மார்ச் மாதம் முதற்கொண்டு, CDR என்று மொத்தமாகவும், PMS, CRM, Clarity
என சில்லறையாகவும் அழைக்கப்படும் நமது Software அவ்வப்போது "படுத்துவிடுகிறது".ஏகப்பட்ட தடபுடலுடன், ஆயிரக்கணக்கான கோடிகள் கொட்டி நிறுவப்பட்ட இந்த Software-எதற்காக ஆரம்பித்த சில மாதங்களிலேயே
நொண்டியடிக்கிறது?
வாடிகையாளர் சேவை மைய்ங்களில் -இன்னும் குறிப்பாக, ஆன் லைன் கேஷ் கவுண்டர்(Counter)களில் இந்த Software-ஐ வைத்துக் கொண்டு, நமது
ஊழியர்கள் படும் பாடு சொல்லி மாளாது. இதை வைத்துக் கொண்டு
திருப்தியான சேவையை வாடிக்கையாளர்களுக்கு அளிப்பது எங்கனம்?
எப்போது கிடைக்கும்-எப்போது 'அவுட்' ஆகும் என யாராலும் "விளக்கம்" கூட அளிக்க முடியாத அவலமான சூழல் நிலவுவது நிர்வாகத்திற்கு
தெரியுமா? தெரியாதா?
நமது துறையினராலேயே Develop செய்யப்பட்ட 'DOTSOFT' - ஐ விட மேம்
பட்டது என்று சொல்லித்தானே தனியார் துறையில் இந்த Software-ஐ
வாங்கினார்கள்?
அனால் இந்த மென்பொருள், பழகுவதற்கு கடினமானது!
user freindly -அற்றது!
"அனைத்திற்கும் ஹைதராபாத்தையே" நம்பியிருக்கும் நிர்ப்பந்தத்தை
உண்டாக்கியது!
இந்த 'லட்சனத்தில்' நாளில் பாதி நேரம் கிடைகவில்லையென்றால்
என்ன செயவது?
இந்த "சேவை இழப்பிற்கு" யார் பொறுப்பேற்கப் போகின்றனர்?
நிர்வாகம் எதேனும் செய்யுமா? அல்லது எப்போதும் போல ......
No comments:
Post a Comment