விளையாட்டில் அரசியலை புகுத்தி விளையாடாதே
பகுதி 2
வெட்கப்படுங்கள் தோழரே
2013இல் நடைபெற்ற விளையாட்டு குழு கூட்டத்தில் அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட்டு இளம் தோழர் S. சதீஷ்குமார் TTA அவர்களை செயலாளராக தேர்ந்தெடுத்தோம்.
தோழர் M. தினகரன் அவர்கள் பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
காலம் கடந்து செயல்பாட்டை விமர்சிக்க விரும்பவில்லை.
சரியாக ஐந்து ஆண்டுகள் கழித்து பொதுக்குழு கூடியது. அதில் அவரை மாற்ற வேண்டும் என்று கருத்து மேலோங்கி இருந்தது.
அன்றைக்கு அவர் பிஎஸ்என்எல் யூ சங்கத்தில் அதிதீவிர உறுப்பினராக இருந்ததால் இவரை மீண்டும் தொடர வேண்டும் என்று BSNLEU துடித்தது.
இன்று போல் அன்றும் சில குறிப்பிட்ட அதிகாரிகளின் உதவியுடன் அணி சேர்த்தது.
மதிப்பிற்குரிய மரியாதைக்குரிய அன்றைய பொது மேலாளர் திருமதி லீலா ஷங்கரி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
ஸ்போர்ட்ஸ் கவுன்சில் என்பது (பொது மேலாளர் ) தலைவர் என்ற முறையில் நியமிக்கப்பட வேண்டியது.
தேர்ந்தெடுக்கப்படுகின்ற பதவி அல்ல என்பதை மிகத் தெளிவாக எடுத்துக் கூறினார்.
அன்றைய குடும்ப சூழ்நிலையில் மாவட்ட செயலாளராக இருந்த தோழர் ஸ்ரீதர் பங்கெடுத்துக் கொள்ளவில்லை. மாவட்ட உதவி செயலாளர் தோழர் D. குழந்தைநாதன் பங்கெடுத்துக்கொண்டு நமது கருத்தை மிக அழுத்தமாக உறுதிப்பட பதிவு செய்தார். Right man should be in right place அதாவது விளையாட்டு அடிப்படையில் ( SPORTS QUOTA) பணியாமத்தப்பட்ட ஊழியரை விளையாட்டு குழு செயலாளராக நியமிக்கப்பட வேண்டும்.
அப்படிப்பட்ட ஊழியர்கள் இல்லை என்றால் விளையாட்டில் ஆர்வம் உள்ளவர்கள் அல்லது கலாச்சாரத் துறையில் ஆர்வம் உள்ளவர்கள் விரும்பினால் விளையாட்டுக் குழுவின் செயலாளராக நியமிக்கலாம்.
இன்று அரசியல் சூழ்நிலையை போல் வரலாற்றை திருத்தி எழுத பார்க்கின்றார்.
வெறுப்பு அரசியலை தூண்டிவிட்டு ஆதாயம் தேட சில குட்டி அதிகாரிகளுடன் அணி சேர்க்கை சேர்ந்து நமது இயக்கத்திற்கு எதிராக உயர் அதிகாரியிடம் மண்டியிட்டுக் கிடக்கின்றார்.
அன்றைய பொது மேலாளர் திருமதி லீலா சங்கரி அவர்கள் எந்த விதமான முடிவும் எடுக்காமல் கூட்டம் நிறைவு பெற்றது. Nfte இயக்கம் தோழர் D.குழந்தைநாதன் தலைமையில் முழு எதிர்ப்பினை பதிவு செய்து, வெளிநடப்பு செய்தது.
மரியாதைக்குரிய உயர்திரு R. மார்ஷல் அந்தோணி லியோ பொது மேலாளராக பொறுப்பேற்றுக் கொண்டார். உடனடியாக நடைபெற்ற விளையாட்டு குழு கூட்டத்தில் எந்த விதமான சலசலப்புக்கும் அஞ்சாமல் நேர்மையான முடிவுகளை எடுத்தார்.
இளம் தோழர் சதீஷ்குமார் பொருளாளராக பதவி ஏற்க , மூத்த தோழர் A.சகாய செல்வன் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
தோழமையுடன்
இரா. ஸ்ரீதர்
உறுப்பினர் கடலூர் விளையாட்டு குழு
No comments:
Post a Comment