.

Wednesday, February 2, 2011

ஊருக்கு தாண்டி உபதேசம்..உனக்கும் எனக்கும் இல்லை!

RK Agarwal, Director (Consumer Mobility), Bharat Sanchar Nigam Limited (BSNL), தன்னுடைய மகளின் திருமணத்தை லக்னோவில் January 23, 2011 அன்று நடத்தினார். கிட்டத்தட்ட 18  BSNL members இத்திருமண்த்தில் கலந்துககொண்டனர். இதில் என்ன பிரச்சினை என்கிறிர்களா? 
இதில் கலந்துகொண்ட அதிகாரிகள் அனைவரும் அரசு செலவில் திருமணத்தில் கலந்து கொண்டனர் என்பது தான். இதற்காக 20 இலட்சம் ரூபாய் செலவில் " அலிகஞ்"  பயணர் விடுதி மாற்றியமைக்கப்பட்டது.  இந்த விடுதிகள் 21- ஜனவரி முதல்24 வரை இவர்களுக்கு "மீட்டிங்க்" என்ற பெயரில் புக் செய்யப்பட்டது. "மேல் மட்ட அதிகாரிகளின்"  உறவினர்கள்-குழந்தைகள் திருமணத்திற்காக நாட்டின் எந்த மூலையிலும் "TOP BSNL  மேனேஜ்மென்ட்  மீட்டிங்" என்ற காரணத்தின்  பேரில் - முழுவதுமாக BSNL செலவில் - ஏற்பாடு செய்யப்படுவது ஒன்றும் புதிய விஷயமில்லை.  ஆணால் நமது நிறுவனம் நலிவடைந்து சின்னா பின்னமாகி வரும் இந்த நாட்களில் கூட,  முன்னுதாரண்மா நடந்து காட்டவேண்டிய மேல்மட்ட 
நிர்வாகம், இம்மாதிரியான வேலைகளில் ஈடுபட்டு வருவது  மாற்றப்பட 
வேண்டும்.  துவக்கமாக,  மிக உயர் நிலையில் உள்ள அதிகாரிகள் IQ புக் 
செய்யும் விவரங்கள்,  முழுமையாக ஒளிவு-மறைவற்ற முறையில் 
தெரிவிக்கப்பட வேண்டும் என்ற் முறையினை அமுல் படுத்தப்பட  வேண்டும்..................................
(நன்றி:  SNEA வலைத்தளம்.)


No comments:

Post a Comment