.

Wednesday, May 8, 2013

மாவட்ட அவசர செயற்குழு 08.05.2013 தீர்மானங்கள்

 தீர்மானம் 1:

     திருப்பாப்புலியூர் தொலைபேசி நிலையத்தில் நிகழ்ந்த பிரச்சனையை ஒட்டி நிர்வாகம் எடுத்துள்ள நடவடிக்கைகளை இந்த மாவட்ட அவசர செயற்குழு ஆழ்ந்த கவலையுடன் பரிசீலித்தது.

   மாநில, மாவட்ட சங்கங்களின் உணர்வினைப் புரிந்து கொண்டு விரைவான தீர்விற்கு மாவட்ட நிர்வாகம் உறுதி அளித்துள்ளது. மாவட்ட நிர்வாகம் அளித்துள்ள உறுதி மொழி, நிர்வாகம் – சங்கத்திற்கிடையே இருக்க வேண்டிய நல் உறவிற்கு காட்டியுள்ள ஆக்கபூர்வமான சமிக்ஞை என்பதாக மாவட்ட செயற்குழு கருதுகிறது.

   எனவே மாவட்ட நிர்வாகத்தின் உறுதி மொழியினை ஏற்று வரவேற்கிறது. உறுதி மொழியை விரைவில் செயல்படுத்த வேண்டுகிறது

தீர்மானம் 2:

       நமது மாநில சங்கம், மாவட்ட சங்கங்களின் வேண்டுகோளினை ஏற்று கிளைச் செயலாளர் தோழர் E. விநாயகமூர்த்தி அவர்களுக்கு வழங்கப்பட்ட பணி இடை நீக்கத்தை அவரது வேண்டுகோள் கடிததத்தைப் பெற்று உத்தரவை இரத்து செய்யவும்;

     கிளைத்தலைவர் தோழர். V. இளங்கோவன் அவர்களுக்கு வழங்கப்பட்ட பணி இடை நீக்கத்தை அவரது வேண்டுகோள் கடிததத்தைப் பெற்று உத்தரவை இரத்து செய்யவும்;

     மாவட்ட செயலருக்கு வழங்கப்பட இருந்த பணி இடை நீக்கத்தை கைவிடவும் மாவட்ட நிர்வாகம் உறுதி அளித்துள்ளது.

     மாவட்ட நிர்வாகத்திற்கும், குறிப்பாக நமது மாவட்ட முதுநிலைப் பொதுமேலாளருக்கும் இம்மாவட்டச் செயற்குழு நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறது.


தீர்மானம் 3:

     கடலூர் மாவட்ட பணி இடை நீக்கப் பிரச்சனையில் உரிய நேரத்தில் தலையிட்டு தீர்விற்கு வழிகோலிய மாநில சங்கதிற்கு நன்றியை உரித்தாக்குகிறது.

No comments:

Post a Comment