தோழர் குப்தா ஒரு சகாப்தம்
கடலூர் பொது மோலாளர் அலுவலக வாயிலில் 07/01/2013
அன்று காலை 10 மணியளவில், அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் தோழர் குப்தா
அவர்களுக்கு அஞ்சலி தெரிவிக்கும் பொதுக் கூட்டம் நடைபெற்றது. அனைத்து தொழிற்சங்கங்களும், தங்களது சங்கக் கொடிகளைத் தாழ்த்தி அஞ்சலி
செலுத்தினர். பல்வேறு தொழிற்சங்கத் தலைவர்கள் அஞ்சலி உரை நிகழ்த்தினர்.
தலைவர்கள் நிகழ்த்திய அஞ்சலி உரைகளின் தொகுப்பு
·
தோழர் குப்தாவின் சிறப்புகளையும், பெருமைகளையும்,
அவரது தனித்துவமான அணுகுமுறைகளையும் ஒரிரு மணிகளில் தெரிவித்து விட முடியாது.
அவரது தொழிற்சங்க வாழ்வே நமக்கு ஒரு பாடம்.
·
இந்திய சரித்திரத்திலேயே இல்லாத அளவிற்கு நமக்கு
ஒரு பென்ஷன் திட்டத்தினைப் பெற்றுத்தந்தவர். நாம் BSNL ஆக மாறும் போது, அவரது சிந்தனையில் அனைத்து
ஊழியர்களின் பணிப் பாதுகாப்பு, பென்ஷன், ஊதிய உயர்வு ஆகியவை மட்டுமே
நிறைந்திருந்தது.
·
தபால் தந்தி – மற்றும் தொலை தொடர்புத்துறை
ஊழியர்களிடையே மிகச்சிறந்த தலைவராக விளங்கியவர் தோழர் குப்தா. அவரைப்
புறக்கணித்துவிட்டு நமது துறைகளின் சரித்திரத்தை எழுத இயலாது.
·
நம்புவதற்கரிய, ஆகப்பெரிய மனித நேயர். அவருடன் சற்றே
பழகியிருந்தாலும் அவரது உண்மையான அன்பையும், மனைத நேயத்தையும், எளிமையினையும்
கண்டு அதிசயிக்காமல் இருக்க முடியாது. தொழிற்சங்க வேறுபாடுகள் அனைத்தையும் கடந்து
அனைத்து தலைவர்கள் மற்றும் ஊழியர்களிடம் பேரன்பைப் பொழிந்தவர்.
·
தற்போதைய “தாதா கோஷ் பவன்”
தோழர் குப்தாவிற்கு உரிமையானது. அதனை தொழிற்சங்கத்திற்காக மனமுவந்து அளித்த மகான்.
அத்தகைய மனம் எவருக்கு வரும்?
·
தொலைதொடர்பு மற்றும் தபால் தந்தி இயக்கத்தில் ஒரு
இடதுசாரி சிந்தனையை உருவாக்கியதில் அவரது பணி மகத்தானது.
·
ஒருக்காலும் ஒருபொழுதும் EGO அவரை நெருங்கியதே இல்லை. எத்தகைய பெரிய பதவி
வகித்தாலும், தற்பொழுது நம்மிடையே காண்பதற்கு கடினமாக இருக்கும் EGO பிரச்சினையினை விட்டொழித்தவர். பழகுவதற்கு மிக எளிமையானவர். அனைத்து தரப்பு ஊழியர்களிடமும்
நம்புவதற்கு அரிய எளிமையுடன் வாழ்ந்து காட்டியவர்.
·
தள்ளாத வயதிலும் சென்ற வருடம் நடந்த “பாராளுமன்றத்தினை
நோக்கிய பேரணியில்”
தானாகவே முன்வந்து வந்து கலந்து கொண்டவர். இறுதி வரை போராட்டமும், ஊழியர்களின்
நலன்களுமே அவரது சிந்தனையில் இருந்தது.
·
ஊழியர்களின் பிரச்சினைகளை மிக
நுணுக்கமாகப் புரிந்து கொள்ளக் கூடியவர். அனைத்து பிரச்சனைகளையும் முன் கூட்டியே
அனுமானிக்கக் கூடிய தொழிற்சங்க விஞ்ஞானி. அதற்கான தீர்வுகளையும் சொல்லக் கூடிய
திறமைசாலி.
·
ஆரம்ப காலங்களில் சிதறிக் கிடந்த
தொழிற்சங்கங்கள் அனைத்தையும் திரட்டி UPTW என்ற
அமைப்பினை உருவாக்கிய சிற்பி.
·
P&T
ஆக இருந்த போதிலும் சரி, DOT ஆக இருந்த போதிலும் சரி, பின்பு BSNL ஆக மாறிய போதும்
சரி, குப்தாவின் தாக்கம் இல்லாத ஊழியர்கள் நலன் பற்றிய நிர்வாக முடிவுகள் மிகக்
குறைவே.
·
தொழில் நுட்ப மாற்றங்கள் அனைத்தையும்
மிக நுட்பமாக கவணிக்கும் ஆற்றலும், வல்லமையும் கொண்டவர். அத்தகைய தொழில் நுட்ப
மாற்றங்கள் அனைத்தையும் ஊழியர்கள் கற்றுக் கொண்டாக வேண்டும், அதன் மூலம் பதவிகளை
மேம்படுத்துதல் மற்றும் ஊதிய உயர்வுகளை பெற்றுததருதல் ஆகியவற்றை தன் உயிர்
மூச்சாகக் கொண்டவர். எந்த முடிவாக இருந்தாலும் அடிமட்டத் தொழிலாளியின் நலன் அவரது
கருத்தை விட்டு அகன்றதே இல்லை.
·
சிக்கலான பிரச்சனைகளை அவர் அணுகும்
விதமே அலாதியானது. தனித்தன்மையானது. எல்லா
சிக்கல்களையும் அதற்கான தீர்வுகளையும் முன் கூட்டியே அனுமானிக்கக் கூடியவர்.
·
அவர் இல்லாவிடில் நாம்
பெற்றிறுக்கும் பல்வேறு பதவி உயர்வுத்
திட்டங்கள் கிடைத்திருக்க முடியாது.
·
“தொழிற்சங்க ஒற்றுமை” என்பது அவரது உயிர் மூச்சாக இருந்தது. “Unity
in Diversity” , “Unity at all Cost” போன்றவற்றை ஒரு முழக்கமாகக் கொண்டவர்.
·
தனது 24 -வது வயதில், நமது துறையில் அவர் மேற்கொண்ட தொழிற்சங்கப் பணியினை 92-வது வயது வரை
தளர்வின்றி நடத்திக் காட்டிய போராளி.
·
நமக்குள் ஒற்றுமையை எப்பாடு பட்டேனும்
கட்டிக்காப்பது மட்டுமே அத்தகைய மாமனிதருக்கு,
தோழருக்கு நாம் செலுத்தும் உண்மையான ஆஞ்சலியாகும்.
==========================================
============================================
AIBSNLOA CHQ
He was the inspiration and guidiling light to most of the erstwhile
P&T and now the Telecom employees. He had a clear foresight
on various issues which confronted the employees, organised
glorious struggles on those issues and invariably achieved
success. His demise is an irreparable loss to the BSNL trade union movement.
============================================
==========================================
Rural Postal Employees Union
The Greatest and Unique leader in P&T Movement Com. O.P. Gupta, who sacrificed and dedicated entire life for the cause of Postal and Telecom Employees is no more. Com. Gupta expired on 06-01-2013 evening leaving all the Postal, Telecom and Central Government Employees in deep sorrow. It is Great loss to the working class movement in general and to the P&T movement in particular. AIPEDEU Expressed the deepest Condolence to the bereaved family of departed leader. He left not only his sons and daughters but also thousands of followers.
ALL INDIA RMS & MMS EMPLOYEES UNION
With profound grief we sadly announce the demise of our great unparalled leader for 60 long years Com.O.P.Guptaji.The entire central Govt Employees, and particularly P&T employees owe their entire life to Him for his ontribution for their welfare.We pledge to carry forward his legacy.
06-01-2013: Com.O.P.Gupta, ex Secretary General NFPTE , ex Founder General Secretary R IV the founder of NFTE and one of the tallest leaders of the P&T trade union movement passed away at 8 PM today the 6th January,2013. He was 90 years. CHQ R4 NFPE express deep condolences on the demise of Com.O.P.Gupta and directs all the branches of AI RMS &MME EU MGS &MTS of to fly the union flag in half mast.
============================================AIBSNLOA CHQ
He was the inspiration and guidiling light to most of the erstwhile
P&T and now the Telecom employees. He had a clear foresight
on various issues which confronted the employees, organised
glorious struggles on those issues and invariably achieved
success. His demise is an irreparable loss to the BSNL trade union movement.
============================================
Really, the history went to sleep... thanks for the post sir - Srinath.
ReplyDelete