ஆங்கில புத்தாண்டு 2024
2024 புத்தாண்டு
முன்னிட்டு இன்று காலை 9 மணிக்கு மாவட்ட தொழிற்சங்க அலுவலகத்தில் இனிப்பு வழங்கி
மகிழ்ச்சியாக புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டோம்.
பிறகு
வாடிக்கையாளர் சேவை மையம், பொது மேலாளர் அலுவலகம் ,கடலூர்
தொலைபேசி நிலையம் ஆகிய இடங்களில் மாநிலத்
துணைத் தலைவர் தோழர் A.சகாய செல்வன் தலைமையில் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளை
சந்தித்து இனிப்பு வழங்கி புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டோம்.
பொது மேலாளர்
அவர்களை சந்தித்து புத்தாண்டுக்கு இனிப்பு கொடுத்து நமது வாழ்த்துக்களை
தெரிவித்தோம்.
அவர் நம்
அனைவருக்கும் தேநீர் விருந்து அளித்து புத்தாண்டில் கடலூர் மாவட்டத்தின் வருவாய் ப
பெருக்கம் மற்றும் செலவினும் குறைப்பு என்ற உரிய நோக்கத்தை அடைவதற்கு அனைவரும்
ஒத்துழைக்குமாறு வேண்டுகோளுடன் புத்தாண்டு
வாழ்த்துக்களை பதிவு செய்தார்.
தை பிறந்தால்
வழி பிறக்கும் என்ற நம்பிக்கையுடன் நமது கருத்தை பதிவு செய்தோம்.
உணவு
இடைவெளியின் போது கடலூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக புத்தாண்டு கேக் பொது மேலாளர்
அவர்களால் வெட்டப்பட்டு மகிழ்ச்சியாக 2024
புத்தாண்டை கூட்டாக வரவேற்றோம்.
மாவட்டத்தில்
உள்ள அனைத்து தொழிற்சங்கமும் மற்றும் ஓய்வு பெற்ற சங்கங்களும் அனைவருக்கும்
இனிப்பு கொடுத்து மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர்.
தோழமையுடன்- மாவட்டச் சங்கம், கடலூர்-01.