கடலூர் தொலைபேசி கிளை சார்பில் தோழர் K தக்ஷ்ணாமுர்த்தி TM பணி ஓய்வு பாராட்டு விழா மூத்த தோழர் K பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. தொலைபேசி கிளை சார்பில் ஒருங்கிணைந்த சேவை வளாகத்தில் முதன்முறையாக நடைபெற்ற விழாவின் ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டிருந்தது .
நமது அகில இந்திய துணை பொது செயலாளர் தோழர் C K மதிவாணன் அவர்கள் கலந்து கொண்டு பணி ஓய்வு பெறும் தோழரை வாழ்த்தினார். அவர் தனது உரையில் புதுதில்லியில் நடைபெற்ற BSNL கருத்தரங்கத்தை பற்றியும் போனஸ் பற்றியும் விரிவாக பேசினார். கடலூர் மாவட்டம் போராட்ட குணம் கொண்ட மாவட்டம் என்றும் அனுபவமிக்க மாவட்ட செயலரை கொண்டுள்ளது என்றும் எந்த பிரச்சினையாயினும் ஒன்றுபட்ட இயக்கத்தால் மட்டுமே தீர்வு காண வேண்டியுருக்கும் இந்த நேரத்தில் நமக்குள் ஒற்றுமை இல்லாமல் இருப்பது சரியல்ல என்றும் அறிவுருத்தினார்.
மாவட்ட செயலர் இரா ஸ்ரீதர் தனது வாழ்த்துரையில் தோழர் தக்ஷ்ணாமூர்த்தியின் இயக்க பற்று மற்றும் தோழமை உணர்வை பற்றி நினைவு கூர்ந்தார். தான் எந்த நேரத்திலும் பண்பாடற்ற வார்த்தைகளை வலைத்தளத்தில் பயன்படுத்தியதில்லை என்பதை புதுவை மற்றும் கோவை தோழர்களுக்கு தெளிவு படுத்த வேண்டும் என்றும் பேசினார் .
விழாவில் சம்மேளன செயலர் G ஜெயராமன் , மாநில பொருளாளர் K அசோகராஜன் ஆகியோர் கலந்து கொண்டு பணி ஓய்வு பெறும் தோழரை வாழ்த்தினர்
GM அலுவலக கிளை சார்பில் மூத்த தோழியர் K விஜயலட்சுமி மற்றும் பொறுப்பு செயலர் S ராஜேந்திரன் கலந்து கொண்டு வாழ்த்துரையாற்றினர்
தோழர் தக்ஷ்ணாமூர்த்தி பணி ஓய்வு காலம் சிறக்க வாழ்த்துகிறோம்
தோழர் CKM இன் வேண்டுகோளின் படி இனி நண்பர்கள் எதிர்மறை போக்கை கைவிட்டு ஒற்றுமை பாதைக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.
No comments:
Post a Comment