NFTE- TMTCLU
மாவட்டச் சங்கங்கள், கடலூர்
ஏன் இந்த போராட்டம் என்று எண்ணி பார்க்க வேண்டாமா???...
காலதாமதம் என்றால் காரணங்கள் வேண்டாமா???....
01-06-2017 கடலூர் மாவட்ட நிர்வாகம் 2 மணி நேரம், 4 மணி நேரம், 6மணி
நேரம் , 8மணி நேரம் வேலை பார்ப்பவராக இருந்தாலும் ஒரு ஒப்பந்த தொழிலாளரை
வைத்து பணி செய்வதற்கு சேவை கட்டணமாக ஒப்பந்தகாரருக்கு ( Service
Charge) நமது BSNL நிர்வாகம் சுமார் ரூ69/- வழங்கப்படுகிறது. இதன் விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
ஒரு ஒப்பந்த
ஊழியரால் ஒப்பந்தகாரருக்கு ஒரு நாள் சர்வீஸ் சார்ஜ் ரூ69/-
மாதத்திற்கு 26 X 69 = 1794 ஆண்டிற்கு 1794 X 12 = 21528
ஒரு தொழிலாளருக்கு சர்வீஸ் சார்ஜாக ஒரு ஆண்டிற்கு பெறப்படும் தொகை =ரூ 21528/-
சுமார் 430
ஒப்பந்த தொழிலாளர் மூலம் பெற்றப்படும் தொகை ரூ 21528 X 430= 9257040
ஆக மொத்தம் BSNL மாவட்ட நிர்வாகம்
சர்வீஸ் சார்ஜ் என்ற பெயரில் ஒப்பந்தகாரருக்கு ரூ 92,57,040/- ( தொன்னூற்று இரண்டு லட்சத்து
ஐம்பத்தேழாயிரத்து நாற்பது ரூபாய் ) வழங்குகிறது.
இதில்
சுமார் 430 ஒப்பந்த ஊழியர்களுக்கு போனஸாக 7000 X 430= 3010000/-
(முப்பது
லட்சத்து பத்தாயிரம் ரூபாய் ஆகும் )
9257040 – 3010000 = 6247040
ஒப்பந்த தொழிலாளருக்கு போனஸ் கொடுத்தது போக மீதம் அவருக்கு கிடைக்கும் லாபம்
மட்டும் ரூ6247040/-
( அறுபத்திரண்டு லட்சத்து நாற்பத்தேழாயிரத்து நாற்பது
ரூபாய் )
ஒப்பந்தகாரர் கட்டும் EMD பணத்தினை காட்டிலும் இது அதிகம்...
இப்போது
சிந்தியுங்கள் தோழர்களே நமது போரட்டத்தின்
நியாயத்தை...
இது நமது உழைப்பால் கிடைக்கும் பணம்,
இது நமது BSNL நிறுவனத்தின் பணம்….
இது கொள்ளை போக அனுமதியோம்...
போராடுவோம்...
வெற்றி பெறுவோம்...
தோழமையுடன்
NFTE- TMTCLU
மாவட்டச்
சங்கங்கள்,கடலூர்.
No comments:
Post a Comment