.

Thursday, June 27, 2013

மாநில செயற்குழு வேலூர் -25-06-2013

மதுரை  மாநில மாநாட்டுக்கு பிறகு நடைபெற்ற முதல் மாநில செயற்குழு. 
BSNL -இல்  அங்கீகார  தேர்தலில் NFTE  வெற்றி பெற்று அங்கீகார உரிமையோடு நடைபெற்ற முதல் செயற்குழு.

ஆறு மாதங்களாக எதிர்மறையாக செயல்பட்ட, எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாத தோழர்கள்  மாநில செயற்குழுவில் கலந்துக்கொண்டது வரவேற்கத்தக்கது.

தேசிய கொடியை தோழர் S. தமிழ்மணி ஏற்றினார். சம்மேளனக் கொடியை வேலூர் மூத்த தோழர் P.மதியழகன் ஏற்றினார். வேலூர் மாவட்ட செயலர் K.அல்லிராஜாவும் தோழர் சென்னகேசவனும் வரவேற்ப்புரையாற்றினர்.
மாநில தலைவர் H.நூருல்லா  தலைமையுரையாற்றினார். மாநில உதவி தலைவர் V.லோகநாதன் அஞ்சலியுரையாற்றினார். மாநில செயலர் R.பட்டாபிராமன்  ஆய்படுபொருளை அறிமுகபடுத்தி உரையாற்றினார்.




மதுரை மாநிலமாநாட்டில் சிறப்பு அழைப்பாளர்களாக நியமிக்கப்பட்ட தோழர் சேதுவையும் தோழர் ஜெயபாலையும் நீக்கவேண்டுமென்று ஆறு மாதங்களாக ஒதுங்கிஇருந்த தோழர்கள் அடம்பிடித்தனர். மாநில தலைவரும் செயலரும் அவர்களின் கருத்துக்களை அமைப்பு நிலையில் விவாதிக்கலாம் என்று உறுதிமொழி கொடுத்த பின்பும் அந்த சில தோழர்கள் செவி சாய்க்காமல் கூச்சல் போட்டுவிட்டு அவையிலிருந்து வெளியேறினர்.

மாநில தலைமை அவர்களை சமரசம் செய்வதற்கு ஒரு குழுவை அமைத்தது.  தங்களில் இரு தோழர்களை  சிறப்பு அழைப்பாளர்களாக  நியமிக்க கோரிக்கை வைத்தனர் . இதனை மாநில செயற்குழு  பரிசீலிக்கும் என்று உத்திரவாதம் அளித்தது. இடையில் திடீரென்று மர்ம தொலைபேசி அழைப்பு வந்த பின்பு அந்த சில தோழர்கள் தடுமாறி நமது அரங்கை விட்டு வெளியேறி வேறு அரங்கிற்கு சென்றுவிட்டனர்.

நமது மாநில செயற்குழு தொடர்ந்து இரவு 9.30 மணி வரை சிறப்பாக நடைபெற்றது. மாநில சங்க நிர்வாகிகள், மாவட்ட செயலர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் தோழர் சேது, தோழர் ஜெயபால், குன்னூர் ரங்கன்,தருமபுரி முனியன், தோழியர் ஷைலா பானு, இளைஞர் குழு சார்பாக குடந்தை விஜய் ஆரோக்கியராஜ் ஆகியோர் கருத்துரையாற்றினர்.

அகில இந்திய அமைப்பு செயலர் S.S.கோபாலகிருஷ்ணன், முன்னாள் சம்மேளன செலயர் தோழர் R.K ,ஒப்பந்த ஊழியர் சங்க மாநில செயலர் தோழர் S.தமிழ்மணி  ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

நமது மாவட்ட செயலர் இரா.ஸ்ரீதர்  நமது கடலூர் மாவட்ட பிரத்யோக பிரச்சினைகளை தெளிவாக குறிப்பிட்டு தனது உரையை பதிவு செய்தார்.
குறிப்பாக தமிழகமெங்கும் அனைத்து மாவட்டங்களிலும் உறுப்பினர் எண்ணிக்கையை விட அதிகமான வாக்குகளை பெற்ற சூழலில், கடலூர் மாவட்டத்தில் மட்டும் உறுப்பினர் எண்ணிக்கையை விட குறைவான வாக்குகளை பெற்றதனை அதிருப்தியுடன் குறிப்பிட்டார்.

மேலும் மாவட்ட மாநாட்டுக்கு பிறகு கடலூர் மாவட்டத்தில் நடைபெறும் அனைத்து நிகழ்சிகளையும் மாநில செயற்குழுவின் கவனத்திற்கு கொண்டு வந்தார். குறிப்பாக மாவட்ட மாநாடு முடிந்து நான்கு மாதங்களாகியும்  பீரோ சாவி கொடுக்கபடாததையும் நிதியினை ஒப்படைக்காததையும் சுட்டிக்காட்டினார்.

கடலூர் கூட்டுறவு பண்டகசாலை தேர்தல் நடைபெற்ற விதத்தையும் அதன் காரணமாக  ஏற்பட்ட  பிரச்சினைகளையும் தெளிவாக குறிப்பிட்டார்.மாவட்ட செயலருக்கு (இரா.ஸ்ரீதர்) எதிராக  கடலூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநில உதவி செயலர்  தோழர் L .சுப்பராயன்  கலந்து கொண்டு கண்டன உரையாற்றியது கண்டனத்திற்குரியது  என்று பதிவு செய்தார்.

கடலூர் மாவட்டத்தின்  பிரத்யோக சூழ்நிலையினை கருத்தில் கொண்டு ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  செயற்குழுவில் வலியுறுத்தினார் . மேலும் JTO பதவி உயர்வு தேர்வில் உள்ள குளறுபடிகளை மிக தெளிவாக சுட்டிக்காட்டி மாநில சங்கம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
TM போட்டி தேர்வுக்கான கல்வி தகுதியை நீக்கி தேர்வு நடத்த 
கேட்டுக்கொண்டார்.
 78.2 IDA Merger  பெற்றுத்தந்த மாநில, அகில இந்திய சங்கத்திற்கு நன்றி தெரிவித்தது மட்டுமின்றி அதனால் நமது மாவட்டத்தில் 80 தோழர்களுக்கு மேல் ஏற்படும் தேக்கநிலையை நீக்க மாநில சங்கம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

சம்மேளன செயலர் தோழர் G.ஜெயராமன்  தனது சிறப்புரையில் மாநில செயற்குழுவினை பற்றியும் நமது மாவட்ட செயலரை பற்றியும் நாகரீகமற்ற முறையில் பேசினார். நமது மாவட்ட செயலரை தரம் தாழ்ந்து விமர்சனம் செய்தார். அதனை தொடர்ந்து  மத்திய சங்க  செய்திகளையும்  பிற பயனுள்ள செய்திகளையும் பேசாதது நமக்கு ஆச்சர்யம் தரவில்லை.
நமது மாவட்ட செயலர் பதிவு செய்த குற்றச்சாட்டுகளை விசாரிக்க குழு ஓன்று அமைக்க வேண்டும் என்று செயற்குழுவினை சம்மேளன செயலர் கேட்டுகொண்டார்.
அவரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட மாநில செயற்குழு, தோழர்கள் லட்சம்,விஜயரங்கன், காமராஜ்,அசோக்ராஜ்,சென்னகேசவன் ஆகியோரை கொண்ட ஒரு விசாரணை குழுவை  அமைத்தது.
விசாரணையில் வெள்ளை தாளின் மர்ம முடிச்சிகள், மாவட்ட சங்க கணக்கு வழக்குகள், பீரோ சாவி, குறிப்பேடு பதிவுகள் ஆகியவை வெளிச்சத்திற்கு வரும்.

மாநில செயற்குழுவினை சிறப்பாக ஏற்பாடு செய்து உணவு உபசரிப்பு அளித்த வேலூர் மாவட்ட சங்கத்தை நன்றியுடன் பாராட்டுகிறோம்.


நமது மாவட்டத்திலிருந்து மாவட்ட தலைவர் R.செல்வம், மாவட்ட துணை தலைவர் P.அழகிரி, மாவட்ட உதவி செயலர்கள் K.கிருஷ்ணகுமார், K.பாண்டியன் ,D.ரவிச்சந்திரன் மாவட்ட அமைப்பு செயலர்கள் G.ரங்கராஜன்,A.ரவிச்சந்திரன் மற்றும் பல முன்னணி தோழர்கள்  கலந்துகொண்டனர்.

மாநில செயற்குழு தீர்மானங்கள் 







No comments:

Post a Comment