.

Tuesday, October 18, 2011

மத்திய செயற்குழு முடிவுகள்


1.   கோவையில் நடைபெற்ற CWC, விருப்ப ஓய்வு, LTC  /  மருத்துவ படிகள் நிறுத்தம்,  நிர்வாகத்தின் தொழிலாளர் விரோத கொள்கைகள் ஆகியவற்றை தடுத்து நிறுத்த, ஒன்றுபட்ட போராட்டம் அவசியமானது என கருதுகிறது.


2.   ஆனால், கடந்தகால இணைந்த போராட்டங்களில், BSNLEU சங்கத்தின் போக்கு, மற்றும் அச்சங்கத்துடன் நமது  கசப்பான அனுபவங்கள் ஆகியவற்றின் காரணமாக, பல மாநிலச் செயலர்களும், CWC உறுப்பினர்களும் JAC உடன்  மீண்டும் இணைவதற்கு எதிரான கருத்துக்களைக்  கொண்டிருந்தனர். ஆயினும் இதுகுறித்து இறுதி முடிவெடுக்க CWC-  க்கு அதிகாரமளித்தனர்.

3.   CWC, இந்த கடுமையான பிரச்சினைகளை, ஒரு  நாள் அடையாள வேலை நிறுத்தம் தீர்த்து விடாது எனக் கருதுகிறது.

4.   BSNL-ல் தொழிற்சங்க,  அங்கீகார விதிகள், தற்போதுள்ள நிலையிலிருந்து, மாற்றப்பட வேண்டும்.

5.   ஐந்து சதத்திற்கும் மேலாக வாக்குகள் பெற்ற அனைத்து சங்கங்களுக்கும் அதிகார பூர்வமற்ற (informal meetings) பேச்சு வார்த்தை நடத்துவதற்கு உரிமை அளிக்கப்பட வேண்டும் எனவும், 15% சதவிகித வாக்குகளுக்கு மேல் பெற்ற அனைத்து தொழிற்சங்கங்களும், முழுமையான உரிமைகளுடன், அங்கீகரிக்கப் படவேண்டும்.

6.   ஐம்பது சதவிகிதமான IDA, சம்பளத்துடன் இணைக்கப்பட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியது.

7.   புதிய தொலைதொடர்பு கொள்கை, தனியாருக்கு சாதகமாகவும், பொதுதுறை நிறுவனங்களுக்கு பாதகமாகவும் இருப்பதாக உணருகிறது. பொதுத்துறையினை வலுப்படுத்துவதற்கான திட்டங்கள் ஏதுமில்லை.
8.   அனைத்து கிராமப்புரங்களும், பிராட்பேண்ட் வசதியில் இணைக்கப்படவேண்டும் என விரும்பும் மத்திய அரசு, மொபைல் சர்வீஸைப் பற்றி  மட்டுமே அதிகம் பேசுகிறது. பிராட்பேண்ட் இணைப்பிற்கு முதுகெலும்பாக இருக்கும் தரைவழி இணைப்பினைப்பினைப் பற்றி அதிகம் பேசவே இல்லை.

9.  BSNL-ல் அதிகரித்துவரும் ஊழல் குறித்து CWC, கவலை கொள்கிறது. மாவட்ட, மாநில அளவில் நடைபெறும் ஊழல் குறித்து, குறிப்பான தகவல்களை, மத்திய சங்கத்திற்கு தெரிவிக்குமாறு, அனைத்து, கிளை,மாவட்ட, மாநில சங்கங்களை கேட்டுக் கொள்கிறது.
இத்தகவல்கள், இம்மாதிரியான பிரச்சனைகளை, அரசின் கவணத்திற்கு கொண்டுசெல்லவதற்கு, மத்திய சங்கத்திற்கு உதவியாக இருக்கும். 


(முழுமையான விபரங்கள் பின்னர்)

No comments:

Post a Comment