.

Wednesday, May 1, 2013

மே தினம் ஜிந்தாபாத் !







NFTE  ஜிந்தாபாத் !
WORKERS UNITY ஜிந்தாபாத் !
செங்கொடி வாழ்க ! செங்கொடி வாழ்க !!
செங்கொடி தந்த  தியாகிகள் வாழக்!

சிக்காக்கோவின் தெருக்களிலே !
இரத்தம் சிந்திய தோழர்களே !
மேதினம் தந்த தியாகிகளே!
உங்களுக்கு எங்கள் விர வணக்கம் !

எட்டு மணி வேலைகேட்டு 
உழைப்பவர்க்கு உரிமை கேட்டு
தூக்கு  மேடை மேடை ஏறிய போதும் 
கொள்கை முழக்கம் செய்திட்ட 
உழைக்கும் வர்க்கத் தலைவர்களே !
உங்களுக்கு எங்கள் விர வணக்கம் !

தியாகச் செம்மல் ஜெகன் உயர்த்திப்ப்பிடித்த
செங்கொடி வாழ்க! செங்கொடி வாழ்க !

வரலாற்று நாயகன் குப்தா போற்றிய 
செங்கொடி வாழ்க !  செங்கொடி வாழ்க !

பகத்சிங்  முழங்கிய 
எழுச்சிக் கோஷம் "இன்குல்லாம் ஜிந்தாபாத்"
வாழிய வாழிய வாழியவே !!

இந்த எழுச்சிக் கோஷம் ஒளியிழக்க, 
என்றும் நாங்கள் அனுமதியோம் !

தோழர்களே, தலைவர்களே!
நீங்கள் காட்டிய வழியினிலே 

ஒன்றுபட்டு நின்றிடவே 
சபதம் நாங்கள் ஏற்கின்றோம்!
மேதினச் சபதிமிது !

உழைப்பவர் வியர்வை சிந்தாமல் 
உலகில் எதுவும் விளையாது 
உற்பத்தி எதுவும் நிகழாது!

பொதுத்துறை நிறுவனங்களை,
 BSNL  நிறுவனத்தை ,
கண்ணில் வைத்துக் காத்திடவே 
சபதம் நாங்கள் ஏற்கின்றோம் !

இன்குலாப் ஜிந்தாபாத் 



"அனைத்துத் தோழர்களுக்கும் தோழியர்களுக்கும் மே தின வாழ்த்துக்கள் 

(2011 ஆண்டு மேதினச் செய்தியாக ஒரு சிறு கட்டுரை எழுதியிருந்தோம் (Click here) இரண்டு ஆண்டுகள் கடந்து போய்விட்டன. என்ன மாற்றம் 
நிகழ்ந்துவிட்டது - யோசிப்போப்மா)





No comments:

Post a Comment