.

Friday, July 28, 2017

AITUC சார்பில் நடைபெற்ற கோட்டை நோக்கி பேரணியில்
TMTCLU சங்கத் தோழர்கள்
தமிழக AITUC சார்பில் பல்வேறு துறைகளில் பணிபுரியும்  ஒப்பந்த தொழிலாளர்களுக்கு  உச்ச நீதிமன்றம் வழங்கிய சமவேலைக்கு சமஊதியம் தீர்ப்பை அமுல்படுத்திட  வலியுறுத்தி இன்று (28.7.2017) சென்னையில் AITUC மாநில செயலர் தோழர் T.K.மூர்த்தி தலைமையில் கோட்டை நோக்கி மாபெரும் பேரணி நடைபெற்றது. தமிழகம் முழுவதுமிருந்தும் பல்லாயிரக்கணக்கான ஒப்பந்த தொழிலாளர்கள் பேரணியில் கலந்துகொண்டனர். AITUC மாநில செயலர் தோழர் சுப்புராயன், தோழியர் வஹிதாநிஜாம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நமது பகுதியிலிருந்து மாநிலம் முழுவதிலுமிருந்து சுமார் 500க்கும்மேற்பட்ட  TMTCLU ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கத் தோழர்கள் மாநிலப் பொதுச்செயலர் தோழர் R.செல்வம் தலைமையில் திரளாக கலந்து கொண்டனர். தோழர்கள் P.காமராஜ், தோழர் K.நடராஜன், தோழர் சேது, தோழர் விஜய், மாவட்ட தோழர் இரா.ஸ்ரீதர், தோழர் V.இளங்கோவன் உள்ளிட்ட தோழர்களுடன், கடலூர் மாவட்டத்திலிருந்து சுமார் நூற்றுக்கணக்கான TMTCLU சங்க ஒப்பந்த தொழிலாளர்கள் கலந்துகொண்டனர்.  



No comments:

Post a Comment