.

Friday, August 26, 2011

MTNL-ல் VRS திட்டம் பற்றி ராஜ்ய சபாவில் கேள்வி....


விணா எண்:  1443:  பதிலளிக்கப்பட்ட நாள் : 12.08.2011:   SHRI S. THANGAVELU


ராஜ்ய சபாவில் கேட்கப்பட்ட கேள்வியும் பதிலும்:


விணா:


1. MTNL, தனது 1/3 பங்கு உழியர்களுக்கு (15000 பேர்), விருப்ப ஓய்வு அளிப்பது குறித்து ஏதேனும் திட்டத்தினை, அரசின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளதா?  அந்த திட்டத்திற்கு MTNL Board ஒப்புதல் அளித்துள்ளதா? இத்திட்டத்தினை நிறைவேற்றுவதற்காக அரசிடம் ரூ.3000 கோடி கேட்டுள்ளதா? இதில் அரசின் நிலைபாடு என்ன? 


பதில்:THE MINISTER OF STATE IN THE MINISTRY OF COMMUNICATIONS AND INFORMATION TECHNOLOGY ( SHRI MILIND DEORA)


MTNL, சில குறிப்பிட்ட கேடர்களுக்கு VRS  திட்டத்தினை அமுலாக்கு வதற்காக,  போர்டின் ஒப்புதலுடன், 100% பொருளா தார உதவியினை கோரியுள்ளது.


திட்ட விபரம்:  VRS திட்டத்தில் செல்வோருக்கு ஈட்டு தொகையாக, பணி நிறைவடைந்த ஒவ்வொரு ஆண்டிற்கும் அல்லது மீதி இருக்கும் ஒவ் வொரு ஆண்டிற்கும், 60 நாட்கள் வீதம் ஊதியம் ((Basic pay +DA)- இதில் எது குறைவோ அது.  ஆனால், இந்த ஈட்டுத் தொகை 60 மாத சம்பளத்திற்கு மிகக் கூடாது. 


19,000 தொழிலாளர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படும் இத்திட்டத்திற்கு, ரூ.3610 கோடி செலவாகும் என மதிப்பிடப் பட்டுள்ளது. 


இத்தொகையினை, வங்கிகள், வெளி மார்க்கட் மூலம் திரட்ட முடியுமா என ஆராயுமாறு MTNL, கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளது. 


Print Page

No comments:

Post a Comment