தமிழ் மாநில
தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம்
மாவட்டச்
சங்கம். கடலூர்.
தோழர்களே!
நமது மாவட்ட சங்கத்தின் சார்பில் அவசர மாவட்ட
செயற்குழு கூட்டம் தோழர் M.S.குமார்
அவர்களின் தலைமையில் NFTE மாவட்ட
சங்க அலுவகத்தில் நடைபெற்றது. வரவேற்புரையாக
தோழர் G.ரங்கராஜ்
அவர்களை செயற்குழுவிற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்றார். செயற்குழுவில் A.C.சுப்ரமனியன் மாநில உதவிச் செயலர், R.பண்ணீர்செல்வம் கிளைச்
செயலர் , மற்றும் தோழர் S.அண்ணாதுரை, M.மணிகண்டன் , M.சுரேஷ், முருகன் (திண்டிவனம்) ,
சிதம்பரம் பகுதி தோழர்கள் K.சுந்தர், கிருஷ்னகுமார்,தோழர் கென்னடி
(KTL) உள்ளிட்ட பல பகுதியிலிருந்து வந்திருந்த தோழர்கள்
தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர்.
வாழ்த்துரையாக தோழர் D.ரமேஷ் மாநில உதவிச் செயலர்,
விருது நகர்(NFTE), அவர்களின் உரையில் கடலூர் மாவட்டம்
எப்போதும் உத்வேகத்துடன் செயல்படும் தோழர்கள் நிறைந்த மாவட்டம் என்றும் உங்களின்
நியாயமான கோரிக்கைகள் வெற்றி பெற வாழ்த்துக்கள் என்றும் பதிவு செய்தார்.
அடுத்தப்படியாக தோழர் P.பாலமுருகன் மாநில அமைப்புச் செயலர் (NFTE),குடந்தை, அவர்களின் உரையில் எங்களது பகுதியில் சுமார் 80%க்கு மேல்
ஒப்பந்த தொழிலாளர்கள் நமது TMTCLU சங்கத்தில் தான்
உள்ளனர். மாவட்ட ஆட்சியர் நிர்ணயித்த
குறைந்தபட்ச கூலியினை எங்களது பகுதியில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியருக்கு நிலுவை
தொகையுடன் வாங்கி கொடுத்தோம் என்பதனை பெருமிதத்துடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இந்த கடலூர் மாவட்டம் எல்லா விதமான ஆக்கப் பூர்வாமான செயல்பாடுகள் உருவாக்கும் வீரம் விளைந்த மண் . அந்த வகையில் நீங்களும் உங்களது அமைப்பை பலப்படுத்தி பலம்
பொருந்திய சங்கமாக உருவாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.
நமது மாநில பொதுச்
செயலர் தோழர் R.செல்வம் அவர்கள் நமது
சங்கம் சமவேலைக்கு சம ஊதியம் பெறுவதற்கும், விடுமுறை நாட்களுக்கு சம்பளம் பெறுவதற்கும் வழக்கு
தொடுத்துள்ளோம். மிக விரைவில் பலனடைய
போகிறோம் என்று கூறினார். அடுத்தப்படியாக மாநில இணைப் பொதுச் செயலர் சு.தமிழ்மணி அவர்களின்
உரையில் மிக விரைவில் TMTCLU சங்கம் அகில இந்திய சங்கமாக
உருவாக NFTE மாநில ,
மத்திய சங்கம் எல்லா விதமான முயற்சிகளை
செய்து வருகிறது என்றார். அடுத்தப்படியாக நமது மாவட்ட செயலர் தோழர் G.ரங்கராஜ் அவர்கள்
கருத்துக்களை கேட்டறிந்து தீர்மானங்களை
தொகுத்து வழங்கினார்.
மருத்துவ
விடுப்பிற்கு பிறகு கலந்து கொண்டு நிறையாற்றிய நமது NFTE மாவட்டச் செயலர் தோழர் இரா ஸ்ரீதர் அவர்களின்
உரையில் நாம் நமது அமைப்பினை பலம் பொருந்திய சங்கமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
அதற்காக ஒப்பந்த ஊழியர்கள் அனைவரும் தொடர்ச்சியாக பாடுபட வேண்டும் எனவும். ஊதிய மாற்றத்தை நோக்கி நாம் பயணிப்போம். நிச்சயம்
கடலூர் NFTE மாவட்ட சங்கம் மட்டுமில்லை அகில இந்திய
சங்கமும் உங்களோடு உறுதுணையாக இருக்கிறது.
ஆகவே தோழர்களே நம்பிக்கையோடு செயல்படுங்கள் நிச்சயம் மாற்றம் வரும். நியாயமான
தீர்மானங்களை எடுத்துள்ளீர்கள் . இந்த நியாயமான தீர்மானங்கள் வெற்றி பெற NFTE மாவட்ட
சங்கம் உங்களுக்கு உறுதியாக இருக்கும்
பதிவு செய்தார்.
இறுதியாக தோழர் S.அண்ணாதுரை மாவட்ட பொருளாளர் அவர்கள்
நன்றியுரை கூறினார்.
அவசர
மாவட்ட செயற்குழுவில் ஒருமனதாக எடுக்கப்பட்ட தீர்மானங்கள்
1. தொடர்ச்சியாக காலதாமதமாக ஒப்பந்த
ஊழியருக்கு சம்பள பட்டுவாட செய்யப்பட்டு வருகிறது. இச்செயல் கவலை தருகின்ற அம்சம். உடனடியாக மாவட்ட
நிர்வாகம் தலையிட்டு குறித்த தேதியில் சம்பள பட்டுவாட செய்ய வேண்டும் என்று
இச்செயற்குழு வலியுறுத்துகிறது.
2.ZONE-Iல் பணிபுரியும் எந்தவொரு ஒப்பந்த ஊழியரையும்
எந்த சூழ்நிலையிலையும் ஆட்குறைப்பு செய்யக் கூடாது என்று இம்மாவட்ட செயற்குழு
வலியுறுத்துகிறது.
3. கடலூரில் வேலையிலிருந்து
நீக்கப்பட்ட தோழர்களை உடனடியாக பணி வழங்கிட இம்மாவட்ட செயற்குழு கேட்டுக்
கொள்கிறது.
4.அடையாள அட்டை வழங்குவதில்
தொடர்ச்சியாக நிர்வாகத்தினை வலியுறுத்தியும், அதன் முக்கியத்துவத்தை உணராத மாவட்ட நிர்வாகத்தின் போக்கை இம்மாவட்ட
செயற்குழு வண்மையாக கண்டிக்கிறது.
5. புதிதாக ஆள் எடுப்பதற்கு முன்பாக
பகுதி நேர ஊழியர்களை முழு நேர ஊழியராக மாற்றுவதற்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என
இச் செயற்குழு கேட்டுக் கொள்கிறது.
6. தனி நபர் பிரச்சனைகள் 1.தோழர்
முருகன் (திண்டிவனம்) வேலை பார்ப்பது EOI-ல் ஆனால்
சம்பளம் பெறுவது HOUSE
KEEPING ஓப்பந்தகாரர் மூலம். 2. தோழர் கோபி ஏற்கனவே
முழு நேர ஊழியராக திண்டிவனம் பகுதில்
பணிபுரிந்த அவரை ஆட்குறைப்பு என்ற பெயரில் 2மணி நேர ஊழியராக விழுப்புரத்தில்
வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளார். 3.லால்பேட் பகுதியில் பணிபுரிந்து இறந்து போன
தோழர் வேலுமணி அவரின் மனைவிக்கு வேலை வழங்குவதாக மாவட்ட நிர்வாகம் உறுதியளித்தது. 4.
நெல்லிக்குப்பத்தில் கேபிள் பகுதியில் பணிபுரியும் தோழர் P.சுந்தரமூர்த்தி
அவர்களுக்கு 6மணி நேர வேலையை 8மணி நேர வேலையாக மாற்ற வேண்டும். 5.தோழர் நீலமேகம் அவர்களுக்கு 8 மணி நேரமாக
மாற்ற வேண்டும் இன்னும் மாவட்ட அளவில் பல்வேறு பிரச்சனைகள் உள்ளது அதன் மீது
மாவட்ட நிர்வாகம் உரிய கவனம் செலுத்த மாவட்ட செயற்குழு கேட்டுக் கொள்கிறது.
7. 01-04-2016 அன்று மாவட்ட
ஆட்சியர் நிர்ணயித்த குறைந்தபட்ச கூலியை கணகீட்டு நிலுவை தொகையினை ஒப்பந்த
ஊழியர்களுக்கு உடணடியாக வழங்கிட உரிய நடவடிக்கை எடுத்திடவும் இம்மாவட்ட செயற்குழு
கேட்டுக் கொள்கிறது.
மேற்கண்ட கோரிக்கை தீர்விற்கு கூட்டியக்கம்
நடத்துவதற்கு மாவட்ட செயற்குழுவில் முடிவு
எடுக்கப்பட்டுள்ளது.
ஆகவே
தோழர்களே!..
நாம் போராட
தயராகுவோம்....
வெற்றி
பெறுவோம்....
தோழமையுடன்
G.ரங்கராஜ்
மாவட்டச் செயலர்
TMTCLU,கடலூர்.
No comments:
Post a Comment