.

Monday, August 1, 2011

VRS ஒரு ஆய்வு

                                          விருப்ப ஓய்வு - ஒரு ஆய்வு

             (தமிழ் மாநில சங்கம் வெளியிட்டுள்ள கட்டுரையின் 
                                        தமிழாக்கம்-சுருக்கம் மட்டும்)
==========================================================


1. ஏன் நாம் விருப்ப ஓய்வினை எதிர்க்கிறோம்?


அ)  சித்தாந்தப்படி எந்த ஒரு தொழிற்சங்கமும் விருப்ப ஓய்வினை ஏற்றுக் கொள்ள இயலாது. ஏனெனில் 'விருப்ப ஓய்வு என்பது' , "ஆட்குறைப்பு திட்டதிற்கு " ஊழியர்களை "ஈர்க்க", நிறுவனங்கள் வைக்கும்,  தேன் தடவிய "பொறி" . வெளியேற்றப்படும் ஊழியர்களின் இடத்திற்கு ஆளெடுப்பு நடக்காது.  மாறாக, அந்த போஸ்ட்கள் அனைத்தும் ஒழிக்கப்பட்டுவிடும். ஊழியர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் உள்ள பதிவி உயர்வு திட்டங்கள் அனைத்தும் முடங்கும். இத்திட்டம் அமுலானால் சேவைகள் கடுமையாக பாதிக்கப்படும்.


ஆ) VRS  பெறாமல் பணியிலேயே தொடர்பவர்களுக்கு நிவாரணம் ஏதுமில்லை. பணி பளு கூடும். மாற்றல்கள் தவிர்க்க இயலாததாகிவிடும். 


இ) நிர்வாகம்-தொழிற்சங்கம் என்ற தொடர்பு அறுந்து, நிர்வாகமே நேரிடையாக தொழிலாளர்களை அணுகும் முறை இது.


ஈ) இத்திட்டம் குறித்து BSNL தனித்து முடிவெடுக்க முடியாது. தொலை தொடர்புத்துறையின் ஒப்புதல் பெறப்பட வேண்டும். இத்திட்டம் மூலம் செலவாகும் தொகை முழுவதும் DOT ஏற்றுக் கொள்ளாமல், செலவுகளை ஈடுகட்ட வங்கிகளிடமிருந்து கடன் பெறச்சொன்னால்,  தீராத கடன் வலையில் BSNL -ஐ சிக்க வைப்பதாகிவிடும்.  நிதி நிலைமை இன்னும் வீழ்ச்சியடையும்.


உ) ஊழியர்-தொலைபேசி விகிதாச்சாரம் கடுமையாக வீழ்ச்சியடையும்.  இது நிறுவன வளர்ச்சிக்கு உகந்ததாக இருக்காது. திறமை மிக்கவர்கள் வெளியேறும் போது, நிறுவனமும் சேவையும் கடுமையாகப் பாதிக்கப் படும். 


ஊ) இத்திட்டம் அறிவிக்கப்பட்டு விட்டால், ஊழியர்கள் வெளியேறுவதை தொழிற்சங்கங்களாலும் தடுக்க இயலாது.


எ)  பணிகள் யாவும் தனியாருக்கு காண்டிராக் முறையில் விடப்படும். 
இத்திட்டம் பங்கு விற்பனைகே வழி வகுக்கும்.




2. ஏன் தனி நபர்கள் விருப்ப ஓய்வினை விரும்புகிறார்கள்?


அ.  BSNL-ண் எதிர்காலம் குறித்து பெருத்த சந்தேகம் அடைந்துள்ளனர்.
ஆ.  VRS-பெற்றுவிட்டால், உத்திரவாதமான DOT பென்ஷன் கிடைக்கும்.
இ.  உடணடியாக கிடைக்கும் கணிசமான பணம்-பணத்தேவைகளை   
       தீர்த்துவைக்கும்.
ஈ.  தற்போது செய்யும் பணியில் திருப்தி இல்லாதது.
உ.  உடற் கோளாறுகள்.
ஊ.  இந்த வேலையை விட்டு விட்டு, கிடைக்கும் பணத்தில் ஏதேனும் 
        தொழில்  தொடங்கலாம் அல்லது நல்ல வேலை தேடிக்கொள்ளலாம்.
எ.   பெண்கள் குடுப்பப் பொறுப்புகள் காரணமா இத்திட்டத்தினை 
        விரும்பலாம்.


3. நிறுவனத்தின் நோக்கம் என்ன?


"தேவையற்ற, திறமையில்லாத" ஆட்களையும், உபரி ஆட்களையும் வெளியேற்றியாக வேண்டும்.  திறமை மிக்க ஆட்களை உட்கொணர வேண்டும். சம்பளத்திற்காக ஆகும் செலவுகளை குறைக்கலாம். தனியார் நிறுவனங்களுடன் போட்டியிடலாம்.


4. நிர்வாக VRS திட்டத்தினை முன் வைக்கும் போது,  எம்மாதிரியாக எதிர் கோரிக்கைகள் வைத்தால், இத்திட்டத்தினை "கவர்ச்சிகரமற்றதாக" மாற்றலாம் என்பதற்கான திட்டங்கள் தொழிற்சங்கத்தினிடம் உள்ளதா?


அ.  78.2 புள்ளிகள் D.A merger with full arrears


ஆ.  வாரத்தில் ஐந்து நாட்கள் வேலை.


இ.  VRS மூலம் இழந்த பதவிகளை, VRS பெற்ற ஊழியர்களின் வாரிசுகளுக்கு, தகுதி மற்றும்  திறமையின் அடிப்படையில் வழங்கு.


ஈ.  ஐந்து வருடத்திற்கு ஒருமுறை சம்பள மாற்றம்.

(மொழியாக்கம் தொடர்பான எந்த சந்தேகம் எழுந்தாலும் இதன் மூல கட்டுரையில் சொல்லப்பட்டுள்ளதே சரி . 

No comments:

Post a Comment