.

Friday, May 24, 2024

சிறப்பு பணி ஓய்வு பாராட்டு விழா

கொரோனா பேரிடர் காலத்தில்   எந்தவிதமான கூட்டம் நடத்த மாநில நிர்வாகம் அனுமதிக்கவில்லை.
ஆகையால் மார்ச் 2020 முதல் ஏப்ரல் 2022 வரை நமது மாவட்டத்தில் பணி ஓய்வு பாராட்டு விழா நடத்த இயலவில்லை. 
நமது மாவட்ட சங்கம் மட்டும் தொடர்ந்து மாநில  நிர்வாகத்திடம் அழுத்தம் கொடுத்ததின் அடிப்படையில் மே 2022 முதல் கூட்டம் நடத்த அனுமதிக்கப்பட்டது.

(இதில் விளையாட்டு குழுவிற்கும் பொருந்தும் ஆனால் சில நபர்களுக்கு எதுவும் பொருந்தாது)
இந்த 26 மாத கால இடைவெளியில் 28 தோழர்கள் ஓய்வு பெற்றனர். அவர்கள் அனைவருக்கும் பணி ஓய்வு பாராட்டு விழா நடத்த இயலவில்லை. 

மே 2022 முதல் நமது மாவட்ட சங்கம் மட்டும் தொடர்ந்து இவர்களுக்கு பணி ஓய்வு பாராட்டு விழா நடத்த வேண்டும் என  தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தோம்.

சேம நல குழு கூட்டம் மேனாள் பொதுமேலாளர் திருமதி  D. திலகவதி ITS  அவர்கள் தலைமையில் கூடிய போது கொள்கை அளவில் மாநில நிர்வாகத்தின் அனுமதியுடன் நடத்த முடிவெடுக்கப்பட்டது.
அந்த குழு கூட்டத்தில் NFTE இயக்கம் மட்டும்தான் மிக அழுத்தமாக கோரிக்கையை முன்வைத்தது. SNEA உறுப்பினர் அவர்களும் நமது கோரிக்கைக்கு ஆதரவளித்தார்கள் .

முடிவெடுத்தாலும் அமுல்படுத்துவதில் அன்றைய பொது மேலாளர் அக்கறை செலுத்தவில்லை என்பது தான் கசப்பான உண்மை.

இன்றைய பொது மேலாளர் திரு பாலச்சந்தர் அவர்கள் பதவி ஏற்ற உடன் முதல் சந்திப்பிலேயே இந்த கோரிக்கை வலியுறுத்தி இருந்தோம்.
நமது நியாயமான கோரிக்கையை அவர் ஏற்றுக் கொண்டாலும் சில அதிகாரிகளின்  ஆர்வ இன்மையால் விரைவாக நடத்துவதில் சுணக்கம் ஏற்பட்டது. 

தலைமை பொது மேலாளர் அவர்கள் இருமுறை கடலூர் வந்து பொழுது மாவட்ட சங்கத்தின் சார்பில் இந்த கோரிக்கையை முன்னுரிமை கொடுத்து வலியுறுத்தப்பட்டது.

தலைமை பொது மேலாளர் அவர்கள் நமது கோரிக்கை முக்கியத்துவத்தை உணர்ந்து உடனடியாக நடத்துவதற்கு   நமது பொது மேலாளர் அவர்களுக்கு அனுமதி அளித்தார்.

மே 24ம் தேதி  நடத்துவதற்கு முறையாக அனுமதி அளிக்கப்பட்டு இன்று காலை கடலூர் கூட்ட அரங்கில் பொது மேலாளர் உயர்திரு பாலச்சந்திரன் அவர்கள் தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது. 

28  தோழர்களில் 23 தோழர்கள் நேரடியாக குடும்பத்துடன் பங்கு பெற்று சிறப்பித்தனர்.
அனைவருக்கும் பொது மேலாளர் மாலை, சால்வை  அணிவித்து கௌரவித்தார். 
துணை பொது மேலாளர் சி எம் அவர்கள் அனைவருக்கும் நினைவு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி சிறப்பு செய்தார். 
IFA to GM அவர்கள் பங்கு பெற்று சேம நலநிதி மூலம்  ஓய்வு பெற்ற அனைவருக்கும் ட்ராலி பேக் வழங்கி சிறப்பு செய்தார்.

தொழிற்சங்கத் தலைவர்கள் அனைவரும் பங்கு பெற்று ஓய்வு பெற்ற அனைத்து தோழர்களையும் மற்றும்  மாவட்ட நிர்வாகத்தையும் பாராட்டி மிக சுருக்கமாக உரையாற்றினார்கள்.

நமது இயக்கத்தின் மாவட்ட செயலாளர் தோழர்  D.குழந்தைநாதன் தனது  வாழ்த்துறையில் 28 ஓய்வு பெற்ற தோழர்களையும் மற்றும் அவர்களது குடும்பத்தாரையும் பாராட்டினார். அவர்கள் அனைவரும் ஓய்வு பெறுகின்ற வரை மிகச் சிறப்பாக செயல்பட்டனர் . விருப்ப ஓய்வு திட்டம் வந்த பொழுதும் அதை ஏற்க மறுத்து வயது மூப்பு வருகின்ற வரை உழைத்திட்ட அவர்களுக்கு வாழ்த்துக்களை பதிவு செய்தார். 
ஒரு ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ச்சியாக வலியுறுத்தியதின் அடிப்படையில் இன்று சிறப்பாக விழா நடைபெறுகின்றது.

இதற்கு உறுதுணையாக இருந்த பொது மேலாளர் அவர்களுக்கு  நன்றியும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டார்.

இதை நன்கு திட்டமிட்டு வழக்கம்போல் சிறப்பாக செயல்படுகின்ற கடலூர் மாவட்ட வெல்ஃபர் செக்ஷன்  ஊழியர் மற்றும் அதிகாரிகளுக்கு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் பதிவு செய்தார்.

தமிழகத்திலேயே  விருப்ப ஓய்வு VRS 2019 அமல்படுத்தப்பட்ட பொழுது விருப்ப ஓய்வு சென்ற  284 தோழர்களுக்கு  மிக சிறப்பான விழா நடத்திய ஒரே மாவட்டம் கடலூர்  மாவட்டம் என்பதில் நாம் பெருமை கொள்ளலாம். அந்த வகையில் கொரோனா  காலத்தில் பணி ஓய்வு பெற்ற தோழருக்கும் காலம் கடந்திருந்தாலும் சிறப்பான பணி ஓய்வு நடத்திய மாவட்டம் கடலூர் மாவட்டம் தான் என்பதிலும் பெருமை கொள்வோம்.

பணி ஓய்வு பெற்ற தோழர்களுக்கு வாழ்த்துக்களை பதிவு செய்து  உரையை நிறைவு செய்தார்.

முன்னதாக உதவி  பொது மேலாளர் நிர்வாகம் அவர்கள் அனைவரையும் வரவேற்று வரவேற்புரை ஆற்றினார்.

ஓய்வு பெற்ற சங்கத்தின் சார்பாக AIBSNLPWA மற்றும் AIBDPA ஓய்வு பெற்ற தோழர்கள் கௌரிக்கப்பட்டனர்.

 நிர்வாகத்தின் சார்பில் உதவி பொது மேலாளர் திரு வெங்கடேசன், துணைப் பொது மேலாளர் சி எம் மற்றும் நிதி ஆலோசகர் ஆகியோர் மிக சுருக்கமாக வாழ்த்துரை வழங்கினார்கள். 

உதவி பொது மேலாளர் திட்டம் திருமதி S. சசிகலா அவர்கள் தோழர்  V S.ரவி  DE விஜிலன்ஸ் ஓய்வு அவர்களின்  பாராட்டு மடலை வாசித்தார்.

பொது மேலாளர் அவர்கள் தனது தலைமை உரையில் 28 ஓய்வு பெற்ற தோழர்களுக்கும் நிர்வாகத்தின் சார்பிலும் தனிப்பட்ட முறையிலும்
வாழ்த்துக்களை பதிவு செய்தார்.

விழா யாரால் நடைபெறுகின்றது என்பதை விட விழா நடைபெற்றது என்பது தான் மிகவும் மகிழ்ச்சியான செய்தி என்பதை மிக அழகாக பதிவு செய்தார்.

எதிர்பாராத கடினமான சூழலில் குறித்த நேரத்தில் விழா நடத்த இயலவில்லை. 
தற்பொழுது  நீங்கள் அனைவரும் கலந்து கொண்டது மிகவும் சிறப்பு அம்சமாகும்.

 கடினமான கொரோனா காலத்தை கடந்து வந்திருப்பது ஒரு மகிழ்ச்சியான செய்தி தான்.

நீங்கள் அனைவரும் விருப்ப ஓய்வு திட்டத்தில் சேராமல் வயது மூப்பு வரை பணியாற்றி ஓய்வு பெற்றமைக்கு மற்றொரு முறை வாழ்த்துக்களை பதிவு செய்தார்.

கடலூர் மாவட்டம் தமிழகத்திலேயே பணி ஓய்வு பாட்டு விழா நடத்துவதில் ஒரு முன்மாதிரியான  மாவட்டம் என்பதை இந்த கூட்ட அரங்கில் நேரடியாக பங்கு பெற்ற தலைமை பொது மேலாளர் அவர்கள் பதிவு செய்ததை நினைவு படுத்தினார். 

பல முரண்பாடுகள் இருந்தாலும் பணி ஓய்வு பாராட்டு விழாவில் அனைத்து தொழிற்சங்கமும்  கலந்து கொண்டு ,ஓய்வு பெற்ற தோழர்களை வாழ்த்துவது தமிழகத்தில் கடலூர் மாவட்டத்தில் மட்டும் தான் சாத்தியம் என்பதை பெருமைப்பட பதிவு செய்தார். 

இன்றைய சூழலில் தமிழகத்தின்  பிஎஸ்என்எல் வருவாய் நல்ல முறையில் முன்னேற்றம் கண்டுள்ளது என்பதை  மகிழ்ச்சியாக பதிவு செய்தார். 
குறிப்பாக 2024 மார்ச் மாதம் வருவாய் சென்ற ஆண்டு மார்ச் 2023 விட நல்ல முறையில் கூறியுள்ளது .அதேபோல் செலவினமும் குறைந்துள்ளது.

முன்பு போல் இல்லாமல் இப்பொழுது பவர் பிளான்ட் ,பேட்டரி போன்ற சாதனங்கள் வந்து கொண்டே இருக்கின்றன .
4g சேவையும் மாவட்டத்தில் ஐந்து இடங்களில் தொடங்கப்பட்டுள்ளது. 
இந்த ஆண்டுக்குள் மாவட்ட முழுவதும் 4G சேவை வந்துவிடும் என்ற நம்பிக்கை உள்ளது.

மிக விரைவில் நமது நிறுவனம் லாபம் தருகின்ற நிறுவனமாக மாறிவிடும் என்ற நம்பிக்கையுடன் அனைவரையும் மற்றொரு முறை வாழ்த்தி ,உரையை நிறைவு செய்தார்.

ஓய் பெற்ற  தோழர்களில் ஐவர் தோழர் M. துரைராஜன், SDE கடலூர், தோழர் மனோகரன்  TT விழுப்புரம், தோழர் அகஸ்டின் TT விழுப்புரம், தோழர் N. சுந்தரம் AOS, செஞ்சி, மற்றும்  தோழியர் N. சரோஜாதேவி OSP கடலூர் ஆகியோர் ஏற்புரை ஆற்றினார்கள் 

ஓய்வு பெற்ற தலைமை கணக்கு அதிகாரி  உயர்திரு D. சண்முகசுந்தரம் அவர்கள் மிக சுருக்கமாக மாவட்ட நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்து உரையாற்றினார்..

JTO General அவர்கள் நன்றி கூற விழா இனிதே முடிவு பெற்றது.
 
தமிழ்த்தாய் வாழ்த்து உடன் கூடிய விழா தேசிய கீதத்துடன்  நிறைவு பெற்றது..

குறித்த நேரத்தில் துவங்கி 10.30 am சரியாக நண்பகல் 12.30 மணிக்கு நிறைவு பெற்றது




















No comments:

Post a Comment