தொழிற்சங்க ஆசான் தோழர் ஜெகன் 18 ஆவது ஆண்டு நினைவு நாள் கூட்டம் மாவட்டச் செயலாளர் தோழர் D குழந்தை நாதன் தலைமையில் இன்று காலை 9 மணிக்கு மாவட்ட சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.
பங்குபெற்ற அனைவரும் தோழரின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
நமது தொழிற்சங்க மூத்த தோழரும், ஓய்வு பெற்ற நல சங்கத்தின் AIBSNLPWA கடலூர் ஒருங்கிணைப்பாளர் தோழர் E. விநாயகமூர்த்தி புகழஞ்சலி சிறப்புரையாற்றினார்.
அவர் தனது புகழ் அஞ்சலி உரையில் மூத்த தோழர் தமிழ்மணி, மற்றும் தொழிற்சங்க மூத்த தோழர் ஸ்ரீதர் அவையில் இருக்கின்ற பொழுது நான் தோழர் ஜெகனை பற்றி உரையாற்றுவது என்பது அவ்வளவு சால பொருத்தமாக இருக்குமா என்ற ஐயப்பாடு எனக்கு உண்டு. இருந்தாலும் கடலூர் மாவட்ட சங்கம் எனக்கு வாய்ப்பு கொடுத்தமைக்கு நான் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கின்றேன்.
40 ஆண்டு காலமாக தொழிற்சங்கத்தில் பல்வேறு இயக்கங்களில் போராட்டங்களில் நேரடியாக பங்கு பெற்று இருக்கிறேன் .குறிப்பாக தோழர் ஜெகன் அவர்களுடன் சேர்ந்து போராடிருக்கின்றேன். அவர் தலைமையில் நடைபெற்ற போராட்டங்களில் நேரடியாக பங்கு பெற்ற தோழன் என்ற முறையில் சில கருத்துக்களை பதிவு செய்ய விரும்புகின்றேன்.
தோழர் ஜகன் அவர்கள் நமது ஊரில் அதாவது கடலூரில் தான் தனது தொலைத்தொடர்பு வாழ்க்கையை தொடங்கியவர்.
தொழிற்சங்க பணிகளில் மட்டும் அல்லாமல் சமூக சேவையிலும் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார். குறிப்பாக கடலூர் வில்வ நகர் காலனி பகுதியில் குழந்தைகளின் வாழ்க்கையில் கல்வி சுகாதாரம் ஆகியவற்றில் அதிக அக்கறை கொண்டிருந்தார். அந்தப் பகுதியில் களத்தில் இறங்கி சிறந்த சேவை செய்தமைக்காக அன்றைய தென்னார்க்காடு மாவட்ட கலெக்டர் அவருடைய சேவையை பாராட்டி கௌரவித்தார்.
தொழிற்சங்கத்தில் தோழர் சிறிலை ஆசனாக ஏற்றுக் கொண்டு தொழிற்சங்கப் பணியை மேற்கொண்டார்.
வாழ்க்கையில் இறுதி மூச்சு வரை இடதுசாரி கொள்கையை பின்பற்றியவர் பின்பற்றியது மட்டும் இல்லாமல் நடைமுறையில் கடைபிடித்தவர். தமிழகத் தொலைதொடர்பு ஊழியர்களுக்கு இடதுசாரி சிந்தனையை ஊற்றியவர்.
அடிமட்ட தொழிலாளர்களின் வாழ்க்கையில் ஒளி விளக்கை ஏற்றியவர்.
அவர் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்ற மனநிறைவு கொள்கின்றேன்.
அவர் உடல் நலம் குன்றிய பொழுது சென்னையில் அவரது இல்லத்தில் சந்தித்த பொழுது மிகவும் கவலை கொண்டேன்.
அவரது இறுதி நிகழ்ச்சியில் கடலூர் தோழர்களுடன் சென்னையில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியது இன்று வரை என் மனதை விட்டு அகலவில்லை.
கடலூர் மாவட்ட சங்கம் அன்றைய மாவட்ட செயலாளர் ஸ்ரீதர் தலைமையில் மறைந்த உடன் புகழ் அஞ்சலி கூட்டம் கடலூர் மாவட்ட சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நமது அரசியல் ஆசான் தோழர் DG, FNTO சங்கத்தின் மூத்த தலைவர் தோழர் கனக சொருபன் மற்றும் நமது சங்கத்தின் தலைவர்கள் பங்கு பெற்று சிறப்பான அஞ்சலி கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்திற்கு களப்பணி ஆற்றியவன் என்ற முறையில் மிக மன நிறைவு கொள்கின்றேன்.
மிகப்பெரிய தலைவரின் நினைவேந்தல் கூட்டத்தில் என்னை சிறப்புரையாற்ற வாய்ப்பு தந்த தலைமைக்கு நன்றி கூறி புகழ் அஞ்சலி உரையை நிறைவு செய்தார்.
மேனாள் மாநில செயலாளர் தோழர் தமிழ்மணி மிக சுருக்கமாக புகழஞ்சலி உரையாற்றினார். தோழர் ஜெகனுடன் நீண்ட காலம் நெருங்கி பணியாற்றக் கூடிய வாய்ப்பு கிடைக்கப்பெற்றவன். அவரைப் போன்ற உனதமான தலைவரை பார்ப்பது என்பது இயலாத காரியம்.
தோழர் விநாயகமூர்த்தி சிறப்பான உரை தந்துள்ளார். அவருக்கு எனது வாழ்த்துக்கள்.
நிறைவாக தேசிய செயலாளர் ஸ்ரீதர் தோழர் ஜெகனுக்கும் கடலூர் மாவட்டத்திற்கும் உள்ள உறவுகளை மிக தெளிவாக எடுத்துரைத்தார். அவருடன் நெருங்கி பிரச்சனைகளை விவாதிக்க கூடிய அளவிற்கு உறவு இருந்ததை எடுத்துரைத்தார்.
இந்தியா முழுவதும் தோழர்களின் நம்பிக்கை பெற்ற தலைவராக இருந்தார் .
தோழர் குப்தாவிற்கு நல்ல ஆலோசகராக செயல்பட்டவர். தமிழக தொழிற்சங்க போராட்டங்களில் கோரிக்கை முழக்கங்களை எவ்வாறு எழுப்ப வேண்டும் என்று கற்றுக் கொடுத்தவர்.
தாய் மொழியான தமிழ் மொழியில் ஒலிக்கரை கொண்டு வந்தவர்.
கேடர் சீரமைப்பை ஊழியர்களுக்கு சாதமாக மாற்றிய பெருமை தோழர் ஜெகனையே சாரும்.
இன்றைக்கு நிறைவான பென்ஷன் பெறுகிறோம் என்றால் தோழர் ஜெகனின் பங்கு மிக முக்கியமானது. பென்ஷன் விதியில் 37 க்கு பதிலாக 37 A விதியை மாற்றியது மிகப்பெரிய சாதனையாகும்.
A என்பது COMBINED SERVICE. இந்த விதி வரவில்லை என்றால் 1990 க்கு பிறகு DOT ல் பணியை சேர்ந்த எவருக்கும் பென்ஷன் கிடைக்க வாய்ப்பு என்பது இல்லை.
அகில இந்திய மாநாட்டில் பங்கு பெறுகின்ற பொழுது மாநாடு நிகழ்வுகளை தொகுத்து மறுநாள் தமிழில் வழங்குவார்.
கடைசியாக தோழர், நமது தோழர் K.V பாலச்சந்தர் அவர்களின் பணி நியமனம் சம்பந்தமான கடிதத்தை டெல்லியில் இருந்து எழுதியதை இன்று வரை அவரது நினைவாக வைத்துள்ளேன்.
தோழர் விநாயகர் மூர்த்தி அவர்கள் மிக அழகான குறிப்புடன் உரையாற்றியதை மிகவும் பாராட்டி தனது உரையை நிறைவு செய்தார்.
நிறைவாக தோழர் நீலகண்டன் நன்றி உரையுடன் தோழர் ஜெகனின் சில குறிப்புகளை பதிவிட்டார்.
தோழர் விநாயகமூர்த்தி உரையை கேட்க முடியாமைக்கு வருந்துகின்றேன்.
பங்குபெற்ற அனைவருக்கும் நன்றிகளை பதிவு செய்தார்.
கூட்டம் காலை சரியாக 9 மணிக்கு துவங்கி 10 மணிக்கு நிறைவு பெற்றது.
No comments:
Post a Comment