.

Thursday, September 13, 2012

இரங்கல்





முதிர்ந்த தொழிற்சங்கவாதியும், கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினறுமான தோழர் ஏ.ம். கோபு அவர்கள், இன்று (13/09/12)  இயற்கை எய்தினார்.

சமூகப் போராட்டங்களில் ஒரு ராணுவ வீரரைப் போலச் செயல்பட்டவர் ஏ.எம்.கோபு.

தோழர் தொழிற்சங்கங்களின் உரிமைகளுக்காகவும், சமூக மாற்றங்
களுக்காகவும் போராடியவர் .


சுதந்திரப் போராட்ட வீரரும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தொழிற்சங்க இயக்க மூத்த தலைவருமான ஏ.எம்.கோபுவின் 82-வது பிறந்த நாள் மற்றும் 72-வது ஆண்டு பொதுவாழ்வைப் பாராட்டி, கடந்த பிப்ரவரியில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் விழா நடைபெற்ற பொழுது, அவருக்கு ரூ. 40 லட்சம் நிதி வழங்கப்பட்டது.  ஆனால் கோபு அவருடைய சொந்தப் பணமான ரூ.10 லட்சத்தையும் சேர்த்து முழுத் தொகையையும் கட்சிக்கே கொடுத்துவிட்டார்.

இயக்கம் எடுக்கும் முடிவுகளுக்குக் கட்டுப்பட்டுடவராக, அதனை முழுமையாகக் கடைப்பிடித்த போராளி கோபு.

ஏ.எம்.கோபுவின் உடல், சிந்தாதரிப்பேட்டை ஏஐடியுசி அலுவலகத்தில்  அஞ்சலி செலுத்த வைக்கப்பட்ட பின், மருத்துவ மாணவர்களின் ஆய்வுப் பயிற்சிக்காக அரசு மருத்துவமனையிடம் ஒப்படைக்கப்படுவதாக கட்சியின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

தோழரது மறைவிற்கு, NFTE  மாவட்ட சங்கம், கொடி தாழ்த்தி, தனது
இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது!

No comments:

Post a Comment