.

Monday, August 31, 2020

வாழ்வாதாரம் காத்திட நிதியளிப்போம்!

வாழ்வாதாரம் காத்திட நிதியளிப்போம்!

    அன்புள்ள தோழர்களே!

ஒப்பந்த ஊழியர்களாகிய நாம் பத்து மாதமாகச் சம்பளம் வழங்கப்படாமல் பணியாற்றி கொண்டிருக்கின்றோம். சம்பளம் வழங்குவதில் அக்கறையற்று இருக்கும்  மாநில நிர்வாகத்தின் இந்தப் போக்கை மாற்றிட TMTCLU  மாநிலச் சங்கத்தின் சார்பில்  சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

     வழக்கின் சென்ற விசாரணை13.08.2020ல் நடந்தபோது, சென்னை உயர்நீதி மன்றம்  மாநில நிர்வாகத்திற்குச் சில அறிவுறுத்தல்கள் வழங்கியது. (அந்த உத்தரவுகளின் தமிழாக்கம் நமது தொழிற்சங்கக் குழுக்களில் வெளியானது). அந்த உத்தரவில், 30% சம்பளம் வழங்கிவிட்டதாகக் கூறும் நிர்வாகம் அதற்கு ஆதாரமான ஆவணங்களைத் தாக்கல் செய்யவும், மீதியுள்ள 70% சம்பள பாக்கினை முழுமையாக ஒப்பந்த ஊழியர்களுக்குத் தாமதமின்றி வழங்கச் செப்டம்பர்  22ந் தேதி தயாராக  இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது. ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு முழுமையாக சம்பளம் கிடைப்பதற்கான நல்ல சுழல் உருவாகி உள்ளது.

           இந்த வழக்கு சம்மந்தமாகத் தொடர்ந்து தொழிலாளர் நலனில் அக்கறையுடன் செயல்படும் நமது மாநில பொதுச் செயலர் தோழர் R.செல்வம் அவர்களுக்கும், வழக்கிற்கான செலவுத் தொகையை நாம் இன்னும் கொடுக்கவில்லை எனினும், தொடர்ந்து அக்கறையுடனும் உத்வேகத்துடனும் செயல்படும் நமது சட்ட ஆலோசகர் N.K.சீனிவாசன் அவர்களுக்கும் நமது சங்கத்தின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

     சென்னை உயர்நீதி மன்றத்தில் நமது வழக்குகள் செப்டம்பர் -22 ந் தேதி வரவுள்ளதால் வழக்கு செலவிற்கான தொகையை  நாம் கொடுக்க வேண்டும். அதன் முதற்கட்டமாக நமது கடலூர் TMTCLU  மாவட்டச் சங்கத்தின் சார்பில் ரூ3000/- பொதுச் செயலர் தோழர் R.செல்வம் அவர்களிடம் வழங்கப்பட்டுள்ளது.

               உயர்நீதி மன்றத்தில் தொடர்ந்து வழக்கினை நடத்துவதற்கு (ஆவண நகல்கள் ஜெராக்ஸ், முத்திரைக் கட்டணம் முதலிய வகையில்) பெரும் செலவு ஆகிறது. நமது நாட்டின் நீதிமன்ற நடைமுறை அவ்வாறு.  ஆகவே நமது ஒப்பந்த ஊழியர்களும் வழக்கு நடத்துவதற்கான தங்களின்  பங்களிப்பாகத் தங்களால் முடிந்த அளவில்  தலா ரூ 100/- வழங்கிடமாறு தோழமையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.  இது மிகவும் அவசியமும் மிக அவசரமும் கூட.

     ஓய்வு பெற்ற  நல்ல மனம் கொண்ட அதிகாரி பெருமக்கள், ஊழியர்கள் தங்களால் முடிந்த அளவில் நிதி தருமாறு கேட்டுக் கொள்கின்றோம். இதற்கு முன்பும் அவர்கள் நம்மீது அக்கறை கொண்டு பல தருணங்களில் நிதி அளித்திருக்கிறார்கள் என்பதை நாம் நன்றியோடு நினைவில் கொண்டுள்ளோம். தொழிலாளர் நலனில் அக்கறையோடு செயல்பட்டுக் கொண்டிருக்கும்  தொழிற்சங்கத் தலைவர்களையும், கிளைச் சங்க நிர்வாகிகளையும், மாநில, மாவட்டச் சங்க பொறுப்பாளர்களையும்  அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்,, தங்களால் ஆன நிதி உதவினை வழங்கி, ஒப்பந்த ஊழியர்களின் வாழ்வாதாரத்தினைக்  காத்திட, தாமதமாகும் நீதியினைப் பெற, வழக்கில் வெல்ல  உதவுங்கள் தோழர்களே!

       தோழர்கள் தங்கள் நன்கொடையினை கடலூர் TMTCLU  மாவட்டச் சங்கத்திடம் விரைந்து வழங்கிட வேண்டுகிறோம். பிற மாவட்டத் தோழர்கள் தோழர் M.விஜய் ஆரோக்யராஜ், TMTCLU  மாநிலப் பொருளாளர் அவர்களுக்கு அனுப்பி வைக்குமாறு  கேட்டுக் கொள்கின்றோம் .

         சென்னை உயர்நீதி மன்றம் ஒப்பந்த ஊழியர்கள் விபரங்கள் அடங்கிய UAN பட்டியல் கோரியுள்ளது. ஆகவே ஒப்பந்த ஊழியர்கள் அனைவரும்  தங்களது  UAN சம்மந்தமாக  விபரங்களைப் பொதுச் செயலரிடம் விரைந்து கொடுக்குமாறு  கேட்டுக் கொள்கின்றோம்.

தோழமையுடன்

    M.S.குமார்              A.S.குருபிரசாத்                 J.கந்தன்

மாவட்ட தலைவர்         மாவட்ட செயலர்          மாவட்ட பொருளாளர்