NFTE தலைவர்கள் 12/09/ 2011 அன்று இயக்குநர் ((HR)அவர்களை சந்தித்தனர்.
LTC, Medical Allowance without vouchers and encashment of leave குறித்து ஒருநீண்ட விவாதம் நடைபெற்றது.
நிர்வாகம் தற்போதைய நிதி நெருக்கடி குறித்தும், இத்தகைய நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழ்னிலை குறித்தும் விவரித்த்து.
NFTE தலைமையிலான BSNLWA வினை நிர்வாகம் கலந்தாலோசிக்காமை குறித்தும், இந்த கடுமையான முடிவுகளை எடுப்பதற்கான நியாயங்கள் ஏதும் இல்லை என வலியுறுத்தினோம்.
வவுச்சர்கள் மூலமாக Medical Reimbursement பெறும் திட்டம், ரசீது இன்றி பெறும் திட்ட்த்தினை விட கூடுதல் செலவு பிடிக்கும் என விளக்கினோம்.
விடுப்பினை காசாக்கும் திட்ட்த்தினில், LIC தான் பொறுப்பேற்க வேண்டுமே தவிர, BSNL இல்லை என தெரிவித்தோம்
பல மாநிலங்களில் பொது மேலாளர் பதவிகள் காலியாக இருப்பதை சுட்டிக் காட்டினோம். நிலமை இவ்வாறு இருக்கையில் வளர்ச்சி எங்கனம் சாத்தியமாகும் எனவும், சென்ஸிட்டிவான பதவிகளில் குறிப்பிட்ட காலத்திற்கும் மேலாக சில உயரதிகாரிகள் மாற்றல் ஏதுமின்றி பணியாற்றுவது எப்படி எனவும் வினவினோம்.
சிக்கன நடவைடிக்கை எல்லாம் ஊழியர்தலையில் மட்டும்தானா? உயர் அதிகாரி களின் சொகுசு செலவுகளில் கட்டுப்பாடு இல்லையா என வினவினோம். அவர்கள், சொகுசு வகுப்புகளில் மேற்கொள்ளும் விமானப் பயணங்கள், அவர்களுக்கு ஊதாரித்தனமாக வழங்கப்படும் பிளாக் பெர்ரி மொபைல் போன்கள் மற்றும் ஆடம்பரமான தங்கும் வசதிகள் குறித்து கேள்வி எழுப்பினோம்.
இப்பிரச்சினைகளில், “உண்மையான புள்ளி விபரங்களோடு தொழிற்சங்கங்களை கலந்தாலோசிக்க வேண்டும்” என்ற கோரிக்கை விடுத்தோம்.
நிர்வாகம், புதிய மருத்துவ திட்ட்த்தின் கீழ் செய்யப்படும் செலவுகள் தீவீரமாக கண்காணிக்கப்படும் எனவும், LIC யிடம் உள்ள பணத்திற்கு வட்டி கிடைக்கிறது (!) எனவும், சிக்கன நடவடிக்கை குறித்து அனைத்து அதிகார்களுக்கும் அறிவுறுத்தப் பட்டுள்ளதாகவும், நிறுவனத்த்தை முன்னெடுத்து செல்வதற்கு எல்லா முயற்சிகளும் மேற்கொள்ளப் படுகின்றன எனவும் பதலிளித்த்து.
முன்னதாக NFTEபிரதிநிதிகள் கூட PGM (SR) சந்தித்து, ஊழியர்களுக்கு எரிச்சலூட்டும் பிரச்சினைகளை, அவரது கவனத்திற்கு கொண்டு சென்றோம்.
Print Page
No comments:
Post a Comment