.

722636

Monday, August 15, 2011

ஹசாரேவுக்கு அனுமதி மறுப்பு!!

மத்திய அரசு, தில்லி போலீஸ் மூலம், "அன்னா ஹசாரேவுக்கு" வுக்கு
உண்ணா விரத போராட்டத்தை துவங்குவதற்கு அனுமதி மறுத்துள்ளது.  மக்கள் சாத்வீகமான வழியில் தங்களது கருத்துக்களை ஜன நாயக முறையில் எடுத்துச் சொல்லுவதற்கு, தனது 'அதிகாரத்தை' பயன்படுத்தி, தடை விதிப்பது சரியில்லை. 


எங்கும் விரவியிருக்கும் "ஊழல்",  எல்லா தரப்பு மக்களையும் கோபமுற வைத்துள்ளது.  "ஹசாரே"  தனக்கு தோன்றிய வழியில் எதிர்ப்பைத் தெரிவிக்கிறார். 


மத்திய அரசுக்கு தங்களை எதிர்ப்போர் மீதெல்லாம், திரும்ப, குற்றஞ்சாட்டுவதை வழக்கமாகக்  கொண்டுள்ளுது.   "பாபா ராம் தேவ்", காங்கிரஸின் 'நல்லென் னத்துக்குள்' இருந்தவரை அவரை உயர்வாகக் கொண்டாடினர்.  அவரே அரசாங்கத்தை எதிர்க்கும்போது மோசமான ஆளாக சித்தரிக்கப் பட்டார்.   வரி ஏய்ப்பு, கருப்புப் பணம் ஆகிய குற்றச்சாட்டுக்களை இவர் மீது கண்டுபிடித்தனர்.  பாபாவை தில்லியை ஏர்போர்ட்டில் வரவேற்கச் செல்லும் போது, இந்த குற்றச்சாட்டுக்களை சொல்லி யிருப்பது தானே? பாபா ராம்தேவ் 'ஊழலை எதிர்த்து போராடும் போது" தானா இந்த குற்றச்சாட்டுக்கள் எல்லாம் நினைவுக்கு வந்தது?


அதே பாணியை ஹசாரே மீதும், இப்போது ஏவுகின்றனர்.  இவர் ஊழல் செய்தவராம்.  நேற்றுவரை இந்த குற்றச்சாட்டு எங்கே போயிருந்தது?  இவர் மத்திய அரசை எதிர்க்காமலிருந்தால், ஹசாரே தொடர்ந்து 'காந்திய வாதியாகவே' இருந்திருப்பாரா? 


இம்மாதிரியாக காங்கிரஸ் நடந்து கொள்வது,அவர்களை சந்தேகப்பட வைக்கிறது.  தனது தவறுகளை திருத்திக் கொள்லாமல், தவறு செய்த வர்களை தண்டிக்காமல்,  குற்றம் சாட்டுபவர்களின் மீதே தாக்குதல் தொடுக்கின்றனர். இது குறித்து அரசுக்கு வெட்கமேதும் இல்லை!


"ஹசாரே" இந்தப் போராட்டத்தில் வெல்வாரா - மாட்டாரா என்பதல்ல பிரச்சினை.  அரசியல் போராட்டங்களை 'அரசியல்' மூலம் தான் வெல்ல முடியும்.  இதற்கு விவசாய, தொழிலாளி வர்க்கங்கள் தான் "அமைப்பு ரீதியாக" திரண்டு, பொது மக்களை திரட்டி போராட வேண்டும். ஒரு 'Mass' போராட்டம் தான் நிலைமையை மாற்றும்.  


ஆனால் இன்றைய சூழ் நிலையில் 'ஒரு பொது நலத்தொண்டர்'  ஆளும் அரசாங்கத்தின் ஊழலை எதிர்த்து குரல் கொடுக்கக் கூட அனுமதிக்க மாட்டேன் என்பது, 'எமர்ஜென்ஸியை' த்தான் நினைவுறுத்துகிறது.


No comments:

Post a Comment