அருமைத் தோழர்களே!!
இயக்க முன்னோடித் தோழர்கள் அனைவரும்
ஓய்வின்றி ஓடியாடி -தேனீக்கள் போல அனைத்துத்
தோழர்களையும் சந்தித்து நமது சங்கத்திற்கு
ஏன் வாக்களிக்க வேண்டும் என விளக்கி வருகின்றனர்.
மாநிலச் செயலர் தோழர் பட்டாபி அவர்கள்
கடலூரிலும் , விழுப்புரத்திலும் சிறப்பு மிகு
உரையாற்றினார். இந்தியா முழுவதும் வரும் தகவல்கள்
நமக்கு ஊக்கமளிப்பதாகவும் - தெம்பூட்டுவதாகவும் உள்ளன.
பல மாநிலங்களில் EU விலிருந்து விலகி தோழர்கள் நம்மை
நோக்கி வந்து கொண்டுள்ளனர்.
ஆறு வருட காலம் EU போட்ட கும்பகர்ண தூக்கம் -
ஊழியர்களிடமிருந்து அவர்கள் விலகிச் சென்றது -
அதிகார வர்க்கம் சொன்னதிற்கெல்லாம் "ஆமாம் சாமி"
போட்டுக்கொண்டு காலத்தை ஓட்டியது -
வர்க்க நலனை மறந்து - அதிகார போதையும் -
மமதையும் கொண்டு ஆட்டம் போட்டது
யாவற்றிற்கும் நம்பூதிரி & Co. பதில் சொல்லும் காலம்
வந்துவிட்டது.
நாம் கண நேரமேனும் வாளாவிருக்க முடியாது.
ஒவ்வொரு தோழரும் EU-வினுடைய - தில்லு முல்லு
பிரசாரங்களை அவ்வப்போது முறியடிக்க வேண்டும்.
அவர்கள் "செய்யக்கூடிய அனைத்து விதமான"
(கு)யுக்திகளையும் நமது நேர்மை என்னும் ஆயுதம்
கொண்டு சமாளியுங்கள்.
நியாயம் நம் பக்கம் உள்ளது தோழர்களே!
உங்களால் எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு
நேரம் பிரசாரத்தில் ஈடுபடுங்கள். ஒவ்வொரு
உறுப்பினர்களையும் மீண்டும் - மீண்டும் சந்தியுங்கள்.
நியாயத்தை எடுத்துச் சொல்லுங்கள். இப்போது
இல்லையெனில் எப்போதும் இல்லை என்பது போல
பணியாற்றுங்கள். அறுவடை நேரத்தில் வாளாவிருந்து
விட்டால் வெள்ளாமை வீடு வந்துசேராது தோழர்களே!
விழிப்பு - கவனம் - இடைவிடாத பிரசாரம் -
எதிரிகளின் பொய்ப்பிரசாரத்திற்கு உடனடியான பதில் -
இவையே தேர்தல் முடியும் வரை நமது தாரக மந்திரமாக
இருக்க வேண்டும்.
நடக்க விருப்பது நியாயத்திற்கும் - அநியாயத்திற்குமான
போராட்டம். வர்க்கப் போராளிகளுக்கும் - வர்க்க விரோதிகளுக்குமிடையான
போராட்ட்டம். இந்த "குருஷேத்திர யுத்தத்தில்"
நாம் அனைவருமே "அர்ஜுனர்கள்" .
ஒரு நொடி நேரம் கூட தளராது - அயராது தர்மத்தை
நிலை நாட்ட அனைத்து விதமான உழைப்பையும்
இயக்கத்திற்கு கொடு தோழா!
கடலூர் பகுதியில் பெருவாரியான ஓட்டுக்களை
NFTE - கூட்டணி பெற்று வென்றது
என்ற பெருமை மிகு செய்தியினை
அளிக்கும்வரை ஓய்வில்லை தோழா !
வெற்றி ஒன்றே லட்சியம்.
நமது வெற்றி மட்டுமே BSNL -ன் எதிர்காலத்தை
உறுதிப்படுத்தும். நமது எதிர்காலத்தினை வளமாக்கும்.
இணைந்த கரங்களுக்கு
வாக்களிப்போம்
No comments:
Post a Comment