சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை! கண்கள் பனிக்கின்றன!
இத்தோழர்களை என்னவென்று அழைப்பது?
ஆயிரமாயிரம் கோடி வந்தனங்கள் என்று சொல்வதைத் தவிர வேறு ஒன்றும்
சொல்லத் தோன்றவில்லையே!!
"நன்றி" என்ற வார்த்தை போதாமல் போய், எங்களது உள்ளத்தில் ஏற்படும்
உணர்ச்சிக் கொந்தளிப்பை வெளியிட வார்த்தை இன்றி தவிக்கிறோம்!!
யாரைச் சொல்ல? என்னவென்று சொல்ல?
மிகக் கடுமையான விபத்தில் சிக்கி சொந்த மகளின் திருமணத்திற்குக் கூட
போகமுடியாது- உடல் முழுதும் கட்டுக்களோடு படுக்கையில் கிடக்கும்
நிலையிலும் "ஆம்புலன்ஸில்" வந்து வாக்களித்த எங்களருமைத்
தோழியர் மீனாவையா?
பம்பரமாய் சுழன்று பணியாற்றி, தேர்தலுக்கு முதல்நாள் விபத்தில் அடிபட்டு
கால் எலும்பு முறிந்து, மருத்துவ மனையில் கிடந்த நிலையிலும்
வாக்களித்த உயிர்த்தோழர் சங்கராபுரம் கணேசனையா?
அம்மை நோய்கண்டு வெளியே வரக்கூடாத நிலையிலும்
நமக்காக வந்து வாக்களித்த கடலூர் தோழர் ரங்கனாதனையா?
இருதய நோயால் பாதிக்கப்பட்டு திருவண்ணாமலை ஆஸ்பத்திரியிலிருந்து
வாக்களிப்பதற்காகவே செஞ்சிக்கு வந்த தோழர் எல்லப்பனையா?
சென்னை "மியாட்" டிலிருந்து வாக்களிப்பதற்காகவே முன்னதாகவே
"டிஸ்சார்ஜ்" கேட்டுப்பெற்று வந்த விருத்தாஜலம் தோழர் பன்னீர் செல்வத்தையா?
மிகக்கடுமையான - மன இறுக்கமான குடும்பச்சூழ்நிலையிலும்
வாக்களிப்பதற்காகவே "நாகர்கோவிலிலுருந்து" திண்டிவனம் வந்த
தோழர் சுரேஷையா?
தாயாருடன் மருத்துவமனையில் உடன் இருக்க வேண்டிய நிலையிலும்
வாக்களிக்க வந்த விருத்தாஜலம் தோழியர் சுகன்யாவையா?
யாரைசொல்ல ..
இன்னும் துயரங்களையெல்லாம் வெளிக்காட்டாது மனதிற்குள்ளேயே இருத்தி
பணி செய்திட்ட தோழமை நெஞ்சங்களுக்கெல்லாம் என்னவென்று நன்றி சொல்ல!
வார்த்தை இன்றி தவிக்கிறோம்!!
நீங்கள் தாம் இயக்கத்தின் வேர்கள்!
உங்களது நம்பிக்கைதான் சங்கத்தின் உயிர்மூச்சு!
வணங்குகிறோம்.!

வீர வாழ்த்துக்கள்!!
ReplyDelete