1. 21/7/2011-அன்று நாம் நடத்தவிருக்கும் போராட்டத்தினை அடுத்து, 20/7/2011 அன்று காலை 1100 மணிக்கு, BSNLWA சங்கங்கள், PGM (SR) BSNL Headquarter அவர்களை சந்தித்தது. தோழர்கள் Chandeshwar Singh, S.P.Sharma, R.S.Yadav, Patwa, S.P.Sharma, R.S.Yadav, Com. Islam ahmad, K.K.Singh and Rajpal கலந்து கொண்டனர்.
2. தொழிற்சங்க பிரதிநிதிகள்
Drop wire, Modume Type II, and Telephone Instrument ஆகியவைகளை, இன்னமும் வழங்காதது குறித்து, தங்களது அதிருப்தியினை தெரிவித்துக் கொண்டனர். இத்தகைய முக்கியமான பொருட்கள் இல்லாமல் ஏதும் செய்யமுடியாது என்பதை வலியுறுத்தினர். 3. திரு. தயாநிதிமாறன் வீட்டிற்கு இணைப்புகள் கொடுத்து, BSNL-க்கு நட்டத்தினை ஏற்படுத்திய அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுத்துள் ளது என அறியவிரும்பினர்.
4. தொழிலாளர்களில் 50% சதமானவர்களுக்கு, பேச்சுவார்த்தை நடத்தும் அமைப்புகளில் எந்தவிதமான பங்கும் இல்லாததினால், அத்தகைய உறுப்பினர்களது குறைகளை தீர்த்துவைக்க இயலாத நிலை உள்ளது. இது பற்றி நிர்வாகம் எந்தவிதமான அக்கறையும் கொள்ள வில்லை.
5. தற்போதைக்கு VRS குறித்து ஏதும் தீர்மாணிக்கவில்லை என நிர்வாகம் சொல்லுகிறது. ஆனால் 63% வருமானம் சம்பளமாகவே செலவாகிறது என்பதையும் சொல்லிக்கொண்டே இருக்கிறது. வருமானத்தை பெருக்குவதற்கு எந்த முயற்சியும் இல்லை.
6. எனவே பிரச்சினைகளில் எவ்வித முன்னேற்றமும் இல்லாத காரணத்தால், திட்டமிட்டபடி 21/07/2011 அன்று நமது போராட்டம் இருக்கும் என நமது அனைத்திந்திய சங்கம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment