இலக்கிய விழா
கும்பகோணம் அச்சு வெல்லம் சார்பாக இன்று 19.6.24 மாலை கும்பகோணம் கிரீன் பார்க் ஹோட்டலில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் அச்சு வெல்லம் கலை இலக்கிய துவக்க விழாவும் சிறப்பாக நடைபெற்றது.
அச்சு வெல்லம் மின் இதழின் ஆசிரியர் தோழமைக்குரிய தோழர் ,நமது இயக்கத்தின் குடந்தை மாவட்ட செயலாளர் தோழர் விஜய் ,அதன் நோக்கத்தை பற்றியும் இன்றைய விழாவின் முக்கியத்துவத்தை பற்றியும் ,கவிதை போட்டியில் பரிசு வென்றவரின் குறிப்புகளையும், விழாவில் பங்கு பெற்ற அனைத்து நல் உள்ளங்களையும் வரவேற்று உரையாற்றினார்.
தஞ்சை நமது தோழர் வல்லம் தாஜ்மஹால் துவக்க உரையாற்றினார்.
கவிஞர் எழுத்தாளர் ஆவணப்பட இயக்குனர் தோழர் ரவி சுப்பிரமணியம் மற்றும் கும்பகோணம் நகர துணை மேயர் உயர்திரு தமிழழகன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கு பெற்று கவிதை போட்டியில் வென்றவர்க்கும் (முதல் மூன்று) மற்றும் ஆறுதல் பரிசு இருவருக்கும் அளித்து சிறப்பு செய்தனர்.
முதல் பரிசு ரூபாய் 10 ஆயிரம் ,இரண்டாவது பரிசு ரூபாய் ஐந்தாயிரம், மூன்றாம் பரிசு ரூபாய் 2500 மற்றும் ஆறுதல் பரிசு ரூபாய் 500 அளித்து பரிசு வென்ற தோழர்களை கௌரவித்தனர்.
பரிசளித்து உரையாற்றிய துணை மேயர் மதிப்புக்குரிய திரு
சு. ப .தமிழழகன் அவர்கள் கலைஞரின் சிறப்பு இயல்புகளையும் அவருக்கும் கலைஞருக்கும் உள்ள தொடர்புகளையும் மிகத் தெளிவாக நல்லதொரு தமிழில் எடுத்துரைத்தார்.
தோழர் விஜயின் தோழமையை பற்றியும், எப்பொழுதும் உற்சாகமாக இருக்கின்ற அவரது சிறப்பு அணுகுமுறை பற்றியும் மிகவும் அழகாக பதிவு செய்தார்.
அச்சு வெல்லம் தொடர்ந்து இயங்க வேண்டும். நல்லது ஒரு கருத்துகளை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும் .எப்பொழுதும் எனது ஆதரவு உண்டு என்று உறுதிபட அறிவித்து , கவிதை போட்டியில் பரிசு வென்ற தோழர்களை வாழ்த்தி உரையை நிறைவு செய்தார்.
பங்குபெற்ற பல தோழர்கள் மிகச் சுருக்கமாக வாழ்த்துரை வாங்கினார்கள் .மேலும் தோழர் விஜயின் துடிப்பு மிக்க செயல்பாட்டை பாராட்டி புத்தகங்களை பரிசளித்து கௌரவித்தனர்.
மாநில சங்கத்தின் உதவி செயலாளரும், ஜெகன் கலை இலக்கிய பெருமன்றத்தின் பொறுப்பாளரும் ஆகிய தோழர் D. ரமேஷ் பங்கு பெற்று மிக சுருக்கமாக வாழ்த்துரை வழங்கினார்.
தேசிய செயலாளர் ஸ்ரீதர் கலந்து கொண்டு சில கருத்துகளை மிக சுருக்கமாக பதிவு செய்தார். இந்த அரங்கம் என்பது எனக்கு புதியது. நான் கலைத்துறையில் அதிக அனுபவம் இல்லாதவன். தமிழக தொலைதொடர்பு ஊழியர் சங்கத்தின் சார்பாக நிகழ்வில் பங்குபெற்ற ,சிறப்பாக நடத்த முயற்சி எடுத்த அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.
தோழர் விஜய் எனது இயக்கத்தின் மாவட்ட செயலாளர் என்பதில் பெருமை கொள்கின்றேன்.
என்னை பொருத்தவரை தொழிற்சங்க அரங்கில் போராடுவது கோரிக்கையை வலியுறுத்தி தர்ணா செய்வது கோரிக்கை முழக்கம் எழுப்புவது , இரு மொழிகளில் பேச்சுவார்த்தை நடத்துவது என்பதுதான் எனக்குத் தெரிந்த கலைகள்.
இந்த அரங்க நிகழ்வுகளை கண்டு ரசிக்க வேண்டும் என்று நான் பங்கெடுத்துக் கொண்டேன். ரசித்துக் கொண்டும் இருக்கின்றேன்.
கலைஞர் நூற்றாண்டு விழா என்பதினால் ஒரு சில கருத்துக்களை பதிவு செய்ய விரும்புகின்றேன். நான் இங்கு நின்று எனது தாய் மொழியில் பேசுவது என்பது தான் சிறப்பான அம்சமாகும் .
இந்தியாவில் இரு மாநிலங்களை தவிர தாய்மொழியின் வளர்ச்சி என்பது மறைந்து அல்லது கரைந்து கொண்டு இருக்கின்றது. நூற்றாண்டுகளாக தாய்மொழிக்கு எந்தவிதமான சேதாரமும் இல்லாமல் நமது தாய்மொழி மட்டும் தான் தமிழ் மட்டும்தான் இருப்பதற்கு முக்கிய காரணமே , திராவிட ஆட்சிதான் குறிப்பாக கலைஞரை தான் அந்த பெருமைகள் சாரும்.
இந்தியாவில் ஒரு மாநில கட்சி முதன்முதலாக ஆட்சியில் அமர்ந்தது தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் தான். இதற்கு முன்பாகவே கேரளாவில் ஆட்சியில் இடதுசாரிகள் அமர்ந்திருந்தாலும், அது அகில இந்திய கட்சியாக ஆக செயல்பட்டு இருந்தது.
உலக அரசியல் வரலாற்றில்,
ஒரு கட்சியின் 50 ஆண்டுகால தொடர்ந்து தலைவராக செயல்பட்டது தோழர் கலைஞர் மட்டுமே.
96 ஆண்டு காலம் வாழ்ந்து இந்தியாவில் தமிழகத்தை முதன்மையான மாநிலமாக மாற்றிய பெருமை தோழர் கலைஞரை சாரும்.
குறிப்பாக சென்னையில் இருந்து டெல்லி வரை புகைவண்டி மூலம் இரண்டாம் வகுப்பில் ஒரு முறை சென்று வந்தால் இந்தியாவின் நிலைமையை நன்றாக புரிந்து கொள்ள முடியும்.
தேர்தல் வாக்குறுதிகள் பல கூறப்பட்டாலும் முழுமையாக நிறைவேறுவது கிடையாது. ஆனால் நான் பெருமையாக முக்கியமானதாக கருதுவது ஒரு கிலோ அரிசி இரண்டு ரூபாய்க்கு என்பதை ஆட்சி பீடத்தில் அமர்ந்த உடனே கையெழுத்து போட்டதுதான். (இன்றைக்கு வேண்டுமானால் இலவசமாக இருக்கலாம்)
நான் சார்ந்திருக்கின்ற தொலை தொடர்பு ஊழியர் சங்கம் சமூக மாற்றத்திற்காக கடுமையாக போராடி வெற்றி பெற்ற சங்கம். ஆசிரியர் போராட்டங்கள் வங்கி ஊழியர் போராட்டங்கள் போன்ற அனைத்து போராட்டங்களுக்கும் ஆதரவு தந்து முன்னிலை பாத்திரம் வகிக்கின்றது.
கலைஞர் அவர்கள் அனைவரையும் அரவணைத்து செல்வதில் அவருக்கு நிகர் அவர் தான். அதன் வழியில் தான் இன்றைய திராவிட முன்னேற்றக் கழகம் செயல்படுகின்றது. அதனால்தான் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் முழுமையான வெற்றி கிடைக்கப்பெற்றது. இந்தியா முழுவதும் இன்னும் ஒன்று பட்டு இருந்தால் இந்தியாவில் நிலைமை மாறி இருக்கும்.
இன்றைய அரசியல் சூழலில் நவீனக் கோயிலாக கருதப்பட்ட பொதுத்துறை நிறுவனங்கள் அழிக்கப்பட்டு கொண்டிருக்கின்றன. தமிழகத்தில் வென்ற 40 பேரும் ஒன்று சேர்ந்து அதற்கு எதிரான குரல் கொடுக்க வேண்டும் ,கொடுப்பார்கள் என்று நம்புகின்றேன்.
நான் தோழர் விஜய் பணியை கண்டு பெருமை கொள்கின்றேன் .
அவருக்கு தொழிற்சங்க இயக்கத்தில் பொறுப்புகள் இருக்கின்றன .அந்த பொறுப்பையும் நல்லதொரு முறையில் செயல்படுத்துவார் என்ற நம்பிக்கையில் ,பரிசுகள் வென்ற அனைத்து கவிஞர்களையும் வாழ்த்தி விடைபெறுகின்றேன் நன்றி வணக்கம்.
நிறைவாக கவிஞர் ரவி சுப்பிரமணியன் அவர்கள் கவிதையை பிடிப்பது எப்படி என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். முதல் மூன்று பரிசுபெற்ற கவிதைகளை அழகாக வாசித்து அந்தத் தோழர்களை வெகுவாக பாராட்டினார். நவீனக் கவிதைகள் இலக்கிய கவிதைகள் போன்றவற்றை மிக அழகாக மேற்கொள்ளுடன் பாடியும் எடுத்துரைத்தார்.
கும்பகோணம் தோழர்களுக்கு மற்றும் அச்சு வெல்லம் நண்பர்களுக்கும் பாராட்டுகளை தெரிவித்து குறித்த நேரத்தில் உரையை நிறைவு செய்தார்.
: கும்பகோணம் தொலைத்தொடர்பு ஊழியர் இயக்கத்தின் மாவட்ட தலைவர் தோழர் முகுந்தன் வழக்கமான தோழமையுடன் என்னை அழைத்து கும்பகோணம் நகர எளிமையான நடைபாதை கடையில் தரமான சிற்றுண்டியை தோழமையுடன் வழங்கி
சிறப்பு செய்தார்.
நல்ல மழை பெய்த போதும் ,கவிதை மழை இடைவேளை இல்லாமல் மிகச் சிறப்பாக சென்றது.
No comments:
Post a Comment