.

Wednesday, March 16, 2011

MNP கூட்டம்

MNP கூட்டம்
மொபைல் நம்பர் போர்ட்டபிலிட்டி தொடர்பான அனைத்து தொழிற்சங்க கூட்டத்திற்கு மாநில நிர்வாகம் 14-3-2011 அன்று ஏற்பாடு செய்திருந்தது.நம்து இயக்க சார்பில் தோழர்கள் தமிழ்மணியும், பட்டாபியும் பங்கேற்று கருத்து தெரிவித்தனர். தமிழகத்தில் Port Out  ஆகி வேறு நிறுவனங்களுக்கு நம்மிடமிருந்து செல்லக்கூடியவர்களின் குறைகளை கண்டறிந்து உடன் சரி செய்து தக்கவைத்துக் கொள்வது, பிறநிறுவனங்களிலிருந்து Port In ஆகும் வாடிக்கையாளர்களை வரவேற்று தக்கவைப்பதற்குரிய வழிமுறைகளை உயர் அதிகாரிகளும் தொழிற்சங்க தலைவர்களும் கலந்துரையாடினர்.

தமிழ்நாட்டில் இவ்விகிதம் 1க்கு 2.56 என்ற விகிதத்தில் (100 பேர் வந்தால் 256 பேர் வெளியேறுதல்) உள்ளது கவலையுடன் பார்க்கப்பட்டது. திருச்சி காரைக்குடியில் இவ்விகிதம் 1:6.16, 1:6.73 என்றிருப்பதை சரி செய்திட கவனம் தேவை என்பதும் உணரப்பட்டது.

நமது தரப்பிலிருந்து கீழ்கண்ட அம்சங்களை சுட்டிகாட்டியுள்ளோம்.
போதுமான விளம்பரங்கள்
1. கட்டண விகிதம் குறித்த தொடர் அறிப்புகள்- Leaflets
2. Tower Coverage- Indoor Coverage
3.பிளான் மாற்றம் குறித்து எளிய நடைமுறைகள்- பிளான் தேர்ந்தெடுப்பிற்கு அறிவிப்புகள்.
4. MPCS/SSA  ஒருங்கிணைப்பு பலப்படுத்துதல்
5. Port in ஆகிறவர்களுக்கு incoming வருவதில்லை என்ற குறையை நீக்குதல்
Call drop குறை நீக்குதல்
6. Recharge Caution காலத்தே செய்தல்
7. CDR System உருவாக்கி வரும் தொல்லைகளை களைதல்
8 . Port in உருவாக்குதல்
வருவாய் பெருக்கும் நடவடிக்கைகளுக்கு ஊழியர்களின் முழுமையான ஒத்துழைப்புண்டு என அனைத்து சங்கங்களும் தெரிவித்தன.
(நன்றி : மாநிலச்சங்கம் )

No comments:

Post a Comment