.

Saturday, December 17, 2011

புதிய தலைமுறை தொலைக்காட்சி


புதிய தலைமுறை தொலைக்காட்சி நிறுவனத்திற்கு NFTE தொழிற்சங்கம் ‘ரெட் சல்யூட்


இன்று (17/12/20111) அன்று இரவு 2130 மணிக்கு, ‘ரௌத்திரம் பழகு என்ற தலைப்பில் ஒரு அற்புதமான நிகழ்ச்சியினை, "புதிய தலை முறை தொலைக்காட்சி" ஒளிபரப்பியது.

பி.எஸ்.என்.எல் ஊழியர்களும், ஓய்வு பெற்ற பொது மேலாளர்களும், தோழர் மதிவானன் அவர்களும், எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் அவர்களும், மற்றும் சிலரும்  பேட்டி எடுக்கப்பட்டனர். நிகழ்ச்சி நிலையத்தாரால் தொகுத்து வழங்கப்பட்டது!



இந்த நிகழ்ச்சி, BSNL  நிறுவனத்தின் தற்போதைய நிலைபற்றியும், அரசின் ஓர வஞ்சனையான கொள்கையால், நஷ்டம் ஏற்படுத்தப் பட்டு, ஒரு நொடித்துப் போன கம்பெனியாக மாறியுள்ளதை ஆழமாக விவாதித்தது. நிகழ்ச்சித் தயாரிப்பாளர் மிகவும் விபரமானவர். நிர்வாகத்தில் இருப்போர், ஓய்வு பெற்ற உயர்நிலை அதிகாரிகள், தொழிற் சங்கவாதிகள், சாதாரண ஊழியர்கள் என அனைவரையும் பாரபட்சமின்றி பேட்டி எடுத்தார்.

“அனைவரும் ஒரு மித்த குரலாக உணர்த்திய ஒரே அம்சம், “‘BSNL’  திட்ட மிட்டு சீர்குலைக்கப் படுகிறது! இந்த நிறுவனத்திற்கு ஏற்பட்ட நட்டம் யாவும், மத்திய அரசு, தனியார் கம்பெனிகளுக்கு சாதகமாக செயல்பட வேண்டும் என்ற கெட்ட நோக்கத்துடன், செயல் பட்டதன் காரணமாகத் தான் நிகழ்ந்தது  என்பது தான்.
இனி இந்த நிகழ்ச்சியில் பேட்டி காணப்பட்ட அனைவரின் உரைகளின் திரட்டு, சுருக்க மாக தரப்பட்டுள்ளது.

நிகழ்ச்கியில் பேசியவர்களின் உரைத் திரட்டு!

1.      1995-ல் இந்தியாவில் ‘செல் சேவை தனியாரால் துவங்கப்பட்டது. BSNL எவ்வளவோ கேட்டும், திரு. சாம் பிட்ரோடா, BSNL-க்கு  அந்த சேவை வழங்கும் உரிமையை வழங்க மறுத்து விட்டார். அவர் சொன்ன காரணம் விந்தையானது! ஒரு 500 பேர்கள் தான் இந்தியாவில் ‘செல் சேவையினை பயன்படுத்துவார்கள்! அதனை தனியார் செய்யட்டும். நீங்கள் போய் கிராமப்புரங்களில் சேவை செய்யுங்கள் என்றார்! . இவர் தான் தொலை தொடர்பு துறையின் நிபுனராம்!
.
2.      2002 வரை, தனியார் நிறுவனங்கள், இன் கமிங் கால்களுக்குக் கூட,  நிமிஷத்திற்கு 17 ரூபாய் வசூலித்து, கொள்ளையடித்தன.

3.      2002-ல் தான் பி.எஸ்.என்.எல் –க்கு ‘செல் சேவை வழங்க அனுமதிக்கப்பட்டது. இந்த பொதுத்துறை வந்தபின் தான்,இன் கமிங் கால்கள் இலவசமாக்கப்பட்டன. ‘அவுட் கோயிங் காலகள் நிமிஷத்திற்கு ஒரு ரூபாய் என இறக்கப் பட்டன.

4.      நான்கு லட்சம் ஊழியர்கள், அரசின் நேரடி இலாக்காவாக இருந்தபோது கட்டிய ஜி.பி.எஃப் பணத்தை அள்ளிக் கொண்டது மத்திய அரசு. இனி நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள் என BSNL -இடம்  அநியாயமாகச் சொல்லிவிட்டது

5.      நமக்கு தேவையே இல்லாத இடத்தில் கூட, 3ஜி ஸ்பெக்ரத்திற்கான லைசென்ஸ் கட்டணத்தை, (இந்தியா முழுவதற்குகாக-காஷ்மீர், மணிப்பூர் உட்பட – இங்கே டிமாண்டே இல்லை), நம்மிடமிருந்து ஏறக்குறைய பிடுங்கிக் கொண்ட, மத்திய அரசு, தனியார் நிறுவனங்களுக்கு அவர்கள் கேட்கும் மாநிலங்களுக்கு மட்டும் லைசென்ஸ் கொடுத்து  கட்டணத்தை பெற்றுக் கொண்டது. அதாவது எங்கு இலாபம் கிடைக்குமோ அங்கே மட்டும்!  இது போன்ற அடாவடியினால் தான், நாம் வைத்திருந்த 40,000 கோடி ரூபாய்களையும் மத்திய அரசிடம்,  BSNL பறி கொடுக்க வேண்டி யிருந்தது.

6.      தற்போது நமது நிறுவனத்திற்கு ஏற்பட்டுள்ள நட்டம் யாவும், அரசால் ‘திட்டமிட்டு ஏற்படுத்தப் பட்டவையே!

7.      தனது சொந்த நிறுவனத்தையே (மத்திய அரசு), அழுத்தி சாகடிக்கும் விந்தையினை எங்கேனும் கேள்விப்பட்டதுண்டா?

8.      தனியார் நிறுவனங்கள் பி.எஸ்.என்.எல்-லின் சொத்துக்களை (54,000 கோடிக்கு மேல்) கொள்ளையடிக்க துடியாய் துடிக்கின்றன. இந்த நிறுவனத்திற்கு சொந்தக்காரரான  மத்திய அரசாங்கம், இந்த தனியாருடன் கூட்டு சதியில் ஈடுபட்டு,  பி.எஸ்.என்.எல்-ஐ  புதைகுழிக்கு அனுப்ப, அனைத்து வழிகளிலும் முயலுகிறது.  2 ஊழல்கள் யாவும் இங்கேதான் துவங்கியது.

9.      கடந்த சில ஆண்டுகளாகவே, பி.எஸ்.என்.எல்-லின் அனைத்து விரிவாக்க நடவடிக்கைகளுக்கும் தடைபோடு,  திட்டமிட்டு மத்திய அரசு குழிபறிக்கிறது.  ஒருவிரிவாக்கம் இல்லை! ஒரு விளம்பரம் இல்லை! எல்லாவற்றிலும் மத்திய அரசு தலையிட்டு குந்தகம் விளைவிக்கிறது.

10.   அரசின் இந்த போக்கினால், அனைத்து ஊழியர்களும் வெறுப்பும், வேதனையும்,ஆவேசமும், கோபமும் கொண்டுள்ளனர்.

11.  ஒரு லட்சம் பேரை வீட்டிற்கு அனுப்பும் முயற்சி முடிந்த உடனேயே, நிறுவனத்தை தனியாருக்கு விற்றுவிடுவார்கள். சொல்லப் போனால், ஊழியர்களை வீட்டிற்கு அனுப்பும் திட்டமே இந்தியா வெங்கும் பரந்து விரிந்திருக்கும் பி.எஸ்.என்.எல்-ஐ  தனியாருக்கு தாரை வார்க்கும் முயற்சியின் ஒரு பகுதிதான்.

12.   காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த நேருவே ‘கலப்புப் பொருளாதாரத்தைத்’ தான் விரும்பினாரே ஒழிய, இந்த அரசாங்கத்தைப் போல, எல்லாவற்றையும் தனியாருக்கே கொடுத்துவிட்டு, அனைத்து பொதுத்துறை நிறுவங்களையும் ‘அடிமாட்டு விலைக்கு தனியாருக்கு விற்பதை அல்ல.

13.  மிகுந்த அனுபவமும்,தொழில் நுட்பமும், ஆள்பலமும் கொண்ட இந்த நிறுவனத்தை விற்றுவிட்டு, தொலை தொடர்பு முறை முழுவதும் தனியார் வசம் அளித்துவிட அரசு பாடாய்ப் படுகிறது.

14.   கிராமப்புற சேவை அளிப்பதால், பி.எஸ.என்.எல்-க்கு மிகுந்த நட்டம் ஏற்படுகிறது. அதற்காக மத்திய அரசு கொடுத்து வந்த மானியத்தை நிறுத்திவிட்டது! ஏன்? அப்பொழுதானே மிக எளிதாக நிறுவனத்தை, சீக்கிரமாக மரணமடைய வைக்கலாம்?

15.  ஒரு ரிடயர் ஆன பொது மேலாளர் சொன்னார்: பி.எஸ்.என்.எல்-ஐ ஒழித்து விட்டால், தனியார் நிறுவனங்கள் பழையபடி கட்டணங்களை கண்டபடி உயர்த்தி,  கொள்ளை யடிக்க சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டுள்ளன. மக்கள் இதனை உணர்ந்து கொள்ள வேண்டும்.

16.  இந்த நிறுவனத்திடம் மிக அற்புதமான எளிமையான திட்டங்கள் உள்ளன. ஆனால் மக்களுக்கு தெரியவைத்தால் தானே, பயன்படுத்துவார்கள்?. ஆனால் அதன் விளம்பரங்கள் கூட, வந்துவிடாமல் பார்த்துக் கொள்கிறது அரசு.

17.  அனைத்து தனியார் நிறுவனங்களும் தனது சேவையில் ஐந்து சதவிகிதமாவது, கிராமப் புறங்களில் செய்ய வேண்டும். இல்லையெனில் அபராதம் உண்டு (அற்பமான தொகை). தனியார்கள் சுலபமாக அபராதத்தை கட்டிவிட்டு ஓடிவிடுகின்றன. ஏனெனில் இது, கிராமப்புறத்தில் சேவையளிப்பதை விட இலாபமானது. ஆனால்  பி.எஸ்.என்.எல் இந்த சேவையை, நட்டமேற்பட்டாலும் கொடுத்தே ஆகவேண்டும். என்ன கொடுமையடா இது?

18.  ஆரம்பத்திலிருந்தே, இந்தியாவின்  வளர்ச்சிக்கு, தொலை தொடர்புத துறையினர், மிகப் பெரிய பங்களித்துள்ளனர். ஆனால் இந்த நிறுவனத்தை எந்தெந்த வழியில் எல்லாம் முடியுமோ அந்த வழிகளில் எல்லாம் முடமாக்க முயற்சி செய்கிறது அரசு!

19.   அக்கிரமமாக, மன சாட்சியே இல்லாமல், ஊழியர்களின் மருத்துவ அலவன்ஸ், LTC  போன்ற சலுகைகளைக்கூட வெட்டிவிட்டது அரசு.

20.  BSNL  நட்டத்தில் இயங்குகிறது என்பது ஒரு சாக்கு! உண்மை நோக்கம், இக்காரத்தைச் சொல்லி, பி.எஸ.என்.எல் நிறுவனத்தை ஒழித்துக் கட்டுவதே!

21.   இந்திய அரசின் தொலைதொடர்பு கொள்கைகள் யாவும் பன்னாட்டு பகாசுர கம்பணிகளின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு வகுக்கப்படுகின்றன.  BSNL?  அது எக்கேடு கெட்டால் என்ன?

22.  உடலுக்கு ஊறு விளைவிக்கும் வகையில் (தலையும், இரத்தமும் சூடாவது, B.P அதிகரிப்பது போன்றவை) தனியார் நிறுவனங்கள், டவர்களின் சக்தியை (WATTAGE)  மிகவும் கூட்டி வைக்கின்றன. ஆனால் BSNL அவ்விதம் செய்வதில்லை! இதை மக்களுக்கு புரியவைப்பது எங்கனம்?

23.  தனியார் நிறுவங்களின் விதிமீறல்கள் எதையும் கண்டு கொள்ளாமல்,  மிகவும் தாராளமாக நடந்து கொள்ளும் TRAI  (தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆனையம்), பி.எஸ்.என்.எல்-லைக் கண்டதும் கத்தியைத் தூக்குகிறது!

      இறுதியாக நிகழ்ச்சி தொகுப்பாளர் ஒன்று சொன்னார்:

“பொதுத்துறைகளின் வீழ்ச்சி என்பது – நமது நாட்டின் வீழ்ச்சி!
 நாம் என்ன செய்யப் போகிறோம்?

   கேட்கும்போது கண்களில் இரத்தம் வடிகிறது! 
   ஆவேசம் பொங்குகிறது!  
   நிகழ்ச்சி தொகுப்பாளர் கேட்டுவிட்டார். 
   பதில் எங்கே?

No comments:

Post a Comment