விளையாட்டில் அரசியல் புகுத்தி விளையாடாதே
பகுதி 4
புதிய குழு அமைக்கப்பட்டு 2018 பிறகு நமது நிறுவனத்தின் நிதி நிலைமை மிகவும் மோசமாக சென்றுவிட்டதால் அனைத்து விளையாட்டு குழு நடவடிக்கைகளும் 2019 முதல் நிறுத்தப்பட்டன .
2020 க்கு பிறகு பேரிடர் காலம் அறிவித்ததன் அடிப்படையில் 2023 வரை மீண்டும் அனைத்து விளையாட்டு குழு நடவடிக்கையும் நிறுத்தப்பட்டன.
இதைப் பற்றி எல்லாம் தெரிந்து கொள்ளாமல் பாவம் யாரையோ திருப்தி படுத்துவதற்காக அறிக்கை என்ற போர்வையில் உண்மைக்கு மாறான செய்திகளை தொடர்ந்து எழுதுவது என்பது தோழரின் அறியாமையைத் தவிர வேறு ஒன்றும் சொல்வதற்கு இல்லை.
விளையாட்டுக் குழுவின் செயல்பாடுகளை மிக விரைவில் நடைபெற இருக்கின்ற ஆண்டு மாநாடு அறிக்கையில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
(தோழர் நேரில் பங்கு பெற முடியாது. அறிக்கையினுடைய நகலை வேண்டுமானால் அட்வான்ஸ் ஆக அனுப்ப முயற்சிக்கின்றேன்)
ஒன்றை மட்டும் நினைவு ,படுத்த விரும்புகின்றேன் 2024 கடலூர் வரதராஜன் பிள்ளை நகரில் நடைபெற்ற வாலிபால் தமிழக அணி தேர்வு குழு மிக சிறப்பாக நடைபெற்றது.
இருக்கையில் அமர்ந்து கொண்டு புரட்சி செய்கின்றவர்கள் அன்றைக்கு எங்கே சென்றார்கள்?
அந்தத் தேர்வு குழுவுக்கு அவர்களின் பங்களிப்பு என்ன?
கொரோனா பேரிடர் காலத்திற்கு பிறகு தமிழகத்தில் எந்த மாவட்டமும் நடத்த முன் வராத பொழுது கடலூர் மாவட்டம் முன்வந்து நடத்தியது.
நீங்கள் யாரும் பாராட்ட வேண்டாம். ஆனால் உண்மையை மறைக்க முயற்சிக்க வேண்டாம்.
இளம் தோழர் துடிப்புமிக்க தோழர் என்பதில் கருத்து முரண்பாடு கிடையாது.
மாநில ஸ்போர்ட்ஸ் கவுன்சில் இருந்து கடலூர் நிர்வாகத்திற்கு கடிதம் மூலம் ஸ்போர்ட்ஸ் செயலாளர் யார் என்று கேட்ட பொழுது அதற்கு பதில் தராமல் குழப்பம் செய்தது யார்?
அன்றைக்கு உங்களது நண்பரிடம் உங்களது இருசக்கர வாகனத்தில் பிரேக் போட்டு கேள்வி கேட்டிருந்தால் நீங்கள் உண்மையில் துடிப்பு மிக்க தோழர் தான்.
அன்றைக்கு தனியாக துணைப் பொது மேலாளர் அவரிடம் முறையிட்டது யார்?
துணைப் பொது மேலாளர் அவர்கள் கணக்கை முடிக்க சொன்ன பொழுது நேற்றைய முன் தினம் வரை ரகசியம் காத்ததின் மர்மம் என்ன?
பொது மேலாளர் அவர்களை தனியாகச் சென்று சந்தித்ததின் ரகசியம் என்ன?
விளையாட்டுக் குழுவில் முறைகேடு நடந்ததாக எவரும் சொல்லவில்லை.
செயலாளருடன் இணைந்து பணியாற்ற வேண்டிய பொருளாளர் தனித்தே செல்வதின் மர்மம் என்ன?
மாவட்ட விளையாட்டு குழுவில் மேல் அக்கறையிருந்தால் ஒன்றுபட்டு செயல்பட்டு அனைவரும் அமர்ந்து பேசி கூட்டத்தை நடத்த முயற்சி செய்திருக்கலாமே?
ரகசிய அறையில் ரகசிய கூட்டம் தேவை இருந்திருக்காதே?
பொது மேலாளர் அலுவலக மன மகிழ் மன்றத்தின் உண்மையின் வரலாற்றை தெரியாதவர்கள், வாய் சொல்லில் வீரர்கள், இருக்கையில் அமர்ந்து கொண்டு புரட்சி செய்பவர்கள் எல்லாம் ஒன்று கூடி அறிக்கை விடுகின்றார்களாம்.
பாவம் தோழர் சம்பந்தம் ரூபாய் 2000 நடராஜருக்கு நடனம் ஆடுகின்றார் .
மொத்த வசூலா 14,000 ரூபாய். மூவருக்கும் நடராஜர் ஆறாயிரம் ரூபாய். L1 SKC ரூபாய் 2000 .
மீதித்தொகை 6000.
இதுதான் உங்களது பார்ட்டியின் கணக்கு.
இதற்கு நற் சான்றிதழ்
இந்தாண்டு கடும் வெயில் தான் ஏற்றுக் கொள்கின்றோம் . வெயிலில் கலங்க வேண்டாம். அமைதி காக்கவும்.
மனமகிழ மன்றம் என்பது பொது மேலாளர் அலுவலகம் மற்றும் வாடிக்கையாளர் சேவை மையம் சேர்ந்துதான்.
பணி ஓய்வு பாராட்டு விழா மட்டும்தான் மன்றம் நடத்த வேண்டும்.
பணி மாறுதல் விழா என்பது கட்டடத்திற்குள் தனியாக நடத்திக் கொள்ள வேண்டும்.
இதுதான் மன மகிழ் மன்ற நடைமுறை.
தெரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள் இல்லையென்றால் அமைதியாக இருக்க கற்றுக் கொள்ளுங்கள்.
குட்டி அதிகாரிகளின் ஆதரவுக்காக வரம்பை மீறி செயல்படாதீர்கள்.
கடலூர் பொது மேலாளர் மன மகிழ் மன்றத்தின் சந்தா தொகை நான்கு ஆண்டுகளுக்கு மேலாக ரூபாய் 40 ஆயிரம் யாரிடம் உள்ளது. இதைப் பற்றி சிந்தித்தது உண்டா? எல்லாம் சரியாக இருப்பதாக சாட்டர்டே அக்கௌன்ட் போல் சான்றிதழ் கொடுப்பதற்கு நீங்கள் யார்? அதற்கான தகுதி அல்லது அருகதை உண்டா?
இறந்த பிறகு முதலை கண்ணீர் வடிக்கின்ற நீங்கள் உட்பட இந்த கட்டிடத்தில் பல பேர் அந்த தோழருக்கு பணி மாறுதல் பாராட்டு விழாவிற்கு பங்கு செலுத்தவில்லையே?
இதுதான் உங்களது ஜனநாயகமா?
இந்தப் பட்டியலை வெளியிட்டால் உங்களைப் போன்ற கிளர்ச்சியாளர்கள் புரட்சியாளர்களுக்கு அவமானம் என்பதை மறந்து விடாதீர்கள்.
தோழமையுடன்
இரா ஸ்ரீதர்
உறுப்பினர் கடலூர் பிஎஸ்என்எல் விளையாட்டு குழு.
No comments:
Post a Comment