29/12/2011 - வியாழன் :கடலூருக்கும் பாண்டிச்சேரிக்கும் இடையே புயல் கரையைக் கடக்கும் முன்னறிவிப்பு
வந்துவிட்டது. இரவு, சுமார் பத்து மணியளவில் மழைத்தூரல் ஆரம்பமாகிவிட்டது. நமது பி.எஸ்.என்.எல்
தவிர, அனத்து
தனியார் மொபைல் டவர்களும் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டன; மின்சார
வாரியம் மின்சாரத்தினை நிறுத்திவிட்டது.
வெள்ளி காலை
30/12/2011. வரலாறு காணாத வகையில் மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் கடலூர்
மாவட்டத்தை சூரையாடியது ‘தானே’ என பெயரிடப்பட்ட புயல். புயலின் கோரத்தாண்டவத்தில் பத்து
லட்சத்திற்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன. ஆயிரக்கணக்கான குடிசைவீடுகள்
அழிந்தன. நூற்றுக் கணக்கான கிலோமீட்டர்
தூர மின்வொயர்கள் அறுந்து வீழ்ந்தன .
வர்த்தக நிறுவனங்களுடைய
அலங்கார பேனர்கள், தொலைபேசி நிலையத்தினுடைய ஏ.ஸி அவுட்டோர் யூனிட்டுகள், செல் டவர்கள்,
முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மின்சார கம்பங்கள், 12500 க்கும் மேற்பட்ட மின்சார
டிரான்ஸ்ஃபார்மர்கள் பிடுங்கி
எறியப்பட்டன.
அடியோடு சாய்ந்த
மரங்கள், வீடுகளின் மீதும் கட்டிடங்கள் மீதும் விழுந்ததால் கட்டிடங்கள் உடைந்தன!கண்ணாடிகள் நொறுங்கின! புயலினால்
பாதிக்கப் படாத வீடுகளே இல்லை என்ற அளவில் சேதம்.
நமது மாவட்டத்தில்
மொத்தம் உள்ள 426 பி.டி.எஸ் டவர்களின் 254 செலலிழந்தன! நமது கடலூர்
மைக்ரோவேவ் ஸ்டேஷனில் இருந்த 100 மீட்டர் உயர கோபுரம் அடியோடு சாய்ந்தது!
31/12/2011 - சனி காலை:
நமது அதிகாரிகள்
மற்றும் ஊழியர்களின் முயற்சியால், பாதிக்கப்பட்ட 254 செல் டவர்களில், 136 உடனடியாக
சரிசெய்யப்பட்டன. மக்கள் பி.எஸ்.என்.எல் செல் சேவையினைப் பெற்றனர். இது அனைத்து தரப்பு மக்களாலும், பத்திரிக்கைகளாலும் பாராட்டப்பெற்றது! எந்த தடையும் இன்றி, அனைத்து தொலைபேசி
நிலையங்களும் ‘ஜெனரேட்டர்’ முலம்
இயக்கப்பட்டன.
01/01/2012. புது வருடம் என்றாலும், நமது தோழர்கள் விடுமுறை
என்பதையும் பொருட்படுத்தாது பணிக்கு வந்து நிலைமையை சீரமைக்க முயன்றனர். செயல்பாடிழந்த மீதமிருந்த செல் டவர்களும் முழுமையாக உபயோகத்திற்கு உட்படுத்தப்பட்டன. கடலூர் மாவட்ட அட்சித்தலைவருடன், பேசி, தடையில்லாத டீசல் பெறப்பட்டது.
மற்ற தொண்டு
நிறுவனங்களுடன் இணைந்து, புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, நமது தோழர்கள் உணவு
மற்றும் உதவிகள் செய்தது பாரட்டத்தக்கது.
இன்னும் நமக்கு
தேவைப்படும் டிராப் வொயர் மற்றும் உபகரணங்கள் கிடைத்தால், லேண்ட் லைன் சேவைகள் முழுமையாக சரிசெய்யப்படும்.
தோழர்கள் அனைவரும் அனைத்து
பழுதுகளையும், தாமதமின்றி உடனடியாக சரிசெய்வதில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்
கொள்ளுமாறு, மாவட்டச் சங்கம் கேட்டுக் கொள்கிறது.
No comments:
Post a Comment