர். V. பன்னீர்செல்வம்       TTA      கடலூர்            பணி ஓய்வு

5.  தோழர். V. ராமநாதன்            SSS     GMO - கடலூர்       பணி ஓய்வு

6.  தோழர். D. தியாகராஜன்          STS              GMO - கடலூர்       பணி ஓய்வு

7.  தோழர். A. பாண்டியன்           TM               GMO - கடலூர்       பணி ஓய்வு

8.   தோழர். K. செல்வராஜ்           TM                கடலூர்             பணி ஓய்வு

9.  தோழர். M. ஸ்ரீமதி               SDE              GMO - கடலூர்       விருப்ப ஓய்வு

10. தோழர். A.M. ரபி அஹமது       TM      GMO - கடலூர்       விருப்ப ஓய்வு

                பணி ஓய்வு பெறும் அனைத்து தோழர்களுக்கும் மாவட்ட சங்கம் தனது நெஞ்சு நிறை வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறது.

-மாவட்ட சங்கம்.

Monday, May 27, 2013

இரங்கல் செய்தி

கடலூர் மாவட்ட தொழிற்சங்க முன்னோடியும் நமது முன்னாள் மாவட்ட செயலருமான தோழர். B.ராஜேந்திரன்,PM அவர்கள் இன்று (27.05.2013) அதிகாலை இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

அன்னாரைப் பிரிந்து வாடும் குடும்பத்தாருக்கு நமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

கிளைகளில் நமது சம்மேளனக் கொடியினை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.


 -மாவட்ட சங்கம்

Friday, May 10, 2013

T.T.A Results

T.T.A  தேர்வில், கடலூர் தொலை தொடர்பு 
மாவட்டத்தில்,கீழ்க்கண்ட தோழர்கள் வெற்றி 
பெற்றுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் மாவட்டச் சங்கம் தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும்  தெரிவித்துக் கொள்கிறது.


1. R. Srinath (TOA-G), Cuddalore
2. S. Bhuvaneswari S (Sr. TOA -G), Cuddalore
3. R. Nandhakumar (TM), Cuddalore
3. T. Senthamarai P (TM), Cuddalore
4. T. Sakthimanalan (TM),  Cuddalore
5. V. Elangavan V (TM) , Cuddalore.



Thursday, May 9, 2013



மாவட்ட அவசர செயற்குழு 08.05.2013 தீர்மானம்

நமது மாநில சங்கம், மாவட்ட சங்கங்களின் வேண்டுகோளினை ஏற்று கிளைச் செயலாளர் தோழர் E. விநாயகமூர்த்தி அவர்களுக்கு வழங்கப்பட்ட பணி இடை நீக்கத்தை அவரது வேண்டுகோள் கடித்தத்தைப் பெற்று உத்தரவை இரத்து செய்யவும்;

கிளைத்தலைவர் தோழர். V. இளங்கோவன் அவர்களுக்கு வழங்கப்பட்ட பணி இடை நீக்கத்தை அவரது வேண்டுகோள் கடித்தத்தைப் பெற்று உத்தரவை இரத்து செய்யவும்;

மாவட்ட செயலருக்கு வழங்கப்பட இருந்த பணி இடை நீக்கத்தை கைவிடவும் மாவட்ட நிர்வாகம் உறுதி அளித்துள்ளது.

மாவட்ட நிர்வாகத்திற்கும், குறிப்பாக நமது மாவட்ட முதுநிலைப் பொது மேலாளருக்கும் இம்மாவட்டச் செயற்குழு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது.


Wednesday, May 8, 2013

மாவட்ட அவசர செயற்குழு 08.05.2013 தீர்மானங்கள்

 தீர்மானம் 1:

     திருப்பாப்புலியூர் தொலைபேசி நிலையத்தில் நிகழ்ந்த பிரச்சனையை ஒட்டி நிர்வாகம் எடுத்துள்ள நடவடிக்கைகளை இந்த மாவட்ட அவசர செயற்குழு ஆழ்ந்த கவலையுடன் பரிசீலித்தது.

   மாநில, மாவட்ட சங்கங்களின் உணர்வினைப் புரிந்து கொண்டு விரைவான தீர்விற்கு மாவட்ட நிர்வாகம் உறுதி அளித்துள்ளது. மாவட்ட நிர்வாகம் அளித்துள்ள உறுதி மொழி, நிர்வாகம் – சங்கத்திற்கிடையே இருக்க வேண்டிய நல் உறவிற்கு காட்டியுள்ள ஆக்கபூர்வமான சமிக்ஞை என்பதாக மாவட்ட செயற்குழு கருதுகிறது.

   எனவே மாவட்ட நிர்வாகத்தின் உறுதி மொழியினை ஏற்று வரவேற்கிறது. உறுதி மொழியை விரைவில் செயல்படுத்த வேண்டுகிறது

தீர்மானம் 2:

       நமது மாநில சங்கம், மாவட்ட சங்கங்களின் வேண்டுகோளினை ஏற்று கிளைச் செயலாளர் தோழர் E. விநாயகமூர்த்தி அவர்களுக்கு வழங்கப்பட்ட பணி இடை நீக்கத்தை அவரது வேண்டுகோள் கடிததத்தைப் பெற்று உத்தரவை இரத்து செய்யவும்;

     கிளைத்தலைவர் தோழர். V. இளங்கோவன் அவர்களுக்கு வழங்கப்பட்ட பணி இடை நீக்கத்தை அவரது வேண்டுகோள் கடிததத்தைப் பெற்று உத்தரவை இரத்து செய்யவும்;

     மாவட்ட செயலருக்கு வழங்கப்பட இருந்த பணி இடை நீக்கத்தை கைவிடவும் மாவட்ட நிர்வாகம் உறுதி அளித்துள்ளது.

     மாவட்ட நிர்வாகத்திற்கும், குறிப்பாக நமது மாவட்ட முதுநிலைப் பொதுமேலாளருக்கும் இம்மாவட்டச் செயற்குழு நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறது.


தீர்மானம் 3:

     கடலூர் மாவட்ட பணி இடை நீக்கப் பிரச்சனையில் உரிய நேரத்தில் தலையிட்டு தீர்விற்கு வழிகோலிய மாநில சங்கதிற்கு நன்றியை உரித்தாக்குகிறது.


In partial modification of BSNL letter No 7-812010/EF/Part/1 dated 05.09.2011, the competent authority has decided that as financial performance of BSNL is not improving,
All India LTC facility will remain frozen for all BSNL Employees till further orders. However, the employees who cross the age of 59 years shall be allowed to avail one All India LTC during the last year of their retirement. Other terms & conditions of the above letter dated 05.09.2011 will remain unchanged.
 
தமிழ் மாநில சங்கம், கடலூர்  நிகழ்வுகள் குறித்து, தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளது.

தேர்தல்கள் வரும் - போகும்.  அனால் இயக்கம் நிலைத்து நின்றாக வேண்டும் .  அனைத்துத் தலைவர்களும் தங்களது அனுபவத்தினையும்,  நிதானத்தினையும் வெளிப்படுத்தியாக வேண்டிய தருணம் இது. 

நடந்திருப்பவை எதுவும்,  சங்க நலன் விரும்பும் எவரும் விரும்பும் நடவடிக்கையாக அமையவில்லை. 

தோழர் பட்டாபி அவர்களின் குறிப்பினைப் படிக்க   Click here

Saturday, May 4, 2013

CHQ News


Meeting of Forum: A meeting of Forum of unions took place on 02-05-2013 under the Chairmanship of Com. Islam Ahmad, President NFTE BSNL. The following decisions were taken: 

(1) A memorandum will be prepared by the Committee for submission to the panel of Ministers for revitalization and revamping of the BSNL. The NFTE suggested for realization of outstanding revenue of Govt, damaged Cables Compensation, Fund for purchase of equipments and materials etc in addition to other items VRS is to be opposed. 

(2) NFTE HQR’s draft listing issues is ready. 

(3) Settlement of 78.2% IDA merger: The meeting decided to press for bilateral talks between BSNL Management and DOT to sort out the issue. NFTE maintained that after joining of duty by CMD unions should meet and convey the anguish and anger of the employees for delay. 

Friday, May 3, 2013

Why BSNL & MTNL should be revived?




Harsh Chitale 

The recent formation of the Group of Ministers to revitalise Mahanagar Telephone Nigam Ltd (MTNL) and Bharat Sanchar Nigam Ltd (BSNL) is an important step not only for these two organisations but also for the nation. In the last two decades, telecommunication has emerged as a key driver of socio-economic development. From ensuring the spread of quality education to all corners of India to making affordable healthcare possible through telemedicine; from facilitating inclusive growth though mobile banking or business correspondent networks, to taking citizen services to each panchayat through various e-governance projects - everything seems possible today thanks to the power of a robust telecom infrastructure that has been built up in India over the last few decades. 

Government-owned enterprises such as MTNL and BSNL have played a crucial role in the development of this infrastructure, prior to the emergence of many strong private-sector players. In recent years, while the growth of consumer subscriber base has largely been driven by private-sector telcos, MTNL and BSNL have continued to spearhead network building in areas of strategic importance. BSNL leverages its vast pan-India network and accounts for 80% of landline and most of the wired broadband connections. It was instrumental in creating rural connectivity at affordable rates. BSNL also plays a crucial role in the implementation of communication networks for defence forces: today the modernisation of these networks is a matter of strategic interest as well as of urgency. 

MTNL services two of our most advanced metros - Delhi and Mumbai -- where most of our business houses are situated. MTNL was also the first to introduce the concept of affordable broadband. BSNL and MTNL are also jointly executing the National Optical Fibre Network(NOFN) and are also helping in building the National Knowledge Network that will help in the sharing of knowledge across universities and colleges. Overseen by the Bharat Broadband Network (BBNL), the NOFN project is aimed at bringing optical fibre connectivity to 250,000 gram panchayats, thus integrating them better with the economy and easing the delivery of government services. 

Today while we are talking of 4G experience for high-end consumers, it is important to think of connectivity to our villages in the same breath. To put the issue in context, recent reports have suggested that the percentage of people accessing the internet in rural India is below 5%. Increasing connectivity in rural India requires dedicated effort as well as some serious investments. It calls for capital expenditure in far-flung regions, which may not be a commercially viable proposition, certainly not to begin with. So only institutions like BSNL can play an effective role in providing an enabling network infrastructure in remote parts. 

Despite spearheading such an important agenda, these two public-sector telecom giants are grappling with a financial crisis now. Till four years back, both BSNL and MTNL were in the pink of financial health. However, spectrum licensing fees and intensely competitive market pressures have taken a toll on these institutions. MTNL is making a loss of close to Rs 1,000 crore every quarter for the past many quarters and at the current run rate of loss, its net worth is likely to be completely wiped out in two quarters. 

BSNL is expected to incur a Rs 10,000 crore loss in FY12-13 on top of around Rs 15,000 crore losses in the two previous years.With stressed financials, both BSNL and MTNL are reported to have delayed significant payments owed to their various vendors and subcontractors and there is a growing reluctance among various network and technology-service providers in offering their equipment and services to these organisations, as observed in the last few procurement tenders released by these corporations. This concern has also been expressed by various industry bodies like CII National Committee on Defence and the Manufacturers' Association for Information Technology. As a result, implementation of many of our strategic projects such as the defence networks, NOFN and the National Knowledge Network, is in danger of running into delays. There is also a risk to proper operations and maintenance of some of the existing networks. In this context, the measures, including fund infusion, which the Group of Ministers may recommend will be crucial. 

There is no denying the fact that all public organisations need to operate efficiently and deliver quality services at affordable rates and BSNL and MTNL would need to continuously keep innovating to be able to do so. At the same time, certain nation-building infrastructure initiatives, which they are engaged, needs to be looked at differently, beyond quarterly or annual accounts of profit and loss. Government needs to step in. Any support that the government provides to organisations such as BSNL and MTNL has to be seen in the context of the role they play in the development of the nation. They should be seen as enablers of a new knowledge economy and of inclusive growth. 

I am a strong proponent of free-market economy and do believe that well regulated but unhindered competition between players working within the "same rules of the game" drives better outcome for all stakeholders -- consumers, investors and the state. However, the case of BSNL and MTNL is a bit different. On one hand, they get drawn into many projects of national importance (but not necessarily with immediate commercial viability). On the other hand, they are straddled with government procedures in procurement, in getting their projects approved, HR policies and so on. As a result they are not allowed to have the flexibility and agility that other private operators enjoy. Any (losing) bidder can complain against the procurement process and bring the procurement of even critical equipment to a standstill, as was seen in the GSM network expansion tenders of BSNL. Hence it is unfair to extend the yardstick of commercial performance to these organisations. It is time the government decided if these organisations are to be treated as any other commercial concern (and then given full flexibility and freedom as any other private operator) or whether these are state arms and then be funded accordingly. Unfortunately, right now they seem to be stuck in the middle. 

The writer is CEO of HCL Infosystems


(Thanks: Economic Times)


Wednesday, May 1, 2013

ஜனசக்தி இதழில்...

மாவட்டச் செயற்குழுக் கூட்டம்

          நமது சங்கத்தின் மாவட்டச் செயற்குழுக் கூட்டம் எதிர்வரும் 03/05/2013 அன்று, உளுந்தூர்பேட்டை,சென்னை மெயின் ரோடில் உள்ள “ஸ்ரீ ஜெயராமன் தெய்வானை" திருமண நிலையத்தில்காலை ஒன்பது மணிக்கு நடைபெற உள்ளது.



தலைமை      :   தோழர் ஆர். செல்வம்     
                  (மாவட்டத் தலைவர்)
துவக்க உரை   :  தோழர்  ஜி.  ஜெயராமன் 
                  (சம்மேளனச் செயலர்)
சிறப்புரை      :   தோழர் ஆர். பட்டாபிராமன் 
                  (மாநிலச் செயலர்)

                    அனைவரும் வருக!!

       தோழமையுடன்

ஆர். செல்வம                                   ஆர். ஸ்ரீதர்,
மாவட்டத் தலைவர்                          மாவட்டச் செயலர்.

மே தினம் ஜிந்தாபாத் !







NFTE  ஜிந்தாபாத் !
WORKERS UNITY ஜிந்தாபாத் !
செங்கொடி வாழ்க ! செங்கொடி வாழ்க !!
செங்கொடி தந்த  தியாகிகள் வாழக்!

சிக்காக்கோவின் தெருக்களிலே !
இரத்தம் சிந்திய தோழர்களே !
மேதினம் தந்த தியாகிகளே!
உங்களுக்கு எங்கள் விர வணக்கம் !

எட்டு மணி வேலைகேட்டு 
உழைப்பவர்க்கு உரிமை கேட்டு
தூக்கு  மேடை மேடை ஏறிய போதும் 
கொள்கை முழக்கம் செய்திட்ட 
உழைக்கும் வர்க்கத் தலைவர்களே !
உங்களுக்கு எங்கள் விர வணக்கம் !

தியாகச் செம்மல் ஜெகன் உயர்த்திப்ப்பிடித்த
செங்கொடி வாழ்க! செங்கொடி வாழ்க !

வரலாற்று நாயகன் குப்தா போற்றிய 
செங்கொடி வாழ்க !  செங்கொடி வாழ்க !

பகத்சிங்  முழங்கிய 
எழுச்சிக் கோஷம் "இன்குல்லாம் ஜிந்தாபாத்"
வாழிய வாழிய வாழியவே !!

இந்த எழுச்சிக் கோஷம் ஒளியிழக்க, 
என்றும் நாங்கள் அனுமதியோம் !

தோழர்களே, தலைவர்களே!
நீங்கள் காட்டிய வழியினிலே 

ஒன்றுபட்டு நின்றிடவே 
சபதம் நாங்கள் ஏற்கின்றோம்!
மேதினச் சபதிமிது !

உழைப்பவர் வியர்வை சிந்தாமல் 
உலகில் எதுவும் விளையாது 
உற்பத்தி எதுவும் நிகழாது!

பொதுத்துறை நிறுவனங்களை,
 BSNL  நிறுவனத்தை ,
கண்ணில் வைத்துக் காத்திடவே 
சபதம் நாங்கள் ஏற்கின்றோம் !

இன்குலாப் ஜிந்தாபாத் 



"அனைத்துத் தோழர்களுக்கும் தோழியர்களுக்கும் மே தின வாழ்த்துக்கள் 

(2011 ஆண்டு மேதினச் செய்தியாக ஒரு சிறு கட்டுரை எழுதியிருந்தோம் (Click here) இரண்டு ஆண்டுகள் கடந்து போய்விட்டன. என்ன மாற்றம் 
நிகழ்ந்துவிட்டது - யோசிப்போப்மா)