தோழர்களே!
கும்பகோணத்தில் 10-09-2016ல் நடைபெற்ற TMTCLU மாநில செயற்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் படி நாம் நமது மாநில நிர்வாகத்தை 20-09-2016 அன்று சந்தித்து கடிதம் கொடுத்து விவாதித்ததும், துணைப் பொது மேலாளர் (நிர்வாகம் ) அவர்கள் நமது தலைமை பொது மேலாளர் வந்த பிறகு விவாதித்து முடிவு செய்யலாம் என்று கூறினார். அதன் அடிப்படையில் 20-10-2016 அன்று தலைமைப் பொது மேலாளர் அவர்களை NFTE மாநில தலைவர் தோழர் P.காமராஜ், மாநில செயலர் தோழர் K.நடராஜன், மாநில உதவி செயலர் தோழர் G.S.முரளிதரன் மற்றும் TMTCLU மாநில பொதுச்செயலர் தோழர் R.செல்வம் ஆகியோர் சந்தித்து ஒப்பந்த ஊழியர்களின் பல்வேறு
பிரச்சனைகளை விவாதித்தனர். முக்கியமாக, கேரள மாநில BSNL நிர்வாகம் ஒப்பந்த ஊழியர்களை Skilled/Semiskilled என வகைப்படுத்தி அவர்களுக்கு சம்பளம் வழங்கி வருகிறது, அதே முறையை நமது தமிழகத்திலும் கடைபிடிக்க மாநில
நிர்வாகத்தை வலியுறுத்தி கடிதம் கொடுக்கப்பட்டது. CGM அவர்களும் இதனை மத்திய
நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பி ஒப்புதல் பெற்றபின் அமுல்படுத்த ஆவண செய்வதாகக்
கூறினார். அதன் முதல் பலனாக இன்று (25-10-2016) அனைத்து மாவட்ட நிர்வாகத்திற்கும் காலக்கெடு தேதியிட்டு கடிதம் அனுப்பியுள்ளது.
கடிதத்தின் சாரம்:
1. இந்த வருடத்திற்கான போனஸ் நிர்வாகத்தின் வழிகாட்டு- தலின்படியும் மற்றும் ஒப்பந்த ஷரத்தின்படியும் உடனடியாக வழங்க வேண்டும்.
2. மத்திய/மாநில நிர்வாகத்தின் உத்தரவுகள் முறையாக அமுல்படுத்தப் படுகிறதா என்பதை கண்காணிக்க NODAL அதிகாரியை அனைத்து மாவட்டங்களிலும் நியமித்து, அவர்களுடைய பெயர்,பதவி மற்றும் தொலைபேசி எண் ஆகிய விவரங்களை 15-11-2016 -க்குள் மாநில நிர்வாகத்திற்கு தெரிவிக்கவேண்டும்.
3. 15-11-2016 க்குள் அனைத்து ஒப்பந்த ஊழியர்களுக்கும் அடையாள அட்டை ஒப்பந்த தாரர்கள் மூலம் வழங்கப்படவேண்டும்.
4. 30-11-2016 க்குள் அனைவருக்கும் ESI அட்டை வழங்கிடப்படவேண்டும்.
5. ஒப்பந்த ஊழியர்களது EPF முறையாக கட்டப்பட உறுதிசெய்ய வேண்டும்.
மேற்கண்ட அனைத்து விவரங்களையும் 30-11-2016க்குள் மாநில நிர்வாகத்திற்கு தெரிவிக்கவேண்டும்.
தோழமையுடன்,
R.செல்வம்
மாநில பொது செயலர் TMTCLU
No comments:
Post a Comment