.

722410

Wednesday, January 12, 2011

இனியும் பொறுக்கப் போகிறாயா தோழா

பதவி உயர்வில் நமக்கும் அதிகாரிகளுக்கும் உள்ள வேறுபாட்டினைக் கண்டும் நாம் வளா விருப்போமா?
இந்த கேடு கெட்ட ஒப்பந்தம் போட்டவர்களை மீண்டும் அனுமதிக்கப் போகிறோமா?


போனஸே இல்லை என்ற பிறகும் வாய் மூடி நிற்கும் இந்த கையாலாகாதவர்களை இனியும் நம்பப்போகிறோமா?


ராஜா இருக்கும் வரை வெண்சாமரம் வீ சிவிட்டு இப்போது "அம்மாடியோன்னு.." எழுதும் வேஷதாரிகள் உனக்கு தேவையா?


இணைந்த போரட்டத்தினை ராத்திரியில் தனியே வாபஸ் வாங்கிய இந்த பயங்கொள்ளிகளுக்கு ஒரு பாடம் வேண்டாமா?


R.M to T.M மற்றும் T.M to TTA   பதவி உயர்வுகளுக்கு தகுதித்தேர்வு இல்லாமல் கல்வித்தகுதி உடன்பாடு போட்ட தொழிலாளர் துரோகிகளுக்கா உனது ஓட்டு?


ஒரு லட்சம்-நிரந்தர ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டு அந்த இடத்தில் கேஷுவல் லேபர்களை கேஷுவல் லேபராகவே வேலைவாங்கும் திட்டத்திற்கு உடன்படும் நம்பூதிரிக்கா உனது ஓட்டு?


பட்ட அவமானங்கள் போதாதா?  


இழந்த உரிமைகள் போதாதா?


ரோஷமும் - வீரமும் -போரட்ட இரத்தமும் அற்றுப்போய் விட்ட இந்த கோழைகளுக்கு இனி இடமில்லை.


இனி பொறுப்பதில்லை...ஓட்டுச் சீட்டு எனும் எரிதழல் கொண்டு இந்த துரோகிகளுக்கு பாடம் புகட்டுவோம்.


இணைந்த கரங்களுக்கு வாக்களிப்போம்.. இழந்த உரிமைகளையும் - பெருமைகளையும் மீட்போம்.

No comments:

Post a Comment