.

Monday, May 30, 2011

தோழர் கே.ஆறுமுகம் பணி ஓய்வு பெறுகிறார்.

31/05/2011 அன்று ,மீசை ஆறுமுகம் என அனைவராலும் அன்போடும்,











உரிமையோடும் அழைக்கப்படும் நமது உளுந்தூர்பேட்டை தோழர் கே. ஆறுமுகம் அவர்கள் பணி ஓய்வு பெறுகிறார். ஆரம்ப காலம் தொட்டு நமது சங்கத்தில் துடிப்போடும், மிகுந்த ஈடுபாட்டோடும் செயலாற்றி வந்த தோழர் இவர்.


உளுந்தூர்பேட்டை பகுதியில் இவரது தொழிற் சங்கபணி குறிப்பிடத் தக்கது. தனக்கு அளிக்கப்பட்ட பொறுப்புகள் அனைத்தையும்
திறம்பட நிறைவேற்றுவதில் வல்லவர். இவரது பணி ஓய்வுக்காலம் வளமாகவும், சிறப்பாகவும் அமைய மாவட்டச் சங்கம் வாழ்த்துகிறது.


உளுந்தூர்பேட்டை தொலைபேசி நிலையத்தில், 31/05/2011 அன்று, மாலை 5.30 மணிக்கு, இவருக்கும், சென்ற மாதம் பணி நிறைவு பெற்ற தோழர் ஜெகனாதன் அவர்களுக்கும் பாராட்டுவிழா நடைபெற உள்ளது.



அருமைத்தோழர்கள் ரகு, ஜி.ஜெயராமன், பி. சுந்தரமூர்த்தி, ஆர்.செல்வம், பி. ராஜேந்திரன், என். அன்பழகன், ஆர்.ஸ்ரீதர் ஆகியோர் வாழ்த்துரை நல்க உள்ளனர்.



                                                                அனைவரும் வருக!!

No comments:

Post a Comment