.

Tuesday, March 6, 2012

இன்னும் எத்தனை காலம்தான்......

அங்கீகரிக்கப் பட்ட சங்கம் சொல்கிறது........ ...


தொலை தொடர்பு இலாக்கா, NE12 சம்பள விகிதத்திற்கு ஒப்புதல் அளிக்கும் பொழுது,  NEPP புரோமோஷன் பாலிஸியிலும் தக்க மாறுதல்களை மேற் கொள்ளுமாறு சொல்லிவிட்டதாம். 


NEPP புரோமோஷன் பாலிஸி, போர்ட் ஆஃப் டைரக்டர்களின் ஒப்புதலோடு நிறைவேற்றப்பட்டதால், அதில் ஏற்படுத்தப்படும் மாறுதல்களுக்கும் போர்ட் ஆஃப் டைரக்டர்களின் ஒப்புதல் வேண்டுமாம். எனவே NE12 சம்பளம் பெறுவது இன்னும் தாமதமாகுமாம்.  எனினும் விரைவாக(!) உத்தரவைப் பெறுவதற்கு முயற்சி எடுக்குமாம்.


ஆயிரமாயிரம் சீனியர்கள் மாதந்தோறும் பணி ஓய்வு பெற்றுக் கொண்டிருக்கிறார்கள்; NE12 - வினால் கிடைக்கும் அற்ப பலனைக் கூட இழந்து கொண்டு! அதனால் என்ன? BSNLEU உத்தரவினைப் விரைந்து பெறுவதற்கு முயற்சிக்கும் எனச் சொல்லிவிட்டதே! 


காத்திருங்கள்.. காத்திருங்கள்.  இன்னமும் காத்திருங்கள். ஒருவேளை இது  கூட சாதனை லிஸ்டில் சேருகிறதோ என்னவோ?

No comments:

Post a Comment