தமிழக தொலைதொடர்பு வட்டம் தலைமை பொது மேலாளர் அவர்கள் கடலூர் தொலைத் தொடர்பு மாவட்ட ஆய்வு பணிக்காகவும் ,மற்றும் பணி ஓய்வு விழாவில் பங்கேற்பதற்காக நேற்றைய தினம் 30.12. 23 கடலூர் வருகை புரிந்து இருந்தார்.
நேற்று மாலை மாவட்ட சங்கத்தின் சார்பாக தலைமை பொது மேலாளர் அவர்களை சந்தித்து கௌரவித்தோம்.
காலையிலிருந்து தொடர்ச்சியாக கூட்டத்தில் பங்கேற்றதால், அவர் மிகவும் சோர்வாக காணப்பட்டதால் மிக சுருக்கமாக நமது கருத்துக்களை பதிவு செய்தோம்.
கூட்டாக சிந்திப்போம்…. ஒன்றாய் செயல்படுவோம்
வெறுப்பு உணர்வை தவிர்ப்போம்
என்ற மூன்று வரிகளை மட்டும் பதிவு செய்தோம்.
இருபத்தோராம் ஆண்டு சீரில் தமிழ் விழா பற்றிய குறிப்புகளையும் மற்றும் விழாவின் சுற்றறிக்கையும் தலைமைப் பொது மேலாளர் கவனத்திற்கு கொண்டு சென்றோம்.
நமது சிறப்பு கருத்தரங்கம் 10.01.24 தேதி இந்த அரங்கில் நடைபெறும் என்பதையும் மற்றும் அதன் நோக்கத்தையும் மிகச் சுருக்கமாக பதிவு செய்தோம்.
தலைமை பொது மேலாளர்
அவர்களும் வருகையை உறுதிப்படுத்தினார்.
உங்களது பொது மேலாளர் நிச்சியம் மற்ற பிரச்சனைக்கு நல்லதொரு முறையில் தீர்வு காண்பார் என்ற உறுதியுடன் நமது சந்திப்பு நிறைவு பெற்றது.