வாழ்த்துக்கள்
நமது கடலூர் CSC சிறந்த SWARNA CSC –TYPE1க்கான விருது கிடைத்துள்ளது.
அந்த விருதினை நமது CMD அவர்கள் 31-12-2016 அன்று சென்னையில் நடைபெற்ற
விழாவில் நமது பொது மேலாளர் அவர்களிடம் வழங்கினார் .
12-01-2017 அன்று கடலூர் CSC-ல் நடைபெற்ற எளிமையான விழாவில் சுழல் கேடயத்தை
நமது பொது மேலாளர் அவர்கள் AGM (CSC) அவர்களிடம்
வழங்கினார். பொது மேலாளர் அவர்கள் தனது
உரையில் கடலூர் CSC அடுத்த
இலக்காக அகில இந்திய அளவில் விருதினை பெற வேண்டும் எனக் கூறி பணியாற்றிய அனைத்து
ஊழியர்களுக்கும் சான்றிதழ் வழங்கினார். அதோடு மட்டுமில்லாமல் CSC-ல் பணிபுரிந்த ஒப்பந்த ஊழியர்களுக்கும் பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
இறுதியாக A.இளங்கோவன் SDE(CSC) அவர்கள்
நன்றியுரை கூறினார். தனது நன்றியுரையில்
வருவாய் பிரிவு , வெளிபுறப்பகுதி , கணினி பகுதி , ஒப்பந்த ஊழியர்கள் அனைவருக்கும்
தனது நன்றியினை பதிவு செய்தார்.
விழாவில் பாராட்டுரையில்
பாதுகாவலர் பணியில் இருக்கும் தோழர்கள் குறிப்பிடாமல் இருந்தது. ஆனால் நமது பொது
மேலாளர் அவர்கள் வெளியில் வரும் போது அந்த பாதுகாவலர் தோழர்களை அழைத்து
பாராட்டுதல்கள் சொல்லியது நெகிழ்வான தருணமாக இருந்தது..
No comments:
Post a Comment