Saturday, July 22, 2017

  உச்ச நீதிமன்ற தீர்ப்பு - சம வேலைக்கு சம ஊதியம்


 முன்னாள் மாநிலச் செயலர் 
தோழர் பட்டாபி
தமது உரையில்:

          தோழர்களே இந்த கருத்தரங்கம் யாரையும் திருப்திப்படுத்த அல்லயாரையும் விமர்சனம் செய்யவும் அல்லநிஜ நாடகம் அறிவிப்பு நிலையிலேயே பல விமர்சனங்களை எதிர்கொள்ள நேர்ந்ததுஆனால் அந்த நாடகமும் கூட அரசுக் கொள்கைகளை விமர்சித்துத்தான் நம்முன்னே நடித்துக் காட்டப்பட்டது.
          இன்றைய அரசு public employment எனப்படும் அரசு வேலை / அரசுப் பணி என்பதை வெகுவாகக் குறைத்து ஒப்பந்த முறை பணிகளை அதிகப்படுத்தி வருகிறதுபொதுச் சேவையை வழங்கக் கூடிய பொதுத்துறை நிறுவனங்களிலும் கான்டிராக்ட் மூலமாக / தனியார் பணியமர்த்தல் ஒப்பந்தம் மூலமாகவே வேலைகள் நடைபெறுகின்றனஅந்தத் தொழிலாளிகள் BSNL க்காக வேலை செய்வார்கள் ஆனால் அவர்களின் முதலாளி கடலூரில் பாலாஜி ஏஜென்சி போல ஒரு தனியார் கான்டிராக்ட் நிறுவனமாக இருக்கும்.
          இந்த நிலைமைதான் தொழிற்சங்கத்திற்கு சவாலாக இருக்கிறதுஉரிமைகளுக்காகக் கோரிக்கை வைத்து நிரந்தரத் தொழிலாளிகளைத் திரட்டுவது எளிதாக இருக்கிறது. ஆனாலும் ஒப்பந்த ஊழியர்களைத் திரட்டுவது என்ற சவாலான பணியை NFTE எடுத்துள்ளது. அதன் ஒரு அம்சம்தான் இந்தக் கருத்தரங்கம்.
          சமவேலைக்கு சம ஊதியம் தீர்ப்பில் பல்வேறு தீர்ப்புகள் அடங்கி உள்ளன. இதுகுறித்து சுமார் 20 தீர்ப்புகள் உள்ளனநமக்குள்ள அனுபவம் காசுவல் லேபர் என்றதினச்சம்பளக்காரர்கள்பற்றியது. 1975 மைசூரில் நடைபெற்ற சம்மேளளக்குழுக் கூட்டத்தில் ( Organise the Unorganised ) திரட்டப்படாத தொழிலாளிகளைத் திரட்டுவது என முடிவு செய்யப்பட்டது.
          1954 ல் ஈடி / காசுவல் மஸ்தூர் அனைவரையும் நிரந்தரம் செய் என்ற முரட்டுக் கோரிக்கையை விடுதலை பெற்ற நேரு சர்க்கார் எதிர்கொண்டது. இந்தியாவில் முதலாளிகள், தொழிலாளர் சங்கங்கள், ஆளும் அரசு இவர்களின் பிரதிநிதிகள் கூடி விவாதிக்க முத்தரப்பு மாநாடு கூட்டப்பட்டது.   சில சட்ட உரிமைகள், சட்டப் பாதுகாப்பு, எனச் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டன.
          நம்முடைய நாடு சட்டத்திற்கு உட்பட்டு ஆளப்படும் நாடு. இதில் பாராளுமன்றம் / நீதிமன்றங்கள் என்பன சட்டங்கள் இயற்றவும், அப்படி கொண்டுவரப்படும் சட்டங்கள் அரசியல் அமைப்பு சட்ட வரையரைக்கு உட்பட்டு இருக்கிறதா என்பதைக் கண்காணிக்கவும் செய்யும். இதைத் தாண்டி இந்திய நாட்டில் யாருக்கு அதிகாரம் இருக்கிறது?
          சட்டத்திற்கு உட்படாத, சட்டங்களை அமல்படுத்த மாட்டோம் என்று சொல்கின்றன நமது நாட்டின் முதலாளிகளின் கூட்டமைப்புகள்.  இந்திய முதலாளிகள் சங்கமான ஃபிக்கியும் ( FICCI---Federation of Indian Chamber of Commerce and Industries)  மற்றும் இந்திய தொழிலகக் கூட்டமைப்பு (சிஐஐ) எனப்படும்  The Confederation of Indian Industry  (CII ) போன்றவையும். 
            சட்டப்படியான சம்பளம் மற்றும் உரிமைகளை அமலாக்கமாட்டோம் என அடம் பிடிக்கும் இந்த முதலாளித்துவ அமைப்புகளைப் பற்றிக் கூறிப்பிடும் போதுதான் தோழர் சுப்புராயன் அறைகூவல் விடுத்த அணி திரளுங்கள்’  என்பது வருகிறது.
          பல தீர்ப்புகள் அடங்கி உள்ளன என முன்பு நான் கூறியதில் முக்கியமானது 2006 ல் உமாதேவி வழக்குஎன அறியப்படும் வழக்கில் ஐந்து நீதிபதிகள் அடங்கிய உச்சநீதிமன்றத்தின் பென்ச்சு வழங்கிய தீர்ப்பு. அதன் முக்கியமான அம்சம் அரசாங்க பணி இடங்களை நிரப்புவது என்பது ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆளெடுப்பு விதிகள் மூலமாக மட்டுமே நடைபெற முடியும் ; வேறு வகையில் காலி இடங்களை நிரப்ப முடியாது.
          அதன் மூலமாகத்தான் கான்டிராக்டர் மாறினாலும் ஊழியர்களை மாற்ற முடியாது, ஊழியர்கள் தொடர்ந்து பணி அமர்த்தப்பட வேண்டும் என வேலை மறுக்கப்பட்ட 250 தோழர்களைக் காப்பாற்றினோம்.
          நம்முடைய சம்மேளனத்தின் முயற்சியால் DG (P&T) யிடமிருந்து உத்தரவு பெற்றோம் வருடத்திற்கு 240 நாட்கள் வீதம் மூன்று ஆண்டுகள் பணியாற்றியிருந்தால் நிரந்தர ஊழியர் சம்பளத்தில் முக்கால் சம்பளம்அதுவே, ஐந்து ஆண்டுகள் பணியாற்றியிருந்தால் முழு சம்பளம் என்ற முன்னேற்றங்களைக் கண்டோம்
          
          நேரு யுவ கேந்திரா ஊழியர்கள் சங்கம் சல்யூட் செய்யப்பட வேண்டியவர்கள்.  அவர்களிடம் ஊழியர்கள் எண்ணிக்கை குறைவு என்ற போதிலும் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து தங்களுடையப் பகுதிக்கு சம வேலைக்கு சம சம்பளம் தீர்ப்பைப் பெற்றார்கள்.  அந்தத் தீர்ப்பைச் சுட்டிக் காட்டி தபால் தந்தித் துறையில் பாரதிய சங்கம் வழக்கு தொடர்ந்தது. தலைவர் குப்தா நம்முடைய சங்கத்தையும் அந்த வழக்கில் இணைத்துக் கொண்டு கடுமையாக      முயன்றதற்குப் பிறகுதான1986  உச்சநீதி  மன்றம்  கேசுவல்  மஸ்தூர்  ஊழியர்களை நிரந்தரம் செய்ய  வழிவகை  செய்த ஒரு  போற்றத்தக்க  தீர்ப்பை   வழங்கியது.   ஓராண்டு   தொடர்ந்து   பணியில் இருந்திருந்தாலே நிரந்தரம் செய்ய திட்டம் வகுக்க வேண்டும் என  அரசை அறிவுறுத்தியது.  நிரந்தரம்  செய்தது மட்டுமின்றி ஊதிய  நிலுவைத் தொகையைதயும் பெற்றுத் தந்தோம்.
            P&T மேனுவலிலேயே காசுவல் மஸ்தூர்களை பணியமர்த்தும் ஷரத்துகள்  நீக்கப்பட்டு விதிகள் திருத்தப்பட்டன.
     கேசுவல் / ஒப்பந்த ஊழியர் / தற்காலிக ஊழியர் என அழைக்கப்படும் பணித்தன்மைகளில் சட்டரீதியான நுட்பமான வித்தியாசங்கள் உள்ளன.
          தொழிலாளர் நலத்துறை அமைச்சர் திரு ஹரீஷ் ராவத் அவர்களிடம் ஒப்பந்த ஊழியர்களுக்கு கிராக்கிப் படி சேர்த்து வழங்க கோரிக்கை மனு அளித்தோம்தோழர் தமிழ்மணியும் முரளியும் தொடர்ந்து முயற்சி செய்து டிஏவை சேர்த்துத் தர உத்தரவு பெற்றனர். இப்படி ஒப்பந்த ஊழியர்களின் தொடர் வேலைப் பாதுகாப்பையும் சம்பளத்தையும் உத்தரவாதப்படுத்தியுள்ளோம்.
          1970 ஒப்பந்த ஊழியர்கள் ( ஒழுங்குபடுத்துதல் மற்றும் ஒழித்தல்) சட்ட விதி 25 ல் துணை விதி 2 ன் கீழ் iv  என்பது சம்பளம் எப்படி அமைய வேண்டும் எனப் பேசுகிறதுஅது 1948 சட்டத்தின் படி அல்லது ஒருவர்க்கொருவர் பேசி ஒப்பந்தம் செய்து கொண்டபடி அல்லது குறைந்தபட்ச ஊதிய சட்டப்படி அமையலாம் என்கிறது. இந்த நிலையில்தான், குறைந்த பட்ச ஊதியத்தினை மாற்றியமைக்க வேண்டும் என்ற மத்திய சங்கங்களின் தொடர் போராட்டங்களின் விளைவாக மார்ச் 30, 2016 ல் ரூபாய் 10 ஆயிரம் கொடுக்க வரைவு அறிக்கை (Draft மசோதா) வந்ததுஅது நகல் மசோதாவாகவே இருக்கிறதே தவிர கெசட் நோட்டிபிகேஷனாக உத்தரவாக வெளிவரவில்லை. இந்த நகல் மசோதாவை எதிர்த்தே முதலாளிகளின் சம்மேளனங்கள் / அமைப்புகள் பலத்த எதிர்ப்புக் குரல் எழுப்பத் தொடங்கி விட்டனஇன்றைக்கு நாம் வாங்குகின்ற சில ஆயிரத்தை விட மசோதாவின் சிபார்சு அதிகம் என்றாலும் நாம் முன் வைத்த கோரிக்கை குறைந்த பட்சம் ரூபாய் 15,000/=.  ஆனால் ஏழாவது சம்பளக் குழு அறிக்கைக்கு பின்னர் மத்திய சங்கங்களின் கோரிக்கை ரூ 18, 000/=.  இது தர்க்க அடிப்படையிலானது.
          நகல் மசோதா பற்றி அமைச்சர்கள் குழு, நிதி அமைச்சர் திரு அருண் ஜேட்லி மத்திய தொழிற்சங்க அமைப்புகள் முதலாளிகள் பிரதிநிதிகளுடன் பேசியது. ஒரு நாளைக்கு ரூ 350/-வீதம் 26 நாட்களுக்கு ரூபாய் 9100/= குறைந்த பட்சமாக மாற்றியமைக்கலாம் எனத் தெரிவித்தது.  முதன்முறையாக ஒரு குறிப்பிட்ட தொகையை ரூபாயாக அறிவித்தது இதுவே முதன்முறை என்பது வரவேற்கத்தக்க மாற்றம். ஆனால் நம்முடைய தொழிற்சங்கங்கள்  இந்தத் தொகை  குறைவானது,  அநீதியானது என  ஏற்க மறுத்து விட்டன.     நகலை அசலாக்க நாம் பயணிப்போம்.      நன்றி! வணக்கம்

No comments:

Post a Comment