.

Saturday, June 29, 2019



இன்று 29.6.2019 பணி ஓய்வு பெறும்
·       தோழர் S.நடராஜன் SDE திண்டிவனம்
·       தோழர் T.சிவாஜி AO கடலூர்
·       தோழர் S.மதிவாணன் AOS விழுப்புரம்
·       தோழர் N.ஜெயராமன் TT கடலூர்
·       தோழர் S.பாலையா TT கடலூர்
·       தோழர் T.பாலாஜி TT கடலூர்
·       தோழர் G.பரமசிவம் TT ரெட்டணை
·       தோழர் P.ராஜேந்திரன் TT பெண்ணாடம்
·       தோழர் G. ராஜேந்திரன் TT சிதம்பரம்
·       தோழர் K.கனகராஜு TT விருத்தாசலம்
·       தோழர் P.கலியமூர்த்தி TT கிளியனூர்
·       தோழியர் N.ராஜம்மாள் ATT அரகண்டநல்லூர்
·       தோழியர் V.முருகம்மாள் ATT சின்னசேலம்  (விருப்ப ஓய்வு)
ஆகியோரின் பணி ஓய்வுக்காலம் சிறக்க
கடலூர் மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்

Wednesday, June 26, 2019

தேசியத் தொலைத்தொடர்பு ஊழியர் சம்மேளனம்
தமிழ் மாநில  தொலைத்தொடர்பு ஒப்பந்த ஊழியர் சங்கம்
மாவட்டச் சங்கங்கள், கடலூர்


ஆர்ப்பாட்டம்
தோழர்களே!..
     நமது மாநிலச்  சங்கங்களின் அறைகூவலுக்கிணங்க நமது நிறுவனத்தில் பணி புரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு கடந்த மூன்று மாதம் சம்பளம் வழங்காதததினை கண்டித்தும் , உடனடியாக சம்பளம் வழங்கிட வலியுறுத்தியும்  28-06.2019 அன்று அனைத்து கிளைகளிலும் ஆர்ப்பாட்டம் நடத்திடுமாறு தோழமையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.

    கடலூர் பொது மேலாளர் அலுவலகத்தில்    28-06-2018 அன்று மாலை  05.31 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் . தோழர்கள் அனைவரும் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

                                                                                                தோழமையுடன்
                                                                                            D.குழந்தைநாதன்
                                  A.S.குருபிரசாத்
                                 மாவட்டச் செயலர்கள்

                                         NFTE-TMTCLU

Saturday, June 22, 2019

தேசியத் தொலைத்தொடர்பு ஊழியர் சம்மேளனம்
மாவட்டச் சங்கம், கடலூர்.


தோழர்களே!... நமது சங்கத்தின்  மாவட்டச் செயற்குழு 21.06.2019 அன்று காலை 10.00 மணியளவில் தோழர் G.கணேசன் மாவட்ட தலைவர் தலைமையில் மிகச் சிறப்பாக நடந்து முடிந்தது. கூட்டத்தில் தோழர் P.காமராஜ்  சம்மேளனச் செயலர் துவக்கவுரையாற்றினார். மாவட்ட சங்க நிர்வாகிகள் , கிளைச் செயலர்கள் மற்றும் மாநிலச் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். தோழர் இரா.ஸ்ரீதர் மாவட்டச் செயலர் தொகுத்து வழங்கினார்.  நிறைவுரையாக தோழர்  K. நடராஜன் மாநிலச் செயலர் உறையாற்றினார்.  தோழர் R.பன்னீர்செல்வம் மாவட்ட அமைப்புச் செயலர் நன்றி கூற கூட்டம்  நிறைவுற்றது. 











மாவட்டச் செயற்குழுவில் ஒருமனதாக எடுக்கப்பட்ட  தீர்மானங்கள்
            மாவட்டத் தலைவர் G. கணேசன் அவர்கள் தலைமையில் கடலூர் மெயின் தொலைபேசி நிலைய  கான்பரன்ஸ் ஹாலில் 21-06-2019 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்ற மாவட்ட செயற்குழுவில்  ஒருமனதாக  நிறைவேற்றப்பட்ட  தீர்மானங்கள்.

தீர்மானம் 1. மாநில மற்றும் அனைத்திந்தியச் சங்கத்திற்கு நன்றி தெரிவித்தல்

            வணிகப்பகுதி இணைப்பு என்ற திட்டம் முன்பே நிர்வாகத்தால் முன் வைக்கப்பட்டதுஅதன்படி நிர்வாக அமைப்பைச் சீர்திருத்தி அமைத்திட சிறிய SSAகள் அருகமை பெரிய மாவட்டத்துடன் இணைக்கப்பட முன்மொழிவுகள் தரப்பட்டனஅதன்படி நமது கடலூர் மாவட்டம் புதுவையுடன் இணைப்பது என்பது திட்டம்.

            அப்போதே நமது NFTE கடலூர் மாவட்டச் சங்கம் தீவிர நடவடிக்கை எடுக்க முன்முயற்சி செய்து பிற சங்கங்களையும் இணைத்து எதிர்வினை ஆற்றியது. இத்திட்டத்தினால் ஏற்படக் கூடிய ஊழியர் பாதிப்புகள் மற்றும் கூறப்படும் வியாபார நோக்கம் வெற்றியடையச் சாத்தியப்பாடு இல்லை என்பவற்றை பட்டியலிட்டு திட்டத்தைக் கைவிடக்கோரி அனைத்திந்தியச் சங்கத்தை மாநிலச் சங்கம் மூலம் வற்புறுத்தியது. காலத்தே தலையிட்ட நமது முயற்சி பலன் தந்துள்ளது.

            இன்று இந்தியா முழுவதும் வணிகப்பகுதி இணைப்புத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதுஅதன் பலாபலன்கள் இனிதான் முழுமையாகத் தெரியவரும்மேலும் தற்போதே அமல்படுத்தப்பட்ட மாவட்டங்களில் ஊழியர்கள் பணி நிலைமை பாதிப்புக்குள்ளாகி வருகிறது. ஆனால் கடலூர் மாவட்ட ஊழியர்களுக்கு அத்தகைய பாதிப்பு இல்லாததற்குக் காரணம் நமது மாவட்டத்தில் வணிகப் பகுதி இணைப்புத் திட்டம் செயல்படுத்தப்படாததேயாகும்.

            நமது கோரிக்கையை ஏற்றுச் செயல்பட்ட மாநில மற்றும் அனைத்திந்திய சங்கங்களுக்கு இந்த மாவட்டச் செயற்குழு தனது பாராட்டுதல்களையும் நன்றியையும் உரித்தாக்குகிறது.  

தீர்மானம் 2:  TT தோழர்கள் மாற்றல்

            இப்பிரச்சனை குறித்து சுமார் ஒரு வருட காலமாக மாவட்ட நிர்வாகத்துடன் பேசி வருகிறோம்.  2017 சுழல் மாற்றலில் சென்ற தோழர்கள் தங்கள் டென்னியூர் முடிந்து எப்போது மீண்டும் மாற்றல் பெறுவோம் என்று காத்திருக்கிறார்கள்இவர்களில் பலரும் 55 வயதை நெருங்குபவர்கள்எனவே மீண்டும் ஒரு சுழல் மாற்றல் நிகழ்த்துவது சாத்தியமற்றது என்பதை நிர்வாகத்திடம் நாம் சுட்டிக்காட்டியுள்ளோம்இப்பிரச்சனையைப் பேசுவதற்கு நிர்வாகம் மறுப்பதில்லை என்பது மட்டுமல்ல, பல முறை திரும்பத் திரும்ப பேசுகிறதுஆனால் பேச்சு பேச்சாகவே உள்ளது, செயலாக மாற்றம் பெறவில்லை என்பது வருந்தத்திற்குரியது. மூன்று முறை உத்தரவுகள் போடப்பட்டு சில தோழர்கள் மாற்றல் பெற்றுள்ளனர் என்பது உண்மையே. இதனை கருத்தில் கொண்டே இந்த மாவட்டச் செயற்குழு விடுபட்ட மற்ற தோழர்களுக்கும் உடனடியாக மாவட்ட நிர்வாகம் மாற்றல் உத்தரவிட வற்புறுத்தி வேண்டுகிறது.

 தீர்மானம் 3 :  எதிர்வரும் 8வது ஊழியர் சரிபார்ப்புத் தேர்தல்தேர்தல் நாள் 2019 செப்டம்பர் 16

            அடுத்தச் சரிபார்ப்புத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விட்டதுஇந்தத் தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததுநமது BSNL நிறுவனம் இன்று எதிர்கொள்ளும் நலிவடைந்த நிலைமைக்கு நிர்வாகமும் அரசின் கொள்கைகளுமே பெரும் காரணம் என்ற போதிலும் அங்கீகரிக்கப்பட்டச் சங்கத்திற்கு எந்தப் பொறுப்பும் இல்லை என்று சொல்லிவிட முடியாதுமிக நன்றாக இருந்த நிறுவனம், சுதந்திரப் போராட்டக் காலம் தொட்டே மரபார்ந்த பெருமை உடைய தபால் தந்தி இயக்கம், விஞ்ஞான வளர்ச்சி மற்றும் உலகப் பொருளாதார நிலைமைகளின் மாற்றம் காரணமாகப் பொதுத்துறையாக மாற்றப்பட்ட நிறுவனம், அப்போதும் 40 ஆயிரம் கோடி உபரி நிதியும், ஊழியர் பலமும்,  செல்வ வளமும் நிரம்பிய நிறுவனம் 2006 முதல் சரிவைச் சந்தித்து வருகிறதுஇன்றைய நிலையில் மின்சார பில் கட்டமுடியாது கோபுரங்களின் மின்இணைப்புத் துண்டிப்பு, பில்கள் தேக்கம், மாதக்கணக்கில் ஒப்பந்த ஊழியர் சம்பளத் தாமதம் என்று தொடங்கி ஊழியர்களின் மாதாந்திர ஊதியமும் 15 நாள் தாமதமான அவலமும் அரங்கேறி கடும் நிதி நெருக்கடியில் நிறுவனம் உள்ளதுஅங்கீகரிக்கப்பட்ட முதன்மைத் தொழிற்சங்கம், 20 ஆண்டுகளுக்குப் பின்னோக்கிச் சென்று பொதுத்துறையானதுதான் இதற்கெல்லாம் காரணம் எனக் கூறுவது அதனுடைய பொறுப்பைத் தட்டிக் கழிப்பதைத் தவிர வேறெதுவும் இல்லை.

            இந்நிலையில் பொறுப்பு ஊழியர்களிடம் வந்து சேர்ந்திருக்கிறது என்று இந்த மாவட்டச் செயற்குழு சுட்டிக் காட்டுகிறதுமாற்றங்களைச் சவால்களாக எடுத்துக் கொண்டு வளர்ச்சிக்கான வாய்ப்பாகச் சாதித்துக் காட்டிய தலைமையிலான நம்முடைய NFTE சங்கத்தை அங்கீகரிக்கப்பட்டச் சங்கமாக மட்டுமில்லை, முதன்மை அங்கீகரிக்கப்பட்டச் சங்கமாகத் தேர்ந்தெடுப்பதன் மூலம் மட்டுமே எதிர்காலச் சவால்களை நம்மால் எதிர்கொள்ள முடியும்அதற்கான ஒன்றுபட்டு உழைக்க உங்கள் அனைவரையும் தோழமையோடு அறைகூவி அழைக்கிறது, NFTE மாவட்டச் சங்கம்சிறுசிறு பூசல்களை, மனமாச்சரியங்களை, மனவேறுபாடுகளை ஒதுக்கித் தள்ளி வைத்து, All for One and One for All என்று இணைந்து செயல்பட அனைத்து நிர்வாகிகள் மற்றும் தோழர் தோழியர்களை தோழமையோடு இந்த மாவட்டச் சங்கம் கடமையாற்ற அழைக்கிறது.

          காலம் குறுகியது, கடமை பெரியது, நோக்கம் ஒன்றாய்க் கொண்டு செயல்படுவோம்!

தீர்மானம்  4  :  தேர்தலை எதிர்கொள்ளத் தாராளமாய் நிதி அளிப்பீர்நன்கொடை வேண்டுகோள்

            தேர்தல் நிகழ்முறைகளைச் சந்திக்க நிதி தேவைஉறுப்பினர்களை மட்டுமே நம்பி இயங்கும் ஓர் இயக்கம் அதன் நிதி தேவைக்கும் உறுப்பினர்களையே நாட முடியும்இன்றைய நிலையில் தீர்மானம் 2-ல் விவரிக்கப்பட்டப் பிரச்சனைகள் அதிகம் இன்றி இருப்பவர்கள் நம்முடைய மூத்த இயக்கத் தோழர்களான ஓய்வு பெற்றவர்களே. BSNL-லின் நிதி நெருக்கடியால் ஓய்வூதியம் பாதிக்கப்படாதற்கு நம்முடைய அந்தத் தோழர்கள் ஒவ்வொருவருமே நன்றி கூறுகிறார்கள் என்றால் அது தோழர் குப்தா அவர்களின் தொலைநோக்குச் சிந்தனைக்கு மட்டுமே. அந்தத் தோழர்களைஅவர்கள் அதிகாரிகள் ஆயினும், ஊழியராயினும்அணுகுங்கள். நம்முடைய நோக்கம் நிறைவேற அவர்கள் தாராளமாக நிதிஅளிப்பார்கள்.

            அதற்கு முதல்கட்டமாய், உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் குறைந்த பட்சம் ரூ200/= தேர்தல் நிதி அளிக்க இந்த மாவட்டச் செயற்குழு தோழமையோடு வேண்டுகிறது. அதில் கிளைகள் ரூ100/- தங்கள் கிளையின் தேர்தல் செலவுக்காக வைத்துக் கொண்டு மீதித் தொகையை உடனடியாக மாவட்டப் பொருளாளரிடம் சேர்ப்பிக்க வேண்டுகிறோம்இந்தப் பணியை இம்மாத இறுதிக்குள் நிறைவேற்ற வேண்டுகிறோம்.

தீர்மானம் 5 : Sr TOA / JE கேடரில் விருப்ப மாற்றல்கள்

திருமதி மகாலட்சுமி Sr TOA  பாண்டி மாற்றல், திரு S.வெங்கட் பரங்கிப்பேட்டை to கடலூர், திரு நிதீஷ் ஷகானி JE விருத்தாசலத்திலிருந்து கடலூர் அல்லது நெய்வேலி புதுநகர் மாற்றல் K.முத்துகுமார் JE  விழுப்புரம் to மதுரை, திரு S.பிரான்ஸிஸ்கா ரோஜா திருக்கோவிலூர் to விழுப்புரம்திரு V.கிருபாகரன் கள்ளக்குறிச்சி to சங்கராபுரம் , திரு K. நடராஜன் பரங்கிப்பேட்டை to புவனகிரி முதலிய மாற்றல்கள் கடும் தாமதமாகி வருகிறதுஅவர்களுக்கு நியாயம் வழங்க இந்த மாவட்டச் செயற்குழு மாவட்ட நிர்வாகத்தைக் கேட்டுக் கொள்கிறது.


தீர்மானம் 6 : ஒப்பந்த ஊழியர் பணி நிறுத்தம்

சமூகத்தில் அடிமட்டத்தில் உழைக்கும் மக்களைப்பற்றி நமது சங்கம் காலங்காலமாக, மரபார்ந்து அவர்களின் நியாயத்தின் பக்கம் நின்று போராடி வருகிறது. அந்தச் சமூக அக்கறையின் காரணமாகவே பெருமைப் படத்தக்க அளவு மஸ்தூர்களின் பணிக்காலத்தில் அவர்களின் பணிநிலைமைக்காகவும்,தொலைநோக்குத்  திட்டத்தின் சாதனையாக காசுவல் மஸ்தூர்களை நிரந்தர ஊழியர்களாகவும் ஆக்கியது நமது சங்கம். நிரந்தரப்பணிக்குப் பதிலாக ஒப்பந்தப் பணி ஊக்குவிக்கப்படும் இன்றைய அரசின் பிற்போக்கான தொழிலாளர் கொள்கை காரணமாக, பொதுத்துறையாக மாறிய பிறகு இன்றைக்கு நமது நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியர்களின் நிலைமை மிகவும் பரிதாபகரமானது. கண்ட்ரோலிங் அதிகாரி யார், லையசன் அதிகாரி யார் என்ற குழப்பத்தில் பிரச்சனைத் தீர்வுக்கு கான்டிராக்டரைப் பார் என அலைக்கழிக்கப்படுகிறார்கள். நான்கு அல்லது ஐந்து மாதங்களாகத் தொடர்ந்து அவர்கள் பெற்று வந்த அந்தக் குறைந்த கூலியும் கூட தாமதப்படுத்தப்படும் பொதுவான நிலைக்கு மத்தியில் நமது மாவட்டத்தில் சிறிய பிரச்சனைகளுக்கும் கூட அந்த ஒப்பந்த ஊழியர்கள் பணியிலிருந்து நிரந்தரமாக நிறுத்திவிடும் அவலமும் சேர்ந்து கொள்கிறது. பிரச்சனை விசாரிக்கப்படாமலேயே தண்டனை நிறைவேற்றப்பட்டுவிடுகிறதுஇந்தப் போக்கை இந்த மாவட்டச் செயற்குழு கவலையோடு பரிசீலித்ததுதவறுகளுக்கு தண்டனை என்பதில் தவறில்லைஆனால் தவறுகள் முறையாக விசாரிக்கப்படாமலேயே தண்டனை, அதுவும் உச்ச பட்சமாக வேலையை விட்டு நீக்குவது என்பதை நியாயமானது என்று யாரும் கூற முடியாதுஇத்தகைய முரண்பாடுகள் தொழிலமைதியைக் கெடுக்கும் என இந்த மாவட்டச் செயற்குழு சுட்டிக் காட்டுவதுடன், இவற்றை மனிதாபிமானத்துடன் அணுகி பிரச்சனையை விரைவில் தீர்த்து வைக்க பொதுவாக நிர்வாகத்தையும் குறிப்பாக DGM (CFA) அவர்களையும் கேட்டுக் கொள்கிறதுதொழிலமைதியைக் காத்திடும் பெரும் பொறுப்பு DGM அவர்களேயேச் சாரும் என்பதைச் சுட்டிக்காட்டுவதே செயற்குழுவின் இத்தீர்மானத்தின் நோக்கம். ஆக்கபூர்வமான செயல்பாடுகளை நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறோம்.

தீர்மானம் 7 : ஒப்பந்த ஊழியர் மூன்று மாத சம்பளம் மற்றும் நிலுவைத் தொகை

இந்தப் பிரச்சனை குறித்து பல முறை விவாதித்து விட்டோம் என்பதால் கோரிக்கையை வலியுறுத்தி அடுத்த கட்ட போராட்டங்களைத் திட்டமிட இச்செயற்குழு வழிகாட்டுகிறதுஅறிவிக்கப்படும் போராட்டங்களில் பெருமளவில் பங்கேற்று இயக்கங்களைச் சக்திமிக்கதாக நடத்திட  அனைத்துத் தோழர்களையும் வேண்டுகிறோம்.


தீர்மானம் 8 :  OFC விழுப்புரம் பிரச்சனை

OFC பகுதியில் விழுப்புரத்தில் பிரச்சனை நிர்வாகத்தால் உருவாக்கப்படுகிறது என்றே இந்தச் செயற்குழு கருதுகிறது. நிர்வாகம் தனது வார்த்தைகள்படி நடக்காதபோது ஊழியர் உறவில் பிரச்சனை ஏற்படுகிறது. மருத்துவ விடுமுறை விண்ணப்பத்தை மருத்துவ போர்டுக்கு அனுப்புவது என்பது நவீன மேனேஜ்மெண்ட் அணுகுமுறையோடு ஒத்துப்போகாத மிகமிகப் பழைமையான அதிகாரப்போக்கு என்பதை இந்தச் செயற்குழு அக்கறையோடு சுட்டிக்காட்டுகிறது. OFC பகுதியின் நிர்வாகம் இதனைச் சரியான முறையில் அணுகி உறவுகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்அணுகுமுறை சரியானால் நிச்சயம் ஊழியர் தரப்பு ஒத்துழைக்கும் என்பது நிச்சயம்.


தீர்மானம் 9 : BSNL வருவாய் பெருக்கம்

ஒவ்வொருவரும் வருவாய் பெருக்கத்தை நோக்கமாகக் கொண்டு தங்கள் செயல்பாடுகளை அமைத்துக் கொள்ள வேண்டும்.  ’செலவைக் குறைப்பதும் வருவாய் பெருக்கமேஎன்பது அனுபவமொழிஅநேகமாக ஊழியர்கள் யாரும் தற்போது மாற்றலுக்கான TA பில் கேட்பதே இல்லை. இதை அதிகாரிகளும் கடைப்பிடிக்கலாம் என்று இச்செயற்குழு கருதுகிறதுமோட்டார் வாகனப் பயன்பாடு தற்போது நமது மாவட்டத்தில் 20லிருநது 13ஆகக் குறைந்திருப்பது வரவேற்கத் தக்கதுதேவையற்ற இடங்களில், ஆட்கள் இல்லாத நேரத்தில் மின்சாரப்பயன்பாட்டை குறைப்பது, மின்விசிறிகளை நிறுத்திவிட்டுச் செல்வது ஒவ்வொருவரும் உணர்ந்து கடைபிடிக்க வேண்டிய ஒன்றுகாலி இடங்களிலிருந்து வருவாய் திரட்டுவது போலவே அலுவலகக் கட்டிடங்களை முறையாக திட்டமிடுவதன் வாயிலாக வாடகைக்கு விட்டு பெரும் வருவாய் திரட்ட முடியும்உதாரணமாக பொதுமேலாளர் அலுவலகத்தைத் தொலைபேசி நிலையக் கட்டிடத்திற்கு மாற்றிவிட்டு, கேந்திரமான இடத்தில் உள்ள பொதுமேலாளர் அலுவலக கட்டிடத்தை வணிக வாடகை நோக்கில் பயன்படுத்த முடியும் என இச்செயற்குழு சுட்டிக்காட்டுகிறது.

            இன்றைய நிலையில் “பாரத் நெட் (பைஃபர் டூ ஹோம்) பெரும் எதிர்பார்ப்பைப் பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது. 5-G நமது பகுதிக்கு வருவதற்கு முன் தற்போது வருவாய் வாய்ப்பு பெரிதும் உள்ளதுபாரத் நெட்’.  இதில் வெளி ஏஜெண்ட் (அவுட் சோர்ஸ்) தரத்தில் நாம் தரும் இணைப்புகள் இல்லை என்ற குறை சரி செய்யப்படுவதுடன், அந்தப் பகுதியில் ஊழியர் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும்தற்போது சில குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே பாரத் நெட் சேவை வழங்கப்படுகிறதுவாய்ப்புள்ள பிற இடங்கள் கண்டறிப்பட வேண்டும்உதாரணமாகக் கடலூர் பிரண்ட்ஸ் நகர் பகுதியில் சந்தாதாரர்கள் ஆர்வத்துடன் காத்திருப்பதாகத் தகவல்.             இந்தப் பிரச்சனைகள் குறித்து நிர்வாகம் ஊழியர் தரப்புடன் விவாதிக்க முன்வர வேண்டும் என இந்த மாவட்டச் செயற்குழு மாவட்ட நிர்வாகத்தைக் கேட்டுக் கொள்கிறது.   

தீர்மானம்10:- மாவட்ட செயலர் பொறுப்பு
           நமது மாவட்டச் செயலர் தோழர் இரா.ஸ்ரீதர் அவர்களின் உடல் நிலை சரியில்லாத காரணத்தினால்   தோழர் D.குழந்தைநாதன் அவர்கள் மாவட்டச் செயலராக செயல்படுவார் என இச்செயற்குழு தீர்மாணித்துள்ளது. ஆகவே நமது தோழர்கள் அனைவரும் மாவட்டச் செயலருக்கு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக் கொள்கின்றோம்.